Search This Blog

Thursday, 15 September 2016

சந்திரன் ஸ்தலம் :::: விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை)


திருக்கோயில் அமைவிடம்:
அருள்மிகு விஜயாசன பெருமாள் திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.

திருத்தலக்குறிப்பு:
தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)
தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை
தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்
கிரகம்: சந்திரன் ஸ்தலம்

திருத்தல வரலாறு:
இந்த விஜயாசனர் பெருமாள் திருக்கோயில், நவதிருப்பதிகள் எனப்படும் ஒன்பது கோயில்களில் இரண்டாவது திருப்பதியாக அமைந்துள்ளது. நவகிரஹ ஸ்தலங்களில் சந்திரன் ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான திருக்கோயில். இக்கோயில் உற்சவர் அருள்மிகு எம் இடர்கடிவான் என அழைக்கப்படுகிறார்.

ரோசமர் என்னும் முனிவர் இந்த வரகுணமங்கையில் தவம் புரிந்து வந்தார். ரோசமர் முனிவரிடம் சத்தியவான் என்பவர் சீடராக இருந்தார். சத்தியவான் ஒரு நாள் வரகுணமங்கை திருப்பதியில் உள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தக் குளத்தில் ஒரு செம்படவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். வலையை மீண்டும் மீண்டும் வீசி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது பின்னாலில் இருந்து ஒரு நாகம் அவரைத் தீண்டியது. அதனால் செம்படவன் உயிர் நீத்தார். நாகமும் மறைந்து சென்றது.

உயிர் நீத்த செம்படவன் சொர்க்கம் சென்றடைந்தார். அவரது சரீரத்தை பறவைகள் உண்டன. இதனைக் கண்ட சத்தியவான் தன் குரு ரோமசரிடம் சென்று, பிற உயிர்களுக்கு பாவம் செய்து வாழ்ந்த இவருக்கு எவ்வாறு சொர்கலோகப் பதவி கிடைத்தது என்று வினவினார். அதற்கு ரோசமர் முனிவர், வரகுணமங்கை என்னும் இத்தலத்தில் உயிரை விட்டதால் அவருக்கு சொர்க்கம் கிடைத்தது என்று கூறினார்.

மேலும் ரோசமர் முனிவர் கூறியதாவது, முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்னும் இடத்தில் வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தார். அவர் தன் தாய், தந்தை, குரு ஆகியோரை வணங்கி வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்து வந்தார். தனது பெற்றோரது காலத்திற்குப் பிறகு இறைவனை, பெருமாளை எண்ணி கடும் தவம் புரிய நினைத்தார். அவர் இவ்வாறு நினைத்தவுடன் பெருமாள் ஒரு பிராமண ரூபத்தில் தோன்றி ஸஹ்ய மலைகளின் நடுவே உள்ள வரகுணமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று தவம் புரியும் படி கூறினார். உடனே வேதவித் வரகுணமங்கை சென்று தவம் இருந்தார். இவரது தவத்தினை ஏற்ற பெருமாள் வேதவித் முன் தோன்றினார். பெருமாளிடம் வேதவித், இந்த வரகுணமங்கை தலத்தில் விஜயாசனன் என்ற திருநாமத்துடன் எழுந்தருள வேண்டும் என வேண்டினார். அவ்வாறே பெருமாளும் இத்தலத்தில் விஜயாசன பெருமாளாக வீற்றிருந்து அனைவருக்கும் அருள் புரிகிறார். வேதவித் பிரம்மச்சாரியாக வாழ்ந்து முக்தி அடைந்தார்.

காலமு நோயுங் கருதாத வண்ணைமீர்
வேலன் வெறியை விலக்குமின் கண் - மாலம்
வரகுணமங்கை யன்றாள் வண்டுழாய் மேலா
தரகுண மங்கை தனக்கு
(108 திருப்பதி அந்தாதி 55 )

சந்திரன், திங்களூர்.

  chandra bhagavan thingalur க்கான பட முடிவு


  • கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான "அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ திடத்துடன் இருப்பார். இவரது நீச்சம் மன நோய் தரும். சந்திரனது ஆதிக்கத்தால் மனித உடலில் மூளை, வயிறு, மார்பு போன்ற உறுப்புகள் பாதிப்படையும்.
  • நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரகன். காலரா, பாலியல் தொடர்பான நோய்கள், நுரையீரல் நோய்கள் ஆகியன இவரது நீச்சத்தால் உண்டாவன. நீர் உணவுகள், தேன், மது, உறக்கம், குதிரை, மாறு கண், காச நோய், மலர்கள், வெண்ணெய் போன்றவற்றின் காரணகர்த்தா. வெண்மை நிற மலர்களால் அர்சிப்பதாலும், வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி கொள்வதாலும், முத்து மாலை அணிவதாலும், பௌர்ணமி விரதம் இருப்பதாலும், அரிசி தானம் செய்வதாலும் சந்திர கிரக தோஷங்கள் விலகுகின்றன.

சந்திர தோஷம் அகல
  • ஈய உலோகத்தால் சந்திர பகவானின் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான வெண்ணிற மலர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். திங்கட் கிழமைகள் தோறும் விரதம் இருக்க வேண்டும். சந்திரரை வெண்ணிற ஆடைகளால் அலங்காரம் செய்யலாம். முருங்கை சமித்து கொண்டு தூபமிட்டும் தீபம் எற்றியும் வழிபட வேண்டும். சிவன் கோயில் சென்று அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.
  திருநாவுக்கரசரும், அப்பூதி அடிகளும்
  • திருநாவுக்கரசர் ஒரு சமயம் உழவாரப் பணி செய்ய திங்களூர் சென்றிருந்தார். அச் சமயம் அங்கு அப்பூதி அடிகள் என்பவர், நாவுககரசர் பெயராலே பல தர்ம காரியங்களை செய்து வருவதைக் கண்டு அவர் இல்லம் சென்றார். நாவுக்கரசரை கண்ட அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார். தனது மகனை வாழை இலை பறிக்க தோட்டத்திற்கு அனுப்ப, அங்கு அந்த சிறுவனை பாம்பு தீண்ட உயிரிழந்தான். இச் செய்தியை அறிந்தால் எங்கே நாவுக்கரசர் விருந்து உண்ண மாட்டாரோ என்றெண்ணிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது படைத்தார். இதனை அறிந்த நாவுக்கரசர், இறந்த அப்பூதி அடிகளின் மகனை இத் திருத் தலத்திற்கு எடுத்து சென்று, "ஒன்று கொலாம் அவர் சிந்தை" எனத் தொடங்கும் பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். இத் தகைய பெரும் பேறு பெற்ற தலம் இது.
  • மக்களின் மூச்சுக் காற்றில் சந்திரன் இட கலை ஆனவர். சந்திரன் சூரியனிடம் இருந்து முழுவதும் பிரிந்திருக்கும் நாள் பௌர்ணமி. சந்திரனை ராகு அல்லது கேது பற்றும் நாள் சந்திர கிரகணம். இது பௌர்ணமி தினங்களில் நடைபெறும். வலக் கையில் கதையும், இடக் கையில் வரதமும் கொண்டு காட்சி தருபவர். வெள்ளாடை உடுத்தி, முத்து மாலை, வெண் சந்தனம், பன்னிற மலர் மாலைகள் அணிந்து காட்சி தருபவர். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத் திருத் தலம் வந்து கைலாச நாதரையும், பெரியநாயகி அம்பாளையும், பின்னர் சந்திர பகவானையும் தரிசிக்க தோஷ நிவர்த்தி பெறலாம். இன்றும் ஆண்டுதோறும் பங்குனி உத்திர காலை 06:00 சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீதும், மறுநாள் பிரதமை திதியில் மாலை 06.30 மணியளவில் சந்திர ஒளி சிவலிங்கத்தின் மீதும் படுவது மிகச் சிறப்பு.
 
சந்திர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி
கடகம் திக்கு தென்கிழக்கு
அதி தேவதை
நீர் ப்ரத்யதி தேவதை கௌரி
தலம்
திருப்பதி, திங்களூர் வாகனம் வெள்ளை குதிரை
நிறம்
வெண்மை உலோகம் ஈயம்
தானியம்
நெல், பச்சரிசி மலர் வெள்ளை அலரி, அல்லி
வஸ்திரம்
வெள்ளை ஆடைகள் ரத்தினம் முத்து
நைவேத்யம்
தயிர் அன்னம் சமித்து ருக்கஞ்சமித்து

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]