Search This Blog

Monday, 31 October 2016

திருச்செந்தூர் - இரண்டாவதுபடை வீடு ::: Repost


  • முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார்.
  • திருச்செந்தூருக்கு செந்தி மாநகர், திருச்சீரலைவாய் என்ற பெயர்களும் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றும் அழைக்கப்படுகிறது.திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.

தல வரலாறு :
  • தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட முருகப்பெருமான் வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், அவனுக்கு துணையாக நின்ற கிரவுஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்குகிறார். வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்புகிறார். ஆனால், அசரன் சூரபத்மனோ அதை நிராகரிக்கிறான். மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
  • இதையடுத்து, முருகப்பெருமான் அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். மரத்தின் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
  • முன்னதாக,மாமரமாக உரு மாறிகாட்சியளித்த சூரபத்மனை கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
  • இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றியதால், இன்றைய திருச்செந்தூரானது ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில், அந்த பெயரே மருவி செந்தூர் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் ஒரு பொருள் உண்டு.

திருச்செந்தூர் புகழ்பாடும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம். "சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி.

2 மூலவர் :


  • எல்லா கோவில்களிலும் ஒரே ஒரு மூலவர்தான் இருப்பார். ஆனால், திருச்செந்தூரில் மட்டும் இரு மூலவர்கள் உண்டு. முருகப்பெருமானே பாலசுப்பிரமணியசுவாமி என்றும், சண்முகர் என்று இரு மூலவர்களாக இங்கு அருள்பாலிக்கிறார்.
  • பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள் பாலிக்கின்றனர். பாலசுப்பிரமணியசுவாமி தனியாகவும், சண்முகர் வள்ளி-தெய்வானையுடனும் எழுந்தருளியுள்ளனர்.

சிறப்புமிக்க நாழிக் கிணறு :
  • சூரசம்ஹாரம் முடித்த பிறகு, முருகப் பெருமான் சிவபூஜை புரிந்த இடமும் திருச்செந்தூரேயாகும். சிவலிங்க அபிஷேகத்திற்காக தன்னுடைய கை வேலினால் முருகப் பெருமான் "ஸ்கந்த புஷ்கரிணி" தீர்த்தத்தை உண்டாக்கினார். இத்தீர்த்தம் இன்றளவும் திருச்செந்தூரில் காணப்படுகிறது. இதை நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள்.
  • ஒரு சதுர அடி அளவே உள்ள இந்த கிணறு கடற்கரையில் அமைந்துள்ள போதிலும் இத்தீர்த்தம் உப்புச் சுவையின்றி தூய நீராகவும், நோய்களைத் தீர்க்கும் குணமுடையதாகவும் இருப்பது அதிசயமாகும்.
வீரவாகு தேவருக்கே முதல் மரியாதை :
  • திருச்செந்தூருக்கு வீரவாகு தேவர் காவல் தெய்வமாக இருப்பதால் இத்தலத்திற்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு வீரவாகு தேவருக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது. வீரவாகு தேவரின் வலது பக்கத்தில் கரிய மாணிக்கப் பிள்ளையாருக்கும், பார்வதி அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன.
  • கர்ப்பக் கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவரான முருகப் பெருமான் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு வெள்ளை ஆடையே அணிவிக்கப்படுகிறது. செம்பட்டு அணிவிப்பதும் உண்டு. இவர் சிவபூஜை செய்யும் வகையில் இவருடைய நான்கு திருக்கரங்களுள் இரண்டு அபய வரத ஹஸ்தங்களையும், மற்றொன்று புஷ்பமேந்தி அர்ச்சனை செய்யும் கரமாகவும், இன்னொரு கரம் ருத்ராட்ச மாலையைத் தாங்கிக் கொண்டும் அமைந்துள்ளன. இவர் தவக்கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் அவருடன் இல்லை.
  • மூலவருக்குப் பின்னால் காணப்படும் அறை "பாம்பறை" என்று அழைக்கப்படுகிறது. இது சுரங்க அமைப்பினை உடைய அறையாகும். இந்த அறையின் மேற்கு பாகத்தில் முருகப்பெருமானால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் இருக்கின்றன.
இதுதான் விபூதிப் பிரசாதம் :  
  • திருச்செந்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது விபூதி பிரசாதம்தான்.  பன்னீர் இலைகளில் விபூதியை வைத்து மடித்து கொடுப்பதே இலை விபூதியாகும். வேதங்களே இங்கு பன்னீர் மரங்களாக இருந்து முருகப்பெருமானை வழிபடுவதாகவும், விஸ்வாமித்திரர் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, இலைப் பிரசாதத்தை சாப்பிட்டுத் தனக்கு ஏற்பட்ட குன்ம நோயைப் போக்கிக் கொண்டதாகவும் புராண வரலாறு தெரிவிக்கின்றது.
  • ஆதிசங்கரர், தனக்கு ஏற்பட்ட காசநோயை செந்தூர் முருகனை வழிபட்டு, இதே இலை விபூதியை உட்கொண்டுதான் போக்கிக்கொண்டார். அதன் நினைவாக, வடமொழியில் சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாமாலையை இயற்றினார்.
  • இதேபோல், 5 வயது வரை ஊமையாக இருந்து, செந்தில்வேலன் அருளால் பேசும் வல்லமையை பெற்று புகழ்பெற்றவர் குமரகுருபரர். அந்த முருகப்பெருமானே வேலினால் அவரது நாவில் எழுதி பேசவைத்தார். அதன்பின் குமரகுருபரர் இயற்றியதுதான் பிரசித்திப் பெற்ற கந்தர் கலிவெண்பா.

வள்ளிக்குகை :

  • திருச்செந்தூர் செல்பவர்கள் காணத் தவறாத இடம் அங்கு கடற்கரையில் அமைந்துள்ள வள்ளி குகை. முருகப்பெருமானிடம் வள்ளி கோபித்துக்கொண்டு வந்து தங்கிய இடம் இது என்கிறார்கள்.
  • இங்கு குகையை குடைந்து வள்ளிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதிக்கு ஒருவர் மட்டுமே சென்று திரும்ப முடியும்.
  • வள்ளி குகைக்கு முன்புள்ள சந்-தனமலையில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் விரைவில் கிட்டும் என்கிறார்கள்.

நடுக்கடலில் நடந்த அதிசயம்! :
  • இந்தியாவை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்திய நேரம், இந்தியாவின் செல்வ வளங்களை முடிந்தவரை சுரண்டினர். சாமி சிலைகளையும் அவர்கள் விட்டு வைக்க-வில்லை.
  • திருச்செந்தூர் முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் டச்சுக்காரர்கள் கடத்திக்கொண்டு கப்பலில் தங்கள் நாட்டுக்கு திரும்பியபோது, வழியில் கடும் புயல் வீசியது. பேய் மழை-யும் கொட்டித் தீர்த்தது.இதைக்கண்டு பயந்துபோன அவர்கள், கடத்திக்கொண்டு சென்ற சாமி சிலைகளை கடலுக்குள் வீசிவிட்டனர்.
  • இதற்கிடையில், திருச்செந்தூர் முருகன் சிலை கடத்திச் செல்லப்பட்டதால், அதற்கு பதிலாக வேறு புதிய சிலை செய்யும் பணியை திருநெல்வேலியில் வசித்த வடமலையப்ப பிள்ளை என்பவர் துவங்கினார். அப்போது ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "திருச்செந்தூர் கடலில் குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சை பழம் மிதக்கும். அங்கு மூழ்கித் தேடினால் கடத்தப்பட்ட சிலை கிடைக்கும்" என்று அடையாளம் காட்டினார்.
  • அதன்படி, வடமலையப்ப பிள்ளை உள்-ளிட்டவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தேடினர். ஓரிடத்தில் எலுமிச்சைபழம் மிதக்க, அங்கு மூழ்கித் தேடினர். அப்போது கடத்திச் செல்லப்பட்ட முருகனின் திருமேனி கிடைத்தது. அந்த சிலை மீண்டும் சன்னிதானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • அதேநேரம், புதிதாக வடிக்கப்பட்ட சிலை திருநெல்வேலி தாமிரபரணி ஆறு பாயும் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடம் தற்போது "குறுக்குத்துறை" என்று அழைக்கப்படுகிறது. குறுக்கு வழியில் முருகப்பெருமானின் அருள் கிடைக்க இங்கு சென்று வழிபடலாம் என்றும் சொல்கிறார்கள்.
தாமரையுடன் கந்தன் :


சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார் முருகப்பெருமான். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் அழகாய் வீற்றிருக்கும் அந்த அழகன் முருகன் கையில் இன்றும் அந்த தாமரை மலரை நாம் பார்க்கலாம். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

தெரியுமா மாப்பிள்ளை சுவாமி? :


பொதுவாக கோவில்களில் சுவாமிக்கு ஒரு உற்சவர் (விழாக்காலங்களில் இவரை பவனியாக எடுத்து வருவார்கள்) சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலை-வாய் பெருமான் என நான்கு உற்சவ மூர்த்-தி-கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்-தனி சன்னதிகளும் உள்-ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

முதன் முதலானது முருகனுக்கே... :

திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்-தில் விளைவிக்கும் நெல், தானியங்கள், காய்கறி ஆகியவற்றை அறு-வடை செய்யும்போது, முதலில் அறுவடை செய்ததை திருச்செந்தூர் கோவிலுக்கு கொண்டு வந்து, அங்குள்ள சண்முக விலாச மண்டபத்தில் வைத்து காணிக்கை செலுத்தி விடுகின்றனர்.

இப்படிச் செய்தால் மகசூல் அதிக அளவில் இருக்கும் என்றும், இயற்கையால் பயிர்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் நம்புகிறார்கள்.
இதேபோல், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள், அவை முதன் முதலாக ஈன்றெடுக்கும் குட்டியை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து காணிக்கை செலுத்துவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

சுப்பிரமணிய காயத்ரி :

"ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்"

-  முருகப்பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் அவரது அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.
****************

எம்பெருமானே முருகா



எண்ணமும் நீ... எழுத்தும் நீ...
உடலும் நீ... உயிரும் நீ ...
எம்பெருமானே முருகா
எங்களுக்கு 
அருள்வாய் அப்பா
 

கந்த சஷ்டி

  • முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.


  • பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார்.  அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.


  • தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை.   அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.
  • கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; (”ஈருடலும் ஓர்ருயுருமய் இருந்த சூரபதுமன்”) அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
  • ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே ஸ்கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.
விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:



  • இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும்  உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
  • கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.
  • கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
  • இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.
  • உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்

  • பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

  • இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

  • மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

  • அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து  தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில்  தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.

  • அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.

  • இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது.
****************

அத்தி மரம்


  • ஜோதிடப்படி  அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சுக்ராச்சாரி, சுக்ரனுடைய ஆதிபத்யம் பெற்ற மரம் அத்தி மரம். இந்த அத்திமரம் மிகவும் வலிமையான மரம். சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி.
  • அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே. அதை அதிகமாகப் பார்க்க முடியாது. அதனால்தான் இதுபோன்ற பழமொழி உண்டு. அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது
  • கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்கும். இதுபோன்ற அமைப்புகள் உண்டு.
  • அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு உண்டு. 
  • அதன்பிறகு, அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மரத்திற்கு உண்டு.

சந்திராஷ்டமம்

  • ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்.
  • அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.
  • சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும்.
  • அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
  • ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

Saturday, 22 October 2016

தன்வந்திரி

  • தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. 
  • கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். 
  • மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது

வால்மீகி :::: மாபெரும் கொள்ளைக்காரன்


  • தங்களின் குழந்தை மிகப்பெரிய வரலாறை எதிர்காலத்தில் படைக்கப்போகிறான் என் பதை அப்போது அந்த பெற் றோர்கள் உணர்ந்திருக்கவில்லை. வீட்டில் ஏழ்மை இருந்தாலும் குழந்தைக்கு ரத்னாகரன்’ என்று பெயர் சூட்டியிருந்தனர் பெற்றோர்.
  • தெய்வத்தின் அருளால் பழைய கஞ்சியை மட்டுமே குடித்து வளர்ந்த ரத்னாகரன் பலசாலிவாலிபனான், வறுமையால் பள்ளி செல் லாத ரத்னாகரனின் செயல்பாடு நாளுக்குநாள் மோசமானது.
  • அதே நேரம் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந் தான்.ஒருநாள் பசி மயக்கத்தில் இருந்த பெற்றோருக்கு “உணவு வாங்கி வருகிறேன்” என சொல்லி வெளியே போனவன் மழையில் மாட் டிக்கொண்டான்.அந்த வழியாக வந்த குதிரை வீரன் “தம்பி! உனக்கு ஏதாவது வேண்டுமா? கேள்” என்றான்.உடனே ரத்னாகரன், தன் கதையை அவனிடம் கூறினான்.
  • குதிரை வீரன் அவனுக்கு பணம் கொடுத்தாலும் ஒரு நிபந்தனையும் விதித்தான். “உன் பெற்றோருக்கு ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு உடனே நீ திரும்பிவிட வேண்டும்.உனக்கு பெரும் செல்வம் கொட்டும் அளவிற்கு ஒருவேலையை நான் தருகிறேன். அதை நீ தொடர்ந்து செய்தால் இந்த உலகிலேயே பெரும் செல்வந்தனாகி விடுவாய்” என்றான்.
  • ரத்னாகரனுக்கும் அவனது பெற்றோருக்கும் மகிழ்ச்சி ஏற் பட்டது. ரத்னாகரன் குதிரை வீரனை ஒரு குகையில் மீண் டும் சந்தித்தான். அப்போதுதான் அவன் பெரும் கொள் ளைக் கும்பலுடன் அங்கு வசித்தது தெரியவந்தது. படிப் பறிவில்லாத ரத்னாகரனின் மனதை குதிரைவீரன் எளிதாக மாற்றிவிட்டான்.
  • “கொள்ளையடிப்பது, பணம் தர மறுப்பவர்களை கொலைசெய்வது… இதில் எதை வேண்டுமானாலும் செய். அதில் கிடைப்பதில் பாதி பங்கை எடுத்துக்கொள். மீதியை என்னிடம் கொடுத்துவிடு,” என்றான். அதற்குரிய பயிற்சிகளை எடுத்துக் கொண் டான் ரத்னாகரன்.ரத்னாகரன் கொலை, கொள்ளையில் ஈடுபட்டான். பணம் சேர்ந்ததும், திருமணமும் செய்துகொண்டான். அவனுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
  • ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், “நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?” என்றார்.
  • என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன். “சரி, உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும் பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?” என்றார்.
  • இதற்கு ரத்னாகரன் ஆம்’ என்றான்.அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங் கேயே நிற்கிறேன்,” என்றார். நாரதரை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டுரத்னாகரன் வீட்டிற்கு சென்றதும், “என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?” என குடும்பத்தாரிடம் கேட்டான்.
  • அவனது பெற்றோர், “பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்” என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர். “மனைவி குழந்தைகளை காப்பாற்றுவது ஒரு ஆண்மகனின் கடமை. அவன் என்ன தொழில் செய்கிறான் என்பதோ, அதில் உள்ள பாவங்கள் பற்றியோ தங்களுக்கு கவலை இல்லை என்றனர்.
  • இதனால் வருத்தமடைந்த அவன் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தனது கண் களை திறந்த அவருக்கு நன்றி யும் கூறினான். நாரதர் மகிழ்ந்து, நீ செய்த பாவங்கள் நீங்க வேண்டுமானால் ராம’ நாமத்தை உச்சரி,” என சொல்லி விட்டு சென்றார். ரத்னாகரனுக்கு படிப்பறிவு இல்லாததால், அவன் சூராம’ என்ற சொல்லை, சூமரா.. மரா..’ என்றே சொன்னான். அதை வேகமாக சொல்லும் போது, தானாகவே, சூராம ராம’ என மாறியது. அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.பல ஆண்டுகள் கடந்தன. 
  • அவன் உடலைச் சுற்றி “வால் மீகம்” வளர ஆரம்பித்தது. சூவால்மீகம்’ என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார். அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் “வால்மீகி” என அழைக்கப்பட்டான். அன்று முதல் வால்மீகி முனிவர் என அனைவரும் அழைக்க ஆரம் பித்தனர். இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.

அபிராமி பட்டர்


  • அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருகடவூரில் வாழ்ந்து வந்தார். (அன்னை அபிராமி இருக்கும் இடம்) அவர் எப்பொழுது அன்னை அபிராமி எண்ணி யோக நிலையில் இருப்பது வழக்கம். உலகம் அவரைப்பற்றி பேசுவதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். அப்பொழுது சோழநாட்டை ஆண்ட இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே மன்னர் அன்னை தரிசிப்பதற்கு சென்றார். அப்பொழுதும் அபிராமி பட்டர் மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி யோக நிலையிலேயே இருந்தார். அப்பொழுது மன்னர் மிகுந்த மரியாதையுடன் அவரை அணுகி இன்று என்ன நாள்(திதி) என்று கேட்டார். அப்பொழுது அபிராமி பட்டர் உண்மையான நாளான அமாவாசையை உணராமல் பெளர்ணமி என்று சொல்ல, அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர்.
  • சரபோஜி மன்னர் கோபம்கொண்டு அபிராமி பட்டரை சொன்னது போல் அவரது வார்த்தைப் பொய்த்தால் அபிராமி பட்டரை உயிரோடு எரிக்குமாறு கூற, அதற்கான தளம் ஏற்பாடு செய்து கீழே நெருப்பு எரியூட்டப்பட்டது. அபிராமி பட்டர் தன் தவறை உணர்ந்தவராக பழியை அன்னை அபிராமியின் மீதே போட்டார். இந்த தவறை அன்னை அபிராமியான உன்னை நினைத்தே நான் யோக நிலையில் மூழ்கி இருந்தமையால் செய்ய நேரிட்டது. அவர் அன்னை அபிராமியைப்பற்றி நூறு சுலோகங்களை மிக அருமையாகப் பாடத் தொடங்கினார்.
  • அந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் அடுத்தப்பாடல் முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் தொடங்க வேண்டும். அபிராமி பட்டருக்கு இருந்த திறமையையும் கடவுளின் அருளால் இந்த அருமையான நூறு பாடல்களை ஒரே இரவில் பாடியதை பாராட்டியே ஆகவேண்டும். அபிராமி அந்தாதியில் இன்னொரு தனித்துவம் என்னவென்றால் அதற்கு முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை. முதல் வரி 'உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்..... ' என்று தொடங்க 100வது பாடல் ' உதிக்கின்றனவே ' என்று முடிகிறது.
  • அபிராமி பட்டர் 79வது பாடலை பாடிக்கொண்டிருக்கையில் 'விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன..... ' அன்னை அபிரமி அவரது பக்தியால் இன்புற்று அவர் முன்னே தோன்றி தனது காதணியை (தடங்கா அல்லது குண்டலம்) ஆகாயத்தில் வீச அது வான் முழுவதும் முழு பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அனைவரும் அன்னையை வணங்கி அன்னையின் மகத்தான சக்தி கண்டு வியந்தனர். மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.

கும்பகர்ணன்


  • இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும்ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ?அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம்.நான்முகனை நோக்கி தவம் இருக்கிறான் கும்பகர்ணன்.இதைக் கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்குஉருவத்தில் பெரியவனான கும்ப கர்ணன் எதாவது வரம்பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம்கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.
  • “பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார் நான்முகன்.அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப்பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான். நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள். நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.
  • பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில்அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன்அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால்எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம்,ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால் மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.

Friday, 21 October 2016

அருணகிரிநாதர்


  •  திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்.
  • தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. 
  • வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கஎன்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். 
  • அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். 
  • என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். 
  • திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.
  • திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
  • பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??
  • கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. 
  • பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
  • அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.
  • மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.
  • சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். 
  •  குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

  • தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காக்ஷி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. 
  •  அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காக்ஷி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காக்ஷி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்.
  •  மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்

ஒரிஜினல் ருத்ராட்ச மாலை

  • ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .உங்கள் இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில் , லேசாக வைத்திருங்கள் . அது யோகத்தில் ஒரு முத்திரை . 
  • அப்போது ருத்ராட்சமாலையைவிரலின் முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .ஓர் ஆச்சர்யம் நிகழும் . ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும் . உடனே கையை அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள் . 
  • அது யோகத்தை முறித்தல் நிலை . அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் . அப்படிச் செய்தால் அது குறையற்ற , சுத்தமான ருத்ராட்ச மாலை . 
  • முனிவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள் இருப்பார்கள். கிடைத்ததைச் சாப்பிடுவார்கள். அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல உணவாக இருந்தால் மாலைகடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக் கண்டுகொள்வார்கள

Tuesday, 18 October 2016

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

  • ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
  • குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
  • குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
  • முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
  • குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
  • காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
  • கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
  • கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
  • கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
  • சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
  • ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
  • சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
  • செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
  • சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
  • சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
  • விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
  • வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
  • முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
  • சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
  • சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன். 
  • வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள். 
  • ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன். 
  • மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன். 
  • தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.
 
 
 ந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
 
பாம்பன் சுவாமிகள் விளக்கம்:
 ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?

  • நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
  • இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
  • ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
  • இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.
  • வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை

அமாவாசை விரத கதை

  • ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா?
  • அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
  • மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.
  • அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்தால் இளவரசன் ஒருநாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்து போன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
  • இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.
  • இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடி மாத அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெற செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.
  •  மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

Monday, 17 October 2016

சீதை பூமிக்குள் மறைந்த இடம் :::: “சீதா சமாஹித் ஸ்தல்’


  • இராமாயண பெருங்காப்பியம் சொல்லும் அறவழிகள் ஏராளம். அதேசமயம், அவற்றை மக்களுக்கு உணர்த்த வந்த இறையவதாரங்களான ராமன், சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர் அடைந்த துன்பங்களோ அதைவிட ஏராளம். அதிலும் சீதாபிராட்டி பட்ட துயரம் சொல்லித் தீராது.
  • சீதாப்பிராட்டியின் முதற்கட்ட வாழ்க்கை இனிமையாகத்தான் இருந்தது. ராமபிரான் கரம் பற்றியபின் அது பன்மடங்கு இனியதாக மாறியதும் உண்மை. ஆனால் இராவணனால் அபகரிக்கப்பட்டபின் அத்தனையும் தலை கீழாய் மாறிப்போனது.அசோக வனத்தில் அவள் அனுபவித்த கொடுமை கொஞ்சமல்ல. “உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்- அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன்’ என சீதையின் நிலையைச் சொல்லுகிறார் கம்பர்.
  • தன் சொல்லாலேயே உலகங்களையெல்லாம் எரிக்கவல்ல ஜானகிதேவி, அத்தனை துயரத்திலும் அந்த ஆற்றலைப் பயன்படுத்த வில்லை. ராமனால் மீட்கப்பட்டு அவன் வில்லுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதற்காகவே பெருந்துன்பங்களையும் தாங்கிக் கொண்டு உயிரையும் விடாமல் காத்திருந்தாள். அவள் நினைத்தது நடந்தது. இராமன் அம்புகள் அரக்கர்களை அழித்தன. சீதையும் விடுவிக்கப்பட்டாள். நெடும்பிரிவுக்குப்பின் மணாளனைக் கண்ட மகிழ்ச்சியை அவளால் வெகுநேரம் அனுபவிக்க முடியவில்லை.
  • அக்னி பரீட்சை என்னும் சோதனை அப்போதே ஆட்கொண்டது. அதிலிருந்து மீண்ட சீதையால் சிலகாலம் மட்டுமே நிம்மதியுடன் இருக்க முடிந்தது. யாரோ ஒரு குடிமகன் சொன்ன பழிச்சொல், சீதையின் வாழ்வில் பெரும் துயரமலையைக் கொண்டுவந்து போட்டது.
  • எந்தக் கணவனின் நினைவிலேயே அனுதினமும் வாழ்ந்தாளோ- அந்த ராமனாலேயே காட்டுக்கு அனுப்பப்பட்டாள் சீதாபிராட்டி- அதுவும் கருவுற்ற நிலையில்!
  • கானகத்திலிருந்த வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அவளது பிற்கால வாழ்க்கை கழிந்தது. ஜனக மன்னனின் மகளாகப் பிறந்தவள்- தசரத சக்கரவர்த்தியின் மருமகளாக ஆனவள்- எதிர்ப்பாரற்ற ராஜாராமனின் பத்தினியாக வந்தவள்- தற்போது கானகத்தில் ஒரு ஏழைப்பெண்ணின் எளிய வாழ்க்கையை மேற்கொண்டாள். அங்கே அவளுக்கு ஆறுதல் தந்தவர்கள்- கானகத்தில் பிறந்த சீதாராம புத்திரர் களான லவனும் குசனும்தான்.
  • அயோத்தியில் ஸ்ரீராமன் அஸ்வமேத யாகம் நடத்தினார். அதற்கான யாக குதிரை பல நாடுகளுக்கும் சென்றுவரும். அந்த குதிரையை யாராவது கைப்பற்றினால், அவரை வென்று குதிரையைக் கொண்டுவந்து யாகத்தை நிறைவு செய்யவேண்டும். அவ்வாறு வந்த யாக குதிரையை லவனும் குசனும் கைப்பற்றுகிறார்கள்.அவர்களை வென்று குதிரையை மீட்க லட்சுமணனாலும் இயலாமல் போகிறது. இறுதியில் ராமனே போருக்கு வருகிறார். இவர் தங்கள் தந்தையென்று பிள்ளைகளுக்குத் தெரியவில்லை; இவர்கள் தம் மக்கள் என்று ராமனுக்குத் தெரியவில்லை. போர் தொடங்குகிறது. ராமனின் அனைத்து பானங்களையும் எதிர்கொள்கிறார்கள் பிள்ளைகள்.
  • அதற்குள் இந்த விவரம் சீதாபிராட்டிக்குத் தெரியவர, பதறிப்போய் ஓடிவருகிறாள் சீதை. அப்போது ராமபிரான் தன் ராமாஸ்திரத்தையே எடுத்துவிட்டார். சீதாபிராட்டியின் ஓலம் அவரை ஸ்தம்பிக்கச் செய்கிறது. நெடுநாள் பிரிந்திருந்த கணவனை போர்க்கோலத்தில்- அதுவும் தன் பிள்ளைகளுக்கெதிராகக் காணுகிறாள் சீதை. அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!
  • அங்கே போர் நின்று விடுகிறது. உண்மையை உணர்ந்த பிள்ளைகள் தந்தையின் பாதம் பணிகிறார்கள். தந்தையும் தன் வாரிசுகளை மார்புறத் தழுவிப் பேரானந்தம் அடைகிறார். அங்கே தனியாக நிற்கிறாள் சீதை.
  • ராமபிரானுடன் அயோத்தி செல்ல அவள் விரும்பவில்லை. தான் பரிசுத்தமானவள் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை இன்னும் மிச்சமிருப்பதாக உணர்கிறாள். அதுவும் தனக்காக இல்லை- தன் கணவனுக்காக!
  • அப்போது- தான் எந்த பூமித்தாயின் மடியிலிருந்து பிறந்தாளோ அந்த பூமித்தாயை அழைக்கிறாள். “தாயே! பூமி மாதா! என் கணவரின் திருவடிகளையே நான் எப்போதும் எண்ணியிருந்தது உண்மையானால்- என் மணாளனின் திருநாமத்தை எப்போதும் உள்ளத்தில் உச்சரித்த வண்ணமிருந்தது உண்மையானால், என்னை உனக்குள் ஏற்றுக்கொள்” என்கிறாள்.
  • அடுத்த கணம் அது நடக்கிறது. வானமும் பூமியும் நடுங்கும் வண்ணம் பேரோசை உண்டாகிறது. சிவ- பார்வதி தரிசனம் காண்கிறாள் சீதை. அடுத்து பூமி பிளவுபடுகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட பொன்னாசனத்தில் அமர்ந்திருக்கும் பூமாதேவி சீதாபிராட்டியை தன்னோடு அமரவைத்து தழுவிக்கொள்கிறாள். ஆசனம் பூமிக்குள் சென்று மறைய, பூமி முன்புபோல மூடிக்கொள்கிறது. பாரத பூமியைப் புனிதப்படுத்த வந்த சீதை எனும் மாபெரும் தியாகத்தின் சகாப்தம் அங்கே நிறைவு பெறுகிறது.
  • உத்தர ராமாயணம் கூறும் இந்த சம்பவம் நடந்த இடம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இதை “சீதா சமாஹித் ஸ்தல்’ என்று அழைக்கிறார்கள். அதாவது சீதாபிராட்டி பூரணமடைந்த தலம். இங்கே சீதைக்கென்று ஒரு ஆலயம் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் குளம். ஒரு பக்கம் கோவில். ஆலயத்திலுள்ள சீதையின் சிற்பம், எல்லா நிகழ்வுகளையும் நமக்கு உணர்த்திவிடும் உயிரோவியமாயத் திகழ்கிறது.
  • இந்த ஆலயம் சுமார் இருபது ஆண்டு களுக்குமுன் கட்டப்பட்டதுதான். அதற்குமுன் வெட்டவெளியாக இருந்த இடத்தையே பக்தர்கள் தரிசித்து வந்தார்கள். ஆலயத்தின் அருகே கயிலையில் சிவன் வீற்றிருப்பதுபோன்ற தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சனேயரின் திருவுருவமும் உள்ளது. இங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் வால்மீகி ஆசிரமம் உள்ளது.
  • அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டையும், ஆஞ்சனேயர், வால்மீகி, லவன், குசன் உருவங்களும் உள்ளன.இந்த தலத்திற்குச் செல்லும்போது மாபெரும் தியாகத்தின்- அன்பின்- கருணையின் மடியில் இருப்பதாகவே உணர்கிறோம்.seedha3
  • கணவன்- மனைவி பிணக்கு தீர்ந்து ஒற்றுமை உண்டாகவும்; மனக்குழப்பம் நீங்கவும்; மனஅமைதி கிட்டவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
  • அலகாபாத்திலிருந்து காசி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் சென்று, அங்கிருந்து செல்லும் பிரிவுச்சாலை யில் 14 கிலோமீட்டர் சென்றால் இந்த தலத்தை அடையலாம். உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை பயண ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.

ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?


  • தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. 
  • ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.
  • தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
  • கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள். மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
  • மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்.
  • உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களின் கவனத்திற்கு!
  • சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது. முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.
  • என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் – ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்.
  • இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
  • முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
  • யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
  • உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள். போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
  • வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்; 10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது.
  •  உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
  • யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம். இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை தற்செயல் என்று சொல்லலாமா?
  • நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.
  • யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.
  • 2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். 
  • இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
  • இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். பலன்? லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.
  • சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?

written by Dr. Stephen Carr Leon

தட்சன்

  • தனது கடும் தவத்தால், வரங்கள் பெற்று ஆணவத்தோடு வாழ்ந்தான் தட்சன். இதைப் பார்த்த வியாழ பகவான், அவனுடைய செருக்கு அடங்க வேண்டும் என நினைத்து, வேதவல்லி (மறைக்கொடி) என்னும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.
  • அவர்களுடைய வாழ்க்கை நன்றாக அமைந்தது. 1000 குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தன. ஆனாலும் தட்சனின் திமிர் அடங்கவில்லை. அவன், படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு சவாலாக அமைந்தான்.
  • தன்னுடைய பிள்ளைகளை அழைத்து, “படைக்கும் தொழிலை இனி நீங்கள் தான் பார்க்கவேண்டும், சிறிது காலம் பிரம்மாவுக்கு ஓய்வு வேண்டும். நீங்கள் உங்களுடைய கடும் தவத்தால் பிரம்மாவிடம் இருந்து இவ்வரத்தை பெறலாம்” என்றான்.
  • அவர்களும் தந்தை சொன்னதுபோல், தவத்தை ஆரம்பித்தனர். இதைப்பார்த்த நாரதருக்கு பயம் வந்துவிட்டது. அவர்களின் தவத்தை திசைதிருப்ப எண்ணினார். “நீங்கள் கடவுளை சேரும் நிலைக்கான தவத்தை செய்யுங்கள். படைத்தல் என்பது பிரம்மரின் தொழில். உங்கள் தந்தை சொன்னதைக் கேட்டு பாவங்களை சேர்க்காதீர்கள்” என்று அறிவுறுத்தினார். அதன்படியே தவம் செய்து, அவர்கள் கடவுளை சேர்ந்தனர்.
  • இதைக் கேள்விப்பட்ட தட்சன், “உனக்கு, எந்த உலகிலும் நிலையான இடம் இல்லாமல், அங்கும் இங்குமாய் திரிவாய்” என்று நாரதருக்குச் சாபமிட்டான். அதனால்தான் நாரதர் ஒரு இடத்தில் தங்காமல் திரிந்துகொண்டு இருக்கிறார்.
  • தட்சனுக்கு மீண்டும் 23 பெண்கள் பிறக்கிறார்கள். அதில் 13 பெண்களை தர்மத்துக்கு திருமணம் செய்து வைக்கிறான். மற்ற 10 பெண்களை, 10முனிவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதன்பிறகு, 27 நட்சத்திர தேவதைகள் பிறக்கிறார்கள். இந்த 27 நட்சத்திர தேவதைகளை சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
  • இந்தத் திருமணத்தில்தான் தட்சனின் ஆணவம் இன்னும் அதிகமாகிறது. சந்திரனுக்கு ரோஹினி, கார்த்திகை தேவதைகள் மீதுதான் அதிகம் காதல். அவர்களுடன் மட்டுமே இருப்பார். இது தெரிந்து மற்ற 25 பெண்களும் தட்சனிடத்தில் முறையிட்டார்கள். இது தெரிந்த தட்சன் மிகவும் கோபப்பட்டு, சந்திரனுக்கு “உன் அழகு அழியட்டும், நீ மறைந்து போவாய்” என சாபமிட்டான். சந்திரன், பிரம்மாவிடம் சென்று, தட்சன் சாபத்தைப் பற்றி கூறினார். பிரம்மா அவரை, சிவனிடம் சென்று வேண்டுமாறு அனுப்பி வைத்தார்.
  • சந்திரன் கயிலைக்குச் சென்று, சிவனைப் பார்த்து, தட்சன் சாபத்தைப் பற்றிவிளக்கினார். சிவன் அதை கேட்டு, “உன் அழகு மீண்டும் கிடைக்கும். ஆனால்,ஒருநாள் நீ உலகுக்கு தோன்றாமல், ஓய்வில் இருப்பாய். தேய்ந்து மீண்டும் 15நாட்கள் கழித்து, முழு நிலவாய் வளர்வாய்,” எனக் கூறி சந்திரனை அனுப்பி வைத்தார்.  இதனால் தட்சன், சிவனிடம் சண்டையிடுகிறான். அச்சூழலில், சிவன் உமா தேவிக்கு வேதசாரத்தைப் பற்றி கூறுகிறார். “சக்தி என்பவள் வடிவம்; சிவம் என்பது ஜீவன்” என்கிறார் சிவன். உமா தேவி, “வடிவம் இல்லை என்றால், ஜீவன் எப்படி வரும்?” என்று சிவனை கேட்கும் போது, சிவன் “இதைப்பற்றி நீ தெரிந்து கொள்ள,பூமிக்கு போக வேண்டும்” என்றார். அம்பிகையும் சம்மதம் தெரிவித்து, பூமிக்குஅவதாரம் எடுக்கிறாள்.
  • காளிந்தி நதிக்கரையில் (இன்றைய யமுனை நதி), அழகான சங்கு நிறத்தில் ஒரு சிறு குழந்தையாக அவள் பிறந்தாள். தட்சனுக்கு அந்தக் குழந்தையை பார்த்ததும் அவ்வளவு ஆசை வந்துவிட்டது. தட்சன்-வேதவல்லி, அந்தக் குழந்தையை வளர்த்தனர். தட்சனின் குழந்தை என்பதால், அந்த குழந்தைக்கு ‘தாட்சாயணி’ என பெயரிட்டனர். வேதவல்லிக்கு எல்லாக் குழந்தைகளைவிட, தாட்சாயணி மீது அதிக பாசம். அவளை மிகுந்த பாசத்துடன் வளர்த்தாள்.சிவன் ஏழை பிரம்மாச்சாரி வேடமிட்டு, தாட்சாயணியை மணக்க பூமிக்கு வந்தார்.அவருக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை செய்தான் தட்சன். ஆனால், சிவன் முகூர்த்த நேரத்தில் மறைந்துவிட்டார். இதனால் தட்சன் பெரிதும் சினம் கொண்டு, சிவனை கடுஞ்சொற்களால் பேசினான்.
  • மேலும், படைகளை போருக்காக ஏற்பாடு செய்தான். அத்தருணத்தில் சிவன், தாட்சாயணியை தூக்கிக்கொண்டு கயிலை சென்றுவிட்டார். படைகளை கூட்டிக்கொண்டு, கயிலைக்குப் புறப்பட்டான் தட்சன். அங்கு நந்தி அவனைப் போகவிடாமல் தடுத்தார். இது தட்சனின் சினத்தை தணிக்காமல், இன்னும் கடுமையாக்கியது. அவன் அங்கிருந்து புறப்பட்டு, ‘சிவன் இனி என் தெய்வம் இல்லை. அவரை யாரும் எக்காரணத்துக்கும் வணங்குதல் கூடாது’ என்றெல்லாம் உத்தரவு போட்டான். மேலும், சிவகணங்களையும் எதிரியாகவே கருதினான்.
  • ‘தட்சனின் ஆணவம், அவனுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்; மீண்டும் மீண்டும் பிறக்கின்ற சூழ்நிலையையும் ஏற்படுத்திவிடும்’ என்று வருந்தினாள் உமாதேவி. எனவே, தட்சனின் ஆணவத்தை அடக்கி, மோட்சத்தை கொடுக்கும்படி, சிவனிடம் கேட்கிறாள். சிவன் பார்வதியை, பூலோகத்தில் தட்சன் நடத்தும் யாகத்தில் பங்கெடுத்து வரும்படி அனுப்பி வைக்கிறார்.
  • தட்சன் யாகத்தில் அனைவரும் இருக்கலாயினர், சிவனை தவிர. பார்வதி இதைப் பார்த்து சினம் கொண்டு, தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கிறார். தட்சன் பார்வதியை அவமானப்படுத்துகிறான். அதனால், பார்வதி அவமானம் தாங்காமல், தன் சரீரத்தை யோகத்தால் துறக்கிறாள். அதை அறிந்த சிவன் பெருங்கோபம் அடைகிறார். வீரபத்ரரை தட்சனுடன் போர் புரிய அனுப்பி வைக்கிறார் சிவன். வீரபத்ரர் தட்சனின் தலையை வெட்டி கயிலைக்குத் திரும்புகிறார். தட்சனின் உடம்பு சிவனை தேடிச் சென்று, பாதங்களில் விழுந்து மன்னிப்பும், மோட்சமும் கேட்கிறது.
  • சிவபூதங்கள் தட்சன் தலையை விழுங்கியதால், சிவன் ஆட்டின் தலையை வெட்டி தட்சனுக்கு வைக்கிறார். தட்சனுக்கு மோட்சம் கிடைக்கிறது. தவம் சிறந்தது; வரம் சிறந்தது; ஞானம் சிறந்தது; பக்தி சிறந்தது; வேள்வி சிறந்தது... என்று சிறந்த அனைத்தும் ஒன்று சேர்ந்திருந்தது தட்சனிடம்.
  • ஆனால், அறவே இருக்கக்கூடாத ஆணவம் - திமிர் அதுவும் அதிகமாகவேசேர்ந்திருந்தது. அது அழிவைத் தரும் என்பதைத்தான் தட்ச வேள்வி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது



  •  சுவாச பந்தத்தையே குறிக்கிறது.யோக பாடத்தில் கால் என்றால் மூச்சு என்று பொருள். ஐயப்பன், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார்(மூலபந்தம்). மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும்.
  • யோகாசன நிலையில் , வயிற்றை உள்ளிழுத்து (உட்டியானபந்தம்), மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்தக் கிரியா சக்தியை ஞான சக்தியாக மடைமாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் (நயன தீட்ஷை) நிலையில் இருப்பதால் தான், கலியுகத்தில் இவ்வளவு அதிகமானப் பக்தர்களைத் தன்பக்கம் ஈர்க்கமுடிகிறது

Saturday, 8 October 2016

எளிய கடன் நிவர்த்தி முறை


கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு ொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)

(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]