Search This Blog

Saturday, 20 August 2016

குரு பிருந்தாவனத்தில் அமர்ந்த நாள் - சனிக்கிழமை (20.08.16 )



சரியாக 345 வருடங்களுக்கு முன்பு...

கி.பி 1671 வியாழக்கிழமை
~~~~~~

அதிகாலையிலேயே எண்ணற்ற பக்தர்கள் துங்கபத்ராவில் குளியல்.மனதில் ஒரு விதமான துக்கம் பரவி இருந்தது அனைவரிடத்திலும்.திவான் வெங்கண்ணா அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார் பதட்டமாய். மூலராமர் பூஜைக்காக வந்த மலர்களில் நறுமணங்கள் கமழந்தது.
காலை நேரத்து சிலு சிலுவென்ற சில்லென்ற காற்று மாஞ்சாலம் முழுவதும் அப்பியது.

ஆம் இதோ...

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இன்னும் சிறிது நேரத்தில் பிருந்தாவனத்தில் அமர போகிறார். இதோடு இந்த மகானை எப்போது  காணப்போகிறோம் என கலக்கம் அனைவரின் விழிகளிலும்..அனைவருக்கும் முன்பாகவே குரு ராயர் துங்கையில் குளித்து மூலராமர் பூஜைக்கு தயாரானார்.அவருக்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தார் யோகிந்திர தீர்த்தர். நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன.

ஸ்ரீ ராகவேந்திரர் அனைவரையும்  ஆசிர்வதித்தார்.

பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாடினார்.உங்களையெல்லாம் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது, உங்கள் கவலைகளை நான் மீட்பேன், நீங்கள் இன்று சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், இந்த உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும், நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?,

நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன். உண்மையான பக்தியோடு என்னை காண வரும் பக்தனுக்கு அவனுடைய கவலையை போக்குவேன், மாஞ்சாலம் வர முடியா விட்டாலும் இருந்த இடத்தில் தூய உள்ளத்தோடு வணங்கினால் கூட போதும்.

இப்போது மூலராமர் பூஜை ஆரம்பமாக போகிறது. அனைவரும் அமைதியாக அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள் என பூஜையை ஆரம்பித்தார்.

பூஜைக்காக,

மூலராமர், விஜயராமர், ஜயராமர், சந்தான கோபாலர் போன்ற விக்கிரங்களை வரிசையாக வைத்தனர் சிஷ்யர்கள். வீணையை வாசித்து கொண்டே கிருஷ்ணரை பற்றிய பாடலை உருக்கமாக கண்ணீர் மல்க பாடினார்.

 பக்தர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

 திடீரென்று ஒரு பரவசம்.

ஆம் ......

ஸ்ரீ ராகவேந்திரர் பாடலை கேட்டு சந்தான கோபால விக்கிரகம் நாட்டியம் ஆடியது

பக்தர்களும் , . . .

ஓம் ஸ்ரீ ராகவேந்திரா...
ஓம் ஸ்ரீ ராகவேந்திரா . . .

என விண்ணை மீண்டும் அளவிற்கு குரலெழுப்பினர்.

பூஜைகள் முடிந்த பின்னர் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் கணீரெண்று ஒலிக்க குரு பிருந்தாவனம் அருகில் சென்றார்.கூடியிருந்த அனைவருக்கும் தீர்த்தமும், மங்கள அட்சதையும் வழங்கினார்.ஒரு கையில் பிரம்ம தண்டம், துளசி மாலையும் ஒரு கையில், மறு கையில் கமண்டலம். ஓம் நமோ நாராயணா என்று சொல்லியபடி பிருந்தாவனத்தை நோக்கி நடக்கலானார்.

சிரித்த முகத்தோடு மக்களை பார்த்த படியே தெய்வீக முகத்துடனே பிருந்தாவனத்தில் பிரவேசித்தார்.யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார்.பிரம்ம தண்டத்தை தோளில் சாய்த்தார்.கமண்டலத்தை கீழே வைத்து துளசி மாலையை வலது கரத்தில் தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
அனைவரின் கண்களும் துளசி மாலையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சற்று நிமிடத்தில் துளசி மாலை கீழே விழுந்தது.

அனைவரும் ,

குரு ராகவேந்திரா....
குரு ராகவேந்திரா ...
என கரகோஷம் எழுப்பினர்.

அப்படி குரு பிருந்தாவனத்தில் அமர்ந்த நாள் சனிக்கிழமை(20.08.16 )

அவர் அமர்ந்து 344 வருடங்கள் முடிந்து 345 வருடம் துவங்குகிறது.



ஓம் ஸ்ரீ குருராகவேந்திராய நமஹ...

👌👌👌🙏🙏🙏🙏👌👌👌
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]