Search This Blog

Tuesday, 18 July 2017

அனுமன் சாலிஸாவின் மகிமை.......!!!


  • ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே... எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்" என்றார்.
  • நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார். ‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர்,  தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார்.
  • இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன. படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
  • அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.
  • அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன. துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.


சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!



யாரும் சனியோட கடுமையால் கடுமையாக பாதிக்க படக் கூடாது என்பதற்காக சித்தர்கள் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்...

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு, அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித் தூக்கி சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் ,அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதைச் செய்யவும்.

அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழை காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்
எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய் விடும்.இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை
எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர்களுக்கு அன்னதானம் செய்ததற்குச் சமம்.

எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.  ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி, சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

திருமணத் தடையா? இதைப் படியுங்கள்!


பல இடங்களில் பெண்ணைக் கேட்டு இளைஞர்களின் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகின்றதா ?? வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்!

ஒரு ஊரில் இருந்த குடியானவருக்கு மூன்று மகள்கள்! அவரின் சகோதரியும், சகோதரியின் கணவரும் இறந்த காரணத்தால், அவர்களின் மகனை தன்னோடு வைத்து கொண்டு தன்னிடம் இருந்த விவசாய பூமியில் பாடுபட்டார்!

அந்த இளைஞர், அதாங்க அவரின் அக்கா மகனுக்கு இந்தக் குடியானவர் எந்தவொரு கூலியும் கொடுப்பது இல்லை!!!! மாப்பிள்ளை, உனக்கென்று மூன்று முறைப்பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்று உறுதி மொழி கொடுத்து வேலை வாங்கினார்.  அந்த இளைஞனும் கடுமையாகப் பாடுபட்டார்.

முதல் பெண்ணை வெளியூரில் இருந்த பெரிய பணக்கார வீட்டிற்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார். இளைஞனும்  தன் மாமாவிடம், ”என்ன மாமா எனக்கு ஒருத்தியை கட்டி கொடுப்பதாக சொன்னீர்கள்" என்று கேட்க அந்த குடியாவனும்,  "இல்லை மாப்பிள்ளை இன்னமும் ரெண்டு பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களில் ஒருத்தி உனக்குத்தான்”"என்று சொல்லிட்டார்

சரி,  மாமாவே சொல்லிட்டாரே என்று அந்த இளைஞனும் பொறுத்து கொண்டார். அப்புறம் அடுத்ததாக இருந்த இரண்டாவது பெண்ணை வேறு ஒரு நல்ல வசதியான இடத்தில் பேசி முடித்து விட்டார்! கூலியும் கொடுக்காமல் இருந்ததால், குடியாவரும் நல்ல வசதியுள்ளவராக ஆகிட்டார்.

முறைப் பையனும், “இந்தப் பெண்னையாவது கட்டி வைப்பீங்கன்னு பார்த்தேனே மாமா” என்றார்! குடியாவரும், “என்ன மாப்பிள்ளை இன்னொருத்தி இருக்காள் அவளை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்றார்!

அந்த இளைஞனும், “அதுக்கு என்ன சாட்சி?  முன்னையே இரண்டு முறை ஏமாற்றி விட்டீர்களே?” என்று கேட்டார். அந்த விவசாய பூமிக்கு பக்கமாக மலைப்பாங்கான ஏரியாவில் ...அந்த சமயத்தில் *ஒரு கரடி* அந்த பக்கமாகப் போய் கொண்டு இருந்தது.

இந்த குடியாவரும் அந்த முறைப் பையனிடம், “அதோ அந்தக் கரடி சாட்சியாக சொல்கிறேன், மாப்பிள்ளை, கடைசிப் பெண்ணை உனக்கே கட்டி வைக்கிறேன்” என்று சொல்லி அப்போதைக்குக்கு மேட்டரைத் தள்ளிப் போட்டார்.

ஆனால் சொன்னபடி நடக்காமல் மூன்றாவது பெண்ணையும் வேறு இடத்திற்கு சம்பந்தம் பேசி விட்டார். கூலி வாங்காமல் உழைத்து கொடுத்த இளைஞர் மன்னனிடம் சென்று முறையிட்டார்!

சபைக்கு அழைக்கப்பட்டார் குடியாவர். மன்னர் விசாரிக்க, “தான் தன் பெண்ணை கட்டி கொடுப்பதாக சொல்லவில்லை” என்று குற்றத்தை மறுத்தார்
"அவன் என் அக்கா மகன். அவனுக்கு உழைத்த கூலி என்னிடம் உள்ளது. அவனுக்குத் திருமணம் அமையும்போது கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்!

இளைஞனோ எனக்கு பெண்ணைத்தான் கட்டி வைக்கவேண்டும். கூலி வேண்டாம் என்று மறுத்தார். அப்போது அந்த குடியாவரும் ”நான் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னதிற்கு யார் சாட்சி?” என்று கொக்கி போட்டார்.

மன்னரும், ”ஆமாம், சாட்சி இல்லாமல் வழக்கு தீர்வாகாது. உன் சாட்சிகள் இருந்தால் நாளைக்கு ஆஜர் செய் "என்று சொல்லிட்டார். அந்த இளைஞர் ”மாமா சொன்னதிற்கு கரடிதான் சாட்சி மன்னா” என்று சொல்ல அரசவையில் ஏக சிரிப்பு

  • ஆனால் மறுநாள் அந்த அரசவையில் நேரடியாக கரடி சாட்சி சொல்ல வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி அந்த பையனும் மூன்றாவது முறை பெண்ணின் கழுத்தில் தாலி யைக் கட்டினார். கரடியாக அந்த மலையில் வாழ்ந்த திருமூலர்தான் அங்கே சாட்சி சொன்னது!!!!
  • அந்த திருமணம் நடந்த இடம்: சேலம், உத்தமசோழபுரம்! அவ்வூரில் *கரபுரநாதர் சன்னதி* என்ற சித்தரின் சந்நதி உள்ளது. திருமணம் கூடிவராமல் இருக்கும் வாலிபர்கள் அங்கே கோயிலின் உள்ளே இருக்கும் *கரடிசித்தரை'(திருமூலர்)* வழிபட்டு பின்னர் ஈஸ்வர தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்!

உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!


ஒஷோவின் அறிவுரைகள்: (50 வயதைக் கடந்தவர்களுக்கு)

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. சனீஷ்வரன் போர்டிங் பாஸ் கொடுத்தால், போக வேண்டியதுதான்.

அதுபோல போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. ஆகவே கஞ்சத்தனமாக - உங்கள் மொழியில் சொன்னால் சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்! நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை. சிம்ப்பிள்-நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும். 

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும். உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

ஐம்பதைத் தாண்டிவிட்டீர்களா? சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது. அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரொக்கியமும்தான் கெடும். அதை மனதில் வையுங்கள். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவிட்டுப் போகும். மாறாக மகிழ்ச்சியில்லாமல் கழியும் ஒவ்வொரு நாளும் உங்கள் அரோக்கியத்தைப் பதம் பார்த்துவிட்டுப் போகும். அதை மனதில் வையுங்கள். மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது!!!

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும்!! அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவைகள்தான் (அவர்கள்தான்) உங்களை இளைமையாகவும், அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்!!!!

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!

திருவெண்காடு – புதனுக்கான நவக்கிரக கோயில்! (Navagraha Temples)

இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோயில்களுள் ஒன்றாகும்.

இங்கு தான் சிவபெருமான் தன் ஆறு விதமான தாண்டவங்களை நிகழ்த்தியதாக கருதப்படுகிறது. இது “ஆதி சிதம்பரம்” என்றும் அழைக்கப்படுகிறது.

திருவெண்காட்டின் வரலாறு:


  • முருதுவன் என்னும் அசுரன் சிவபெருமானிடம் இருந்து நிறைய வரங்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு, தேவர்களை பலவாறாக துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தம்மை காத்தருளுமாறு, தேவர்கள் சிவபெருமானை வேண்டினர்.

  • சிவபெருமான், தேவர்களை திருவெண்காட்டுக்குச் சென்று மறைவாக இருக்கும்படி அறிவுறுத்தி விட்டு, தன் வாகனமாகிய நந்தியை அவ்வசுரனை அழிப்பதற்கு அனுப்பினார். நந்தியும், அவ்வசுரனை தோற்கடித்து, பின் அவனை கடலுக்குள் தூக்கி எறிந்தது.

  • அதன் பின், அந்த அசுரன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, அதன் பலனாக, அவரது சூலாயுதத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். சூலாயுதத்தோடு திரும்பிய அசுரன், பெரும் பலத்தோடு தேவர்களை தாக்கத் துவங்கினான். மீண்டும் தேவர்கள் சிவனை நாடி, தங்களை காக்கும்படி வேண்டினர். இம்முறையும், சிவன் நந்தியை அனுப்பி வைத்தார்.

  • ஆனால், இம்முறை அசுரனிடம் சிவபெருமான் அளித்த சூலாயுதம் இருந்ததனால், நந்தியால் அவனை தோற்கடிக்க முடியவில்லை. அவன் அந்த சூலாயுதத்தைக் கொண்டு நந்தியை படுகாயமுறச் செய்தான்.

  • அவ்வாறு பெற்ற விழுப்புண்களை இக்கோயிலில் உள்ள நந்தி சிலையில் இன்றும் காணலாம். நந்தி காயமுற்றதைக் கண்ட சிவன், பெருங்கோபமுற்று, தன் மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணைத் திறந்து, அவ்வசுரனை வதம் செய்தார்.

  • அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனின் சிலை, அவரது இப்பெருங்கோபத்தினை நன்கு வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனை வழிபடுவோருக்கு எப்போதும் எதிரிகளே இருக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.   
புதன் வரலாறு:
  •  நவகிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன். ‘‘பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது’’ என்ற பெருமைக்குரியவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதுகூட, புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார். இதன் காரணமாகவே, புதனுக்குக் கிரக பீடாஹரன் என்ற பெயர் உண்டு. அறிவுத் தெய்வம் இவர். கையில் புத்தகம் வைத்திருப்பார். இவரை வழிபட்டால், கவிபாடும் திறமை வரும். புதனுக்கு பலவிதமான திருநாமங்கள் உள்ளன. அவற்றிலிருந்து, புதனுடைய இயல்புகள் பலவற்றை நாம் அறியலாம்.
  • புதன் அறிவில் சிறந்தவராக இருப்பதால் புத்திமதாம் சிரேஷ்டன், புதன், ஞானி, ஞானிநாயகன் ஆகிய பெயர்கள் அவருக்கு உண்டாயின. அறிவை வழங்குவதால் புத்திதாதா எனவும் அறிவை வளர்ப்பதால் புத்தி விவர்த்தனன் எனவும் புதன் அழைக்கப்பட்டார். பொருள் முதலான செல்வ வளங்களை வழங்குவதால், தனப்ரதன், தயாகரன், தார புத்ர தான்ய பசுப்ரதன் என்ற திருநாமங்களாலும் புதன் அழைக்கப்பட்டார். புதன் மிகுந்த அழகு கொண்டவராக இருப்பதால் கஞ்சநேத்ரன், மனோகரன், சௌமிய மூர்த்தி என்றும் திருநாமங்கள் கொண்டார்.
  • விஷ்ணுவைப் போன்ற  திருவுருவம் உடையவர் ஆதலால், விஷ்ணுரூபி என்றும் இவர் அழைக்கப்பட்டார். நட்சத்திரேசன், லோகப்ரியன் என்ற பெயர்களும் புதனுக்கு உண்டு. இவற்றைத் தவிர ஞானரூபன், ப்ரியாங்கன், சாந்தரூபி, குதிரை வாகனன் என்ற திருநாமங்களையும் கொண்டவர் அவர். மஞ்சள் நிறக் குடையும் சிங்கக் கொடியும் கொண்ட தேரில், புதன் வலம் வருவார். அத்தேரில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். (எட்டுக் குதிரைகள் என்றும் சொல்வதுண்டு). புதன், ஒருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டவர். மேல் வலக்கையில் வாளையும் இடக்கையில் கேடயத்தையும் ஏந்தி இருப்பார். கீழ் கைகளில் கதையும் வரதமும் இருக்கும்.
  • சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், புதனைப் பற்றி விரிவாகவே பாடியிருக்கிறார். அவர் சொல்லும் தகவல்கள்: புத பகவான், தேவர்களால் துதிக்கப்படுபவர். சந்திரனுக்கும் தாரைக்கும் திருமகன். புலவர் தெரிந்து போற்றும் பிரான். அந்தணரால் மகிழ்ச்சியைப் பெறுபவர். சீரும் செல்வமும் வழங்குபவர். குஜனுக்கு (அங்காரகனான செவ்வாய்க்கு)ப் பகைவர். மணி பதித்த திருமுடி கொண்டவர். மணிமாலை, மணிவளையம் , மணிக்காப்பு ஆகியவற்றை அணிந்தவர். மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் தலைவர். புத்தகத்தைக் கையில் கொண்டவர்.
  • ஆணும், பெண்ணும் அல்லாத வடிவினர் (ஏன் என்பதற்கான விளக்கம், புதன் வரலாற்றைக் கூறும்போது, பின்னால் வரும்). அடியவர் போற்றும் புகழ் கொண்டவர். சிவனடியார் நலனை விரும்புபவர். எப்போதும் ஆனந்தத்தோடு இருப்பவர். சகல கலைகளையும் கற்று, அறிவில் தலை சிறந்தவராக விளங்கி ஞானி என்ற பெயரைப் பெற்ற புதனின் மனைவி பெயர் ஞானதேவி. இவள் தவிர பிரசங்கி, அப்ரசங்கி என வேறு இரு தேவியர்களும் உண்டு என சித்தாந்த சேகரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. புதனுக்கு, அர்த்தப் பிரகரணன் என்ற புதல்வன் ஒருவன் உண்டு என, ஜோதிட நூல் கூறுகிறது. (அப்புதல்வனுக்கு வேறு பெயரும் உண்டு).

புதனுக்கு உரியவை:

வாகனம்- குதிரை;
தானியம் - பச்சைப்பயறு;
மலர் - வெண்காந்தள்;
ஆடை - பசுமை வண்ணஆடை;
மணி - மரகதம்;
உலோகம் - பித்தளை;
அன்னம்  - பச்சைப்பயிறு பொடி அன்னம், வெல்ல அன்னம்;
சமித்து - நாயுருவி;
சுவை - உவர்ப்பு;
கோத்திரம் - ஆத்திரேய;
இனம் - வைசியர்;
நாடு - மகதம்;
மனைவி - ஞானதேவி;
மகன் - கர்த்தவாசுரன்;
வடிவம் - நெடியது;
குணம் - சமத்துவம்;
 ராசி - மிதுனம், கன்னி;
 திசை - வடகிழக்கு;
அதிதேவதை - திருமால்;
பிரத்யதி தேவதை - இரு கரங்கள் கொண்ட நாராயணர்;
தலம் - திருவெண்காடு, மதுரை.

  • ஜோதிட நூல்களின்படி புதன், சுபகிரகம். ஞானத்தையும் அறிவையும் கொடுக்கக்கூடியவர். வாக்கு சாதூரியத்தை அளிப்பவர். மேலும், தாய்மாமன் வகையினர், கல்வி வளர்ச்சி, மகாவிஷ்ணுவின் அருள், வியாபார சம்பந்தமானவை, தூதுவன், தேர்ப்பாகன், ஜோதிட அறிவு, பிரசங்கம் செய்யும் ஆற்றல், வியாபாரத்திறமை, சிற்பத் தொழில் செய்வது, தேர் வாகனம் அமைப்பது ஆகியவற்றிற்கெல்லாம் புதனே காரணமானவர். நவகிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்காக, புதன் அமர்ந்திருப்பார். அவருக்கு வலப்பக்கத்தில் அவரது அதிதேவதையாகிய விஷ்ணு, தன் பரிவாரங்களுடனும், மனைவி மக்களுடனும் எழுந்தருளி இருப்பார்.
  • புதனுடைய பிரத்தியதிதேவதையான நாராயணன், இரண்டு திருக்கரங்களோடு இருப்பார். பிருகு முனிவர், நாராயணருடைய சாந்த இயல்பைச் சோதனை செய்வதற்காக அவரைத் தன் வலது காலால் உதைத்தார். அதனால் சிறிதும் கோபம் கொள்ளாமல், நாராயணன், ‘‘தேவரீர் திருவடிகன் நோகுமே’’ என்று பிருகு முனிவரின் பாதங்களை வருடினாராம். பிருகு முனிவருடைய வலது திருவடியின் சுவடு, நாராயணரின் இடது தோள் அருகில் இருக்கும். இந்த வர்ணனையின்படி அமைந்த, பழைய கால ஓவியம் ஒன்று உண்டு.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]