சந்திரனுக்கு 6-8-12-ல் குருவீற்றிருக்கப் பெற்ற ஜாதகர்களுக்கு சகடயோகம்
உண்டாகிறது. இவர்கள் நிலையான வாழ்வு வாழ்வதில்லை. மேடு பள்ளமான வாழ்க்கையை
வாழ்கிறார்கள்.
இத்தகைய ஜாதக அமைப்புப் பெற்றவர்கள் ராஜராஜேஸ்வரி யந்திரம் வாங்கி பூஜை
செய்யலாம்.அல்லது யானைமுடி மோதிரம் அணியலாம். இதனால் இத்தோஷம் நீங்கி வளம்
பெறலாம்.
சிலரது வாழ்க்கையில் காரியத்தைச் செய்ய முற்பட்டவுடன் கைகூடாது.
முயற்சி திருவினையாக்கும் என்ற தத்துவத்தை மனதில் கொண்டு, ஒன்றுக்கு
மூன்று முறை முயற்சி செய்து அந்த முயற்சியால் மட்டுமே வெற்றி இலக்கை
அடைவார்கள். மனதில் உறுதி எல்லாருக்கும் அமைவதில்லை. ஒரு சிலருக்கு
மட்டுமே வரும்.
எல்லா காரியமும் முதலில் முடங்கி பிறகு முயற்சிக்குத்
தக்கபடி தான் வெற்றி கிடைக்கிறது..என்றால் அவர்கள் ஜாதகத்தில்
லக்னத்துக்கு 6-ல் சந்திரன் இருந்தாலும், அல்லது குரு பகவான் நின்ற
ராசிக்கு 6,8,12-ஆம் இடங்களில் சந்திர பகவான் அமர்ந்திருந்தாலும் அந்த
ஜாதகர் சகட தோஷத்தை அடைகிறார். லக்னத்துக்கு 6-ல் சந்திரன் நின்று வெகு
ஜனங்களை இரட்சிப்பவராக இருந்தாலும் அவரது வாழ்க்கையில் முழுமையான
தோல்விகளையே தருவார். அதனை அடுத்து பிறந்தது முதல் பெரியவர்கள்
ஆனபின்பும், கஷ்டத்தையும், தோல்வியையுமே சந்தித்து வருபவர்கள் உங்களது
ஜாதகத்தில் மேற்கண்டவாறு சந்திர பகவான் அம்ர்ந்துள்ளாரா என்பதை நீங்களே
தெளிவுபடுத்திக் கொள்ளலாம். நிச்சயமாக உங்கள் ஜாதகம் மேற்கண்டவாறு தான்
அமையக்கூடும். உங்களுக்கு உங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்யத் தெரியவில்லை
என்றால், அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் காட்டி தெரிந்து கொள்ளுங்கள். சகட
தோஷத்துடன் கூடிய ஜாதகம் அமையப் பெற்றவர்கள் கீழ்கண்ட எளிய பரிகாரங்களைச்
செய்து இனிவரும் காலத்தை வளமாக்கலாம்.
எளிய பரிகாரம்-1
சகட தோஷம் உள்ளவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை வெற்றியாக மாற்றித் தரும் சர்வ வல்லமை படைத்தவர்
எம்பெருமான் சிவபெருமான் ஒருவரே ஒருவரே, சிவலிங்க பூஜையால் கண்ணப்பர்
முக்தி அடைந்தார்).சிவலிங்க பூஜை செய்த மார்க்கண்டேயன் நீண்ட ஆயுளை பெற்று
தலைசிறந்த மாமுனிவராக வாழ்ந்தார்.
சிவலிங்க பூஜையால் வெள்ளை யானையும், சிலந்தியும், முக்தி நிலை பெற்றன.
வெள்ளை யானைக்கு சிவபதமும், சிலந்திக்கு அரசாளும் பாக்கியமும் கிடைத்தது.
மேலும் சிவகணத் தலைவர்களாய் எம்பெருமான் சிவபெருமானுக்கு திருத்தொண்டுகள்
புரிந்து வருகின்றனர். எனவே யார் ஒருவர் காலை எழுந்தவுடன் தினசரி ‘ஓம்
நமசிவாய நமக’ என்று 108 முறை சொல்கிறார்களோ அல்லது குறைந்தது ஒன்பது
முறையாவது சொல்கிறார்களோ அவர்களுக்கு பிறப்பில் ஜாதகத்தின் வாயிலாக ஏற்பட்ட
சகட தோஷம் விலகும். சகட தோஷம் விலகி சகட யோகமாக மாறும்.
எளிய பரிகாரம்-2
காலை எழுந்தவுடன் ‘ஓம் நமசிவாய நமக’ என்று 108 முறை வாழ்நாள்
முழுவதும் சொல்ல முடியாதவர்கள் பச்சரிசி தவிடு மூன்றுபடி எடுத்து அதனை
உங்கள் அருகில் உள்ள பசு மாட்டிற்கு ஒன்பது நாட்களுக்கு கொடுத்து அந்தப்
பசுவை வணங்கி வருவார்களேயானால் அவர்களுக்கு சகட தோஷம் விலகி வாழ்வில்
தோல்விகள் ஏற்ப்டாது.(அனுபவத்தில் கண்ட உண்மை.).