Search This Blog

Saturday, 8 September 2018

என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும்

தார்த்த குண சிந்தாமணி எனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வைத்திய நூல் என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் மற்றும் குணநலன் எப்படி மாறும் என விளக்கி உள்ளது.

உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகரிக்கும்...புளி அதிகமானால் பொறாமை குணம் அதிகரிக்கும்.தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் உண்டகும்.மாமிசம் அதிகம் உண்டால் காம உணர்வை அடக்க முடியாது.காரம் அதிகமானால் கோபம் அதிகரிக்கும்.பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்.கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்.இவற்றை சமமாக எடுத்துக்கொண்டால் பக்குவமாக வாழ முடியும்!!

நவகிரக தோசம் போக்கும் முறை

ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் ,தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர்.அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.இதன் மூலம் நவகிரக தோசங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலாம்

கடன் சுமை நீக்கும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை

  • திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. 
 
  • மகரிஷி மோட்ச தலம் :மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.
 
  • ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
 
  • இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
 
  • பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]