Search This Blog

Wednesday, 15 August 2018

தெப்பெருமநல்லூர் :::: நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்

நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்: 

  • இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் என்னும் பகுதியில், திருநாகேஸ்வரம் என்னும் ஊரிற்கு அருகில் உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் ஊரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி எழுந்தருளி இருக்கும் ஆலயம் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் நாகபாம்பு ஒன்று வில்வம் இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
  • கடந்த 15.01.2010 ம் திகதி காலை 10:30 மணியளவில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்வதற்கு சிறிது நேரம் முன்பதாக; ஆலய சிவாச்சாரியார் அவர்கள் கருவறைக்கு சென்ற பொழுது, அங்கே மூலவிக்கிரகத்தின் உச்சியில் ஒர் நாகபாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அந்த நாகம் சிவலிங்கத்தில் இருந்து மெதுவாக இறங்கி நேராக அங்கிருந்த வில்வமரத்தின் மேல் ஏறி அந்த வில்வமரத்தில் இருந்து சில வில்வம் இலைகளைப் பறித்து எடுத்து; அவற்றை தனது வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் கருவறைக்குள் நுளைந்து சென்று, சிவலிங்கத்தின் உச்சியில் மேல் அமர்ந்து அதனை சிவலிங்கதிற்கு அர்சனை செய்தது. வில்வமரம் இவ் ஆலயத்தின் தலவிருட்சமாகும்.
  • இவ்வாறு பலமுறை வில்வம் இலைகள் பறிக்கப்பெற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றது என அறிய முடிகின்றது. இந்நிகழ்வை பல பக்தர்கள் அதிசமாகவும், பக்தியோடும் பார்த்து வணங்கியுள்ளனர். இந் நிகழ்வினைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் அதனைக் காண திரண்டு வந்துள்ளனர். இந்நிகழ்வின் போது பக்தர்கள் சிலர் நாகபாம்பை பிந்தொடர்ந்த போது நாகம் சீறி அவர்களை விரட்டியுள்ளது. இந் அதிசய நிகழ்வுபற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி


  • திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகாரதிருத்தலமாகும். பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கிய புண்ணிய தலம்.
  • பிராமணரை கொலை செய்தல், முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம்விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினைசெய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவுகொண்டு பின் வேறு ஒருவரை திருமணம் செய்தல், திருமணத்திற்கு பின் வேறொருபெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஒருவன் செய்யாததவறை செய்தான் என சொல்லும் பொய் ஆகியவை பிரம்மஹத்தி தோஷமாகும்.
  • ஒருவருக்கு திருமணத்தடை ஏற்படுதல், புத்தி சுவாதினம் ஏற்படுதல், நோய்களால்அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக சிறை செல்லுதல், கணவன்-மனைவிபிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம்முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.
  • திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிதிருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிசோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான்வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவிடைமருதூரில் இருக்கும்சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப்படுத்தப்படுகிறார்.
  • இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின்பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.காசிக்கு நிகரான தலம்காசிக்கு நிகரான தலம்.
  • காசிக்கு நிகரானஇத்தலத்தில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்துரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
  • பிரம்மஹத்தி தோஷம்பிரம்மஹத்தி தோஷம்வரகுண பாண்டியன் என்ற மன்னன் காட்டில் வேட்டையாட சென்று திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது அவன் வந்த குதிரை, வழியில் ஓர் அந்தணனை மிதித்துக்கொன்று விட்டது. அதனால் பாண்டிய மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
  • அதன் காரணமாக அவன் அநேக நேரங்களில் மனநிலை மாறி, தன் நிலை இழந்துதிரிந்தான். பாண்டிய மன்னன், மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கிமுறையிட்டான். அப்போது ஒலித்த அசரீரி, திருவிடைமருதூர் சென்று அங்குள்ளஈசனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்று கூறியது.
  • இதையடுத்து வரகுண பாண்டியமன்னன் திருவிடைமருதூர் திருத்தலம் வந்தான்.காத்திருந்த பிரம்மஹத்திகாத்திருந்த பிரம்மஹத்திமகாலிங்க சுவாமியை வணங்குவதற்காக பாண்டியன் ஆலயத்துக்குள் பிரவேசித்தபோது, அவனைப் பற்றிக் கொண்டிருந்த , சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சிக்கொண்டு மன்னனை விட்டு வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடித்துமன்னன் திரும்பி வரும்போது, மீண்டும் அவனைப் பிடித்துக் கொள்ள எண்ணியபிரம்மஹத்தி அங்கேயே காத்திருந்தது.
  • தோஷம் நீங்க வழிபாடுதோஷம் நீங்க வழிபாடுவரகுண பாண்டியன் மகாலிங்கத்தின் முன் நின்று வழிபட்டபோது, இறைவனின் பூரணகுணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி, வந்த வழியேமீளாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான். கோவில் ஆலயத்தின் வாசலில், தலையை சாய்த்தபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கும் கற்சிலைஒன்று காணப்படுகிறது. அதைத்தான் பிரம்மஹத்தி என வர்ணிக்கிறார்கள்.
  • மனநோய் தீர்க்கும் தலம்மனநோய் தீர்க்கும் தலம்இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன்நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். இங்குள்ளகாருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் குளிக்க வைத்து காலை, மாலை இருவேளையும்மகாலிங்கசுவாமியை வழிபடச் செய்வார்கள்.
  • தற்போது இந்த ஆலயத்தில் தோஷபரிகாரம் செய்யப்படுகிறது. மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரேமருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகும்.பரிகார தலம்பரிகார தலம்திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம்உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலேபாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன.
  • மகாலிங்க சுவாமிஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள்பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடுசெய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டும்.
  • எங்கு எப்படி செல்வதுஎங்கு எப்படி செல்வதுஇத்தலப் பெருமானை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப்புலவர் முதலானோர் பாடியுள்ளனர்.
  • பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்இதுவாகும். இத்தலத்தில் உள்ள அசுவமேதத் திருச்சுற்றை வலம் வருவோர் அசுவமேதயாகம் செய்த பலனைப் பெறுவர்.கொடுமுடித் திருச்சுற்றை வலம் வருவோர் கயிலாயமலையை வலம் செய்த பலனை அடைவர்.

நீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலக்குடி

தல வரலாறு:

  • மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர்.
  •  மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார்.
  • இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி
  • பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
தலத்தின் சிறப்பு:

  • இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
  • எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது.
  • இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.
  • அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது.
  • ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய் உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.
கோவில் அமைப்பு:

  • இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயிலகள் உள்ளன. முதல் நுழைவாயில், 2-ம் நுழைவாயில் இரண்டிறகும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
  • இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.
  • ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது.
  • அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது. பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள்.
  • இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்ள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது.
  • மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இறைவனை வழிபடலாம்.
  • பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
  • இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால்,அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை,ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார்.
  • இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.(ஏழூர்களாவன - இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி). இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.
  • திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பல்லவ மன்னன் அமணர்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானை கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்திய போது, அவர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.
  • இத்தலத்து பதிகத்தின் 7-வது பாடலில் அப்பர் இதனைக் குறிப்பிடுகிறார். "அமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி மன்னர் உத்திரவின்படி கடலில் வீச, என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி இறைவனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்" என்று அப்பர் பாடியுள்ளார்.
  • மேலும் தனது பதிகத்தில் "தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் இறக்கும் போது உம்முடன் வரார், ஆகையால் நாள் தோறும் நினைத்து தொழுது சிவகதி சேர்வீர் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி இறைவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக" என்றும் அறிவுறுத்துகிறார்.

தலைவிதியை மாற்றும் திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர்!

  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள  திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் என்ற பெயரில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.  இந்த திருத்தலத்தில் இவரை வணங்கினால் தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்தவராகவும், மனவியாதிகள் மற்றும் தீராத துன்பங்கள் தர முயலும் கொடிய தரித்திரங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • இக்கோயிலின் முன்பகுதியானது 120 அடி உயரமுள்ள ஓரு ரதத்தினை ஓத்துள்ளது. ரதத்தின் சுவர்கள் மற்றும் கோயில்கள் சுவர்களில் இராமாயணத்தில் வரும் காட்சிகள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.  
ஸ்ரீ சரபேஸ்வரரின் தோற்றம்:
  • இரணியன் என்ற அசுரன் பரம்பொருளை நோக்கி சாகாவரம் வேண்டி தவம் செய்து ஈசனிடம்  இருந்து தேவர், மனிதர், விலங்குகள்  முதலியவற்றாலும் பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற அரிய வரத்தினை கேட்டான்.
  • எதிர்காலத்தில் நடப்பன எல்லாவற்றையும் அறிந்த பரம்பொருள், இரணியனுக்கு அவன் வேண்டிய வரத்தினை அளித்தார். இதனால், தன்னை  எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற கர்வத்தில் தானே கடவுள். இதனால் தன்னை மட்டுமே அனைவரும் கடவுளாக வணங்கவேண்டும் எனக்கூறி கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான்.
  • இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான் பிரகலாதன். அதாவது அவனது மனைவி கர்ப்பம் தரித்த நாள் முதல் நாரத மாமுனி, தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு போதித்த ஹரி ஸ்ரீமன் நாராயணன் நாமத்தைக் கேட்டு பிறந்தான். எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனைக் கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான்.
  • பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி எங்கே உன் கடவுள்? எனக் கேட்க, பிரகலாதனோ என் கடவுள், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனக் கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க அதிலிருந்து நரசிம்ம உருக்கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன்.
  • இரணியனது வரத்தின்படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலோ இல்லாத அந்தி நேரத்தில் எவ்வித ஆயுதங்களும் இன்றி தன் நகத்தினால், வீட்டுக்கு உள்ளேயும் இல்லாது, வெளியேயும் இல்லாது  வாசற்படியில் வைத்து அவனை வதம் செய்தார்.
  • இரணியனின் குருதியைக் குடித்தால் மதி மயங்கி ஆக்ரோஷமானார் நரசிம்மர். இதனால் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் அனைவருக்கும் பயம் வந்தது. மனைவியாக இருந்தாலும் லட்சுமிக்கும் நரசிம்மர்மேல் பயம் வந்தது. எங்கே தன்னையும் கொன்று விடுவாரோ என பயந்து தேவர்களுடன் எல்லாம் வல்ல ஈசனின் திருவடிகளில் சமர்ப்பணமானார்கள்.
  • கருணைக் கடலான ஈசனுக்கு கோபம் வந்தது. இதனால் எட்டுக் கால்களும், நான்கு கைகளும், இரண்டு இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்கள்,யாளி முகம் கொண்ட சரபேஸ்வரராக மாறினார். பாதி உருவம் அகோர பறவையாகவும், மீதி உருவம் அகோர மிருகமாகவும் இருந்தது. மாமிச வெறியுடன் கூடிய ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்த நரசிம்மர் முன் தோன்றினார்.
  • மிக பயங்கரமான எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மர், தன்னை அழிக்க ஓரு சக்தி வந்திருப்பதாக எண்ணினார். சரபேஸ்வரரோ ஒங்கி ஹாஎன சத்தம் எழுப்பியவுடன் அண்டங்கள் அதிர்ந்தன. மேலோகங்கள் ஆடின, நரசிம்மருக்கு கோபம் போய் பயம் வந்தது.
  • அந்தப் பயத்தினால் சரபேஸ்வரரின் நாராயணனாகி, லட்சுமியுடன் சேர்ந்து ஈசனை வணங்கினார். இவ்வாறு பரம்பொருள் ஈசன் பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். 
விதியை மாற்றும் ஸ்ரீ சரபேஸ்வரர்:
  • ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட உகந்த நேரம் ராகு காலமாகும். ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் நோய்கள் நீங்கும். செயல்களில் வெற்றி பெறுவார்கள். எத்தகைய விதியையும் மாற்றும் வல்லமை சரபேசுவரருக்கு உண்டு.
  • இந்த கலியுகத்தில் மனிதன் தன்னுடைய அபரிதமான அறிவியல் வளர்ச்சியால் ஏற்படுத்திக் கொடுக்கும் எல்லாவிதமான ஆபத்துகளில் இருந்தும் தப்புவதற்கு சரணடைய வேண்டிய ஓரே தெய்வம் ஸ்ரீசரபேஸ்வரர். இவரை வேதங்கள் அழிக்கும் கடவுளான அக்கினி தத்துவத்துக்கு உரியவராகக் குறிப்பிட்டாலும் நமக்குக் கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளையும் அழித்து நம்முடைய தன்பங்களை தீர்த்து, தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்கும் தெய்வம் சரபேஸ்வரர்.
  • இயற்கையின் சீற்றங்களான நிலநடுக்கம், இடி, புயல், மழை, சூறாவளி, ஆழிப் பேரழிவு, தீவிபத்து, விஷக்கடிகள், மருத்துவத்தால் கைவிடப்பட்ட மாறாத உடல் உபாதைகள் மற்றும் மனவியாதிகள் என்று தீராத துன்பம் தர முயலும் கொடிய தரித்திரங்களும் சரபரை வழிபடும் பக்தனைத் தாக்காமல் விட்டு ஒடிவிடும்.
  • இப்படி விதியையே புரட்டிப்போட்டு நல்லதை செய்யும் சக்தி சரபேஸ்வரருக்கு மட்டுமே உண்டு. எதிரிகள் குலநாசம், பில்லி,சூனிய ஓழிப்பு, மரண பயம் அகலுதல், நீடித்த ஆயுள், எந்த வியாதியும் நெருங்காத சூழ்நிலை என்று பாதுகாப்பு வளையங்களாக சரபேஸ்வரர் வழிபாடு திகழ்கிறது. 
  • மேலும் இவரை நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும்  குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும், பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]