Search This Blog
Thursday, 4 August 2016
ஷீரடி பாபா பாதம் பணிவோம்
🙌பக்தியை அதிகப்படுத்துவேன்
நீர் உமது கடமையைச் செய்யும்.சிறிதளவும் அஞ்சாதீர்.என் மொழிகளில் நம்பிக்கை வையும்.என்னுடைய லீலைகளை நினைவில் கொள்.நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்
🙌துன்பத்திலும் பொறுமை
துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா
🙌வெளிப்படையாக நான் செயல்படுவேன்
நீ வீட்டிற்குள் நுழையும்போது உனக்கு முன் நான் வாசலில் வந்து வரவேற்பதும், நீ வெளியில் செல்லும்போது உன்னை வழியனுப்பி விட்டு, துணையாகவும் வருவதும், உன் குரலுக்கு பதில் கொடுப்பதும் நானே! உன் வேண்டுதல் தாமாக நிறைவேறும் என்பதை புரியவைக்க இனி வெளிப்படையாக நான் செயல்படுவேன்.-ஸ்ரீ சாயியின் குரல்.
🙌உணவு
உணவு கொடுப்பவர், உணவு உண்பவர் என் வடிவங்களே, காரியநிமித்தம் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருகையில் நான் அவ்விதமாக அங்கு தோன்றிக் கொண்டிருப்பேன், எனக்கு ஒரு வடிவம் என்பதும் இல்லை, பெயரும் இல்லை. அப்படி அன்பு மழை பெய்விப்பவர் நானே என்று என்னை அறிந்து கொள்பவர் என் பக்தர்கள்.- ஷிர்டி சாய்பாபா
🙌நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன் எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம். நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீங்கள் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீங்கள் ரகசியமாக வைத்திருப்பினும் நான் அறிவேன். ஷிர்டி சாய்பாபா. சத்-அத்-15-66.
🙌ரகசியமாக வருகிறேன்
எனக்கு கேட்கும்படி மிக சப்தமாக நீ என்னை அழைக்கிறாய். நான் தெரியாமல் மிக ரகசியமாக உன்னிடம் வருகிறேன்- ஷிர்டி சாய்பாபா
🙌வருத்தம்
வார்த்தைகளால் மனிதர்களையோ, ஜீவராசிகளையோ, அடித்தோ இம்சிப்பதால் எனக்கு மிகவும் வருத்தம் ஏற்படுகிறது. ஷிர்டி சாய்பாபா
🙌பலவீனர்கள் ஆகமாட்டார்கள்
என்னை எப்போதும் தங்கள் இதயத்தில் நிலை நிறுத்திக்கொள்வோர் பலவீனர்கள் ஆகமாட்டார்கள்- ஷிர்டி சாய்பாபா
🙌பக்தி
நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்க்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்களுடன் திடமாக நிற்கிறேன்.-
ஷிர்டி சாய்பாபா
🙌ஏழைகளின் தோழன்
மிக உயர்ந்த செல்வம் ஏழ்மையே;ஒரு பிரபுவின் அந்தஸ்தைக் காட்டிலும் அது உயர்ந்தது.ஏழைகளின் தோழன் இறைவன்.பகீரே உண்மையான பேரரசர். துறவுத் தன்மை அழிவதில்லை.ஆனால் சாம்ராஜ்யம் விரைவில் மறைகிறது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
🙌பட்டினி
வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.
🙌என்னை மட்டுமே சார்ந்தவன்
நீ என்னை சார்ந்தவன்,என்னை மட்டுமே சார்ந்தவன்.ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கரையேற்றும் பொறுப்பை நான் தான் வகிக்க வேண்டும்.என்னை விட்டால் உனக்கு வேறு எவர் உளர்?-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
🙌🙏பாபாவின் அனுமதி🙌🙏
பக்தர் ஒருவர் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க விரும்பினால் அவரால் நினைத்த மாத்திரத்தில் ஷீரடிக்குச் சென்றுவிடமுடியது. அதற்கு பாபாவின் அனுமதி தேவை. பாபா விரும்பினால் ஒழிய யாராலும் ஷிர்டிக்குச் சென்றுவிட முடியாது.
பாபாவின் அருளால் ஷிர்டிக்குச் செல்லும் பேரு ஒருவருக்கு கிடைத்து விட்டால், அவர் ஷிர்டிக்குச் சென்று, தான் விருப்பப்பட்ட நாட்கள் வரை அங்கே தங்க இயலாது. பாபா அனுமதி கொடுக்கும் தினங்கள் வரையே ஷீரடியில் தங்க இயலும்.🙏🙏🙏🙏🙏🙏🙏
Subscribe to:
Posts (Atom)