Search This Blog
Friday, 13 January 2017
திலஹோமம்
பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் திலஹோமம்
- திலம் என்றால் எள். திலஹோமம் என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும் , தில ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான்.
- எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது.
- அந்த ஜாதகர் தில ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.
- எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை , என்று - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது.
- அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து - அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த தில ஹோமம்.
பூரி ஜெகன்னாதர் கோயிலின் அற்புதங்கள்
- கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
- கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
- பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலைமுதல் இரவுமுழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால் பூரியில் இதற்க்கு நேர்எதிராக நடக்கும்.
- இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
- இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை.
- இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும் ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.
- இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
- சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
சிவபெருமானின் குரு
- ஒரு தடவை பார்வதியும் பரமேஸ்வரரும் கைலாயத்தில் தனியாக இருக்கும்போது பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது , பார்வதி தேவி , சிவனை பார்த்து சொன்னார்கள். எல்லோருக்கும் அனைத்தையும் தான் தருகிறீர்கள். ஆனால் நமகென்று ஒரு ஏன் ஒரு வீடு கூட இல்லை என்றாள் .
- சிவபெருமான் சரி என சொல்லி ஒரு அருமையான வீட்டை சிருஷ்டி செய்தார், பார்வதிக்காகவும் தனக்காகவும். எப்போதும் போல் வீடு கட்டிவிட்டால், க்ருகப்ரவேசம் செய்யணுமே ., அதற்காக , தனது வீட்டு ஐயரை கூப்பிடவேண்டும் அல்லவா. அதுபோல்தான் தனது ஐயரை கூப்பிட்டு செய்ய சொன்னார் இறைவன். அந்த ஐயர் யார் தெரியுமா, வேறு யாரும் இல்லை., நம்ம ராவணன்தான் .
- ராவணன் வந்து க்ருகப்ரவேசத்தை தடபுடலாக செய்தான் .சிவனுக்கு ஆயிற்றே. ராவணனை மிஞ்சிய சிவ பக்தன் மூன்று உலகிலும் இல்லையே.
- காரியங்கள் முடிந்தன.இப்போது ஆசாரியரின் பூஜைக்காக, தக்ஷிணை கொடுக்கவேண்டும் அல்லவா.அதற்காக, ராவணனை சிவ பெருமான் கேட்கிறார். உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று. ராவணன் , தாங்கள்தானே கொடுக்கவேண்டும்,கொடுங்கள் என்றான். அதற்க்கு சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேளு , என்று சொன்னவுடன், ராவணன் கேட்டான், எதுகேட்டாலும் தருவீர்களா என்றான். சிவபெருமான் எதுவேண்டுமானாலும் கேள் என்றான்.
- அப்படியானால், சிவபெருமானே, உங்கள் வீட்டு க்ருகப்ப்ரவேச தட்சிணையாக, நீங்கள், இந்த வீட்டையே எனக்கு கொடுங்கள் என்றான். சிவனும் அப்படியே ஆகுக என்று கொடுத்துவிட்டார் தனது வீட்டை. அந்த வீடு எது தெரியுமா அன்பர்களே., அதுதான் இலங்கை ஆகும். அதனால்தான் ராவணன் தனது இருப்பிடமாக இலங்கையை வைத்துக்கொண்டான்/
சரவணபவ மந்திரத்தின் பொருள்
"சரவணம்" என்றால் தர்ப்பை."பவ" என்றால் தோன்றுதல்.
- தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் "சரவணபவ' என பெயர் வந்தது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த தீப்பொறிகள், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கையை அடைந்தன.
- அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. பார்வதிதேவி. அவர்களை ஒரே குழந்தையாக்கினாள். ஆறு முகம், பன்னிரண்டு கையுடன் முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.
எளிமையான திருஷ்டி கழித்தல் முறை - எலுமிச்சம் பழம்
- கடை வைத்திருப்பவர்கள் திருஷ்டி கழிக்க பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த வழிமுறை மிகவும் பலன் உள்ளதாகும். கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதை இடம் வலமாக மாற்றி எறியுங்கள்.
- அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.
Subscribe to:
Posts (Atom)