Search This Blog

Thursday, 1 September 2016

சுவாமிமலை - நான்காவதுபடை வீடு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

தந்தைக்கே குருவான கதை :


  • படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.
  • ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.
  • அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

முருகப்பெருமான் காட்சி :

  • இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.
  • மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

தலவிருட்சம் நெல்லி :
  • நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.
  • அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

இயற்கையான மலை அல்ல :

  • சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.
  • தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

  • மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.
  • மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.
*************************************************

ஸ்ரீ சாயி தரிசனம்


தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை.
  •  நல்லவனோ, கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்துவிட்டவர்களை நான் புறம் தள்ளுவது இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக்கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான். நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை. அதேபோல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன். -ஸ்ரீ சாயி தரிசனம்.
பாபாவின் வழிகள்..
  • ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. உபதேசம் அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரை தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார். 
தாசனாக நின்றிருப்பேன்
  • நான் என் பக்தனின் அருகிலேயே தாசனாக நின்றிருப்பேன். அவர்களின் பிரேமையே எனக்கு உணவு. அதற்காக நான் பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன்
  • யாருடைய கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்து உருகி ஓடுகின்றனவோ அவர்கள் ஆத்மார்த்தமாக வேண்டுகிறார்கள். மற்றவர்கள் அந்த அவசியத்தில் இல்லை என்பதால், மேம் போக்காக வேண்டுகிறார்கள். எந்த வெள்ளம் புரண்டுவருகிறதோ அந்த வெள்ளம் வழிகளை உண்டாக்குகிறது. எங்கே நீர் வரத்து இல்லையோ அங்கே வழிகள் உண்டாவதில்லை. இதுதான் கண்ணீருடன் வேண்டுகிற வேண்டுதலுக்கும், கடமைக்காக வேண்டுகிற வேண்டுதலுக்கும் இடையேயுள்ள வித்தியாசம்.
  • என்னிடமிருந்து பற்றிக்கொண்டாயே எனக் கேட்டு அழாதே. நீ என்னைப் பற்றிக் கொண்டு என்னிடமிருக்கிறாயே! நான் என்ன பேரு பெற்றவன் என எண்ணி அழுது என்னைப் போற்று. என்னை வணங்குவதற்காக பூஜை புனஸ்காரங்கள் செய்வதையும், பிறர் பாராட்ட நடந்து கொள்வதையும் தவிர்த்துவிடு. நான் இதை விரும்புவதில்லை. வெளிப்படையான ஆடம்பர வழிபாட்டுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை.
  • காரணம், அதைச் செய்வதற்கான பலனை உடனே அடைந்துவிட முடியும். அதற்கு மேல் பலனை எதிர்பார்க்க முடியாது அல்லவா? ஆத்மார்த்தமாக -இதயத்திற்குள் என்னை குடியேற்றி, அங்கே என்னை வழிபடு. அப்போது உன் மனதும், செயலும் யாருக்கும் தெரியாது. அனைத்தும் ரகசியமாக இருப்பதால், நானும் எல்லா விஷயங்களையும் ரகசியமாகவேச் செய்து தருவேன்
பக்தர்களிடம் பாபாவின் அன்பு
  • பாபாவுக்கும், பக்தனுக்கும் இடைவெளி ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள். பக்தன் பாபாவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் மரியாதையே. பக்தன், தான் பாபாவோடு ஒன்றியவன் என்ற எண்ணத்திலேயே பாபாவை வழிபடுகிறான். பாபாவும் பக்தனை தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர அன்பை பக்தன் புரிந்துகொள்ளவேண்டும்
துன்பம் என்ற எண்ணம்...
  • கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைதுக் கொண்டிருந்தால் என் மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். -ஷிர்டி சாய்பாபா
பக்தர்களிடம் பாபாவின் பரிட்சை
  • நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் அற்புதத்தைச் செய்வதே இல்லை. எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்கு தன்னம்பிக்கையைத் தருகிறார். பொறு, உன்னுடைய கவலைகளை தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசுதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார், என்று, பக்தனுக்கு பாபா நம்பிக்கை தருவார்.
  • பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சனைகள் அதிகமாகும். நம்பிக்கையே போய்விடும். வேறு எங்காவது போய் பார்க்கலாமா? என எண்ணத்தோன்றும். இப்படி அடிக்கடி மனம் மாறுகிறாயா? தன்னம்பிக்கை இழக்கிறாயா? அல்லது வருவது வரட்டும், பாபா தான் என்னோடு இருக்கிறாரே! என தைரியமாக இருக்கிறாயா? என்பதை அவர் கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய் என வேடிக்கைப்பார்ப்பார்.
என் அனுகிரகத்தை பெறுவார்கள்
  • லோபம், டாம்பீகம், மன அழுக்கு, கபடம், பொய் முதலியன யாரிடம் இருக்கிறதோ அப்படிப்பட்டவர்கள் என் தரிசனம் பெற்றாலும், அவர்களுக்கு கிடைக்கும் பலன் தாமரை இலையின் மீது தண்ணீர் போன்றதே. அவைகளை வெளியேற்றிய மறு நிமிடமே அவர்கள் என் அனுகிரகத்தை பெறுவார்கள். ஷிர்டி சாய்பாபா
பாபாவின் உடனடியான பிரதிச் செயல்
  • ஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும், தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது. அவரது முறை திரையிடப்பட்டதோ இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை.
பலவீனர்கள்
  • என்னை எப்போதும் தங்கள் இதயத்தில் நிலை நிறுத்திக்கொள்வோர் பலவீனர்கள் ஆகமாட்டார்கள்.- ஷிர்டி சாய்பாபா

உன்னை சூழ்ந்துகொண்டு உடன் வருகிறான்
  • அறியாமை உள்ளவர்களை நான் அதிகம் நேசிக்கிறேன். மேதையைத் தள்ளி பேதையிடம் என் ஞானத்தை வெளிப்படுத்துகிறேன். குழந்தைகளின்வார்த்தைகளால் உலகத்தோடு பேசுகிறேன். இதையெல்லாம் புரிந்துகொண்டு, எழுந்து தைரியமாகப் போ! எதையும் தாங்கிப் பார் வாழ்ந்துவிடலாம். இந்த சாயி உன் பின்னாலும், உனக்கு முன்னாலும், உன்னை பக்கவாட்டுகளிலும் சூழ்ந்துகொண்டு உடன் வருகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு என் பெயரை உச்சரித்து வா! - ஸ்ரீ சாயி-யின் குரல். தீர்வு கிடைக்கும்.

சாயியின் நிழற்படம்
  • 'சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். ' ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. பாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான் வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள். 

உணர்வுகளோடு செல்பவருக்கு தீர்வு நிச்சயம்
  • பாபாவிடம் ஜாதி, உடம்பு, நிறம், பணக்காரன், ஏழை, ஆண், பெண், திருநங்கை என்ற எந்த ஒரு பேதமும் இருந்ததில்லை. சுத்தமான பக்தி, தூய்மையான மனம், நான் இந்த உடலல்ல, புனிதமான ஆன்மா என்ற ஒரு உணர்வு ஆகியவையே முக்கியம். இந்த உணர்வுகளோடு செல்பவருக்கு தீர்வு நிச்சயம் கிடைக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்
🙏🙏🙏🙏

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]