Search This Blog

Friday, 14 July 2017

சூரிய பகவான் - சூரியனார் கோயில் (NAVAGRAGA TEMPLES)


  • கும்பகோணத்துக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சூரியனார் கோயில். இங்கு நவக்கிரகங்களில் முதன்மையானவரும் உலகிற்கே ஒளி கொடுப்பவருமான சூரிய பகவான் சிவ சூரியப் பெருமாளாக எழுந்தருளியிருக்கிறார். சூரிய பகவானுக்குரிய நிறம், தானியம் போன்ற விபரங்கள் பின்வருமாறு:-
  • நிறம்: சிவப்பு
    தானியம்: கோதுமை
    வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
    மலர்: செந்தாமரை
    உலோகம்: தாமிரம்
    கிழமை: ஞாயிறு
    ரத்தினம்: மாணிக்கம்
    பலன்கள்: சகல காரிய சித்திகள் மற்றும் ஆகர்ஷணம்
  • சூரியனார் கோயிலுக்கு வெகு அருகிலுள்ளது திருமங்கலக்குடி எனும் திருத்தலம். ஐதீகப்படி திருமங்கலக்குடியில் சென்று அங்குள்ள பிராணநாதர் எனப்படும் சிவபெருமானை தரிசனம் செய்த பிறகு தான் சூரியனார் கோயிலுக்கு செல்ல வேண்டும் என கேள்விப்பட்டதால் முதலில் திருமங்கலக்குடிக்கே நாங்கள் சென்றோம். இக்கோயிலை பற்றிய விபரங்கள் தனியாக பிரசுரித்துள்ளேன்.
  • உலகம் தோன்றிய பொழுது முதன்முதலாக உலகெங்கும் வியாபித்த நாதம் ஓம் எனும் ஓம்காரநாதமாகும். அதிலிருந்து தோன்றியவர் தான் சூரிய பகவான் என ஸ்ரீ மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது. மாரீசி எனும் மஹாரிஷியின் புதல்வரான கசியப முனிவருக்கு பிறந்தவர் தான் சூரிய பகவான் என்றும், விஸ்வகர்மாவின் புதல்வியான சூர்வர்சலா தான் சூரிய பகவானின் பத்தினி எனவும் புராணம் கூறுகின்றது. வைவஸ்வத மனு, யமதர்மன் என்ற புதல்வர்களும் யமுனை என்ற புதல்வியும் சூரிய பகவானின் குழந்தைகள் என அறிகிறோம். அதே நேரம் சாயா தேவியின் புதல்வராக சனி பகவானும், குந்தி தேவியின் புதல்வராக கர்ணனும், சூரிய பகவானுக்கு பிறந்தவர்கள் எனவும் மற்ற புராணங்களிலிருந்தும் மகா பாரதத்திலிருந்தும் அறிகிறோம்.
  • சூரிய பகவானின் தேருக்கு ஒரே ஒரு சக்கிரம் மட்டுமே உள்ளது என்றும் அத்தேரை இழுக்கும் குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தை உடையவை என்பதும் சிலருக்கு தெரியாது. தனது பக்தர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என்பவற்றோடு புகழையும் எதையும் சமாளிக்கும் ஆற்றலையும் வழங்குகிறார் சூரிய பகவான். அதர்வண வேதத்தின் படி சூரியனை தியானிக்கும் பக்தர்களுக்கு பார்வை மற்றும் இதய கோளாறுகள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
  • காலை 6-லிருந்து மதியம் 12:30 வரைக்கும் திறந்திருக்கும் இத்திருக்கோவில் மீண்டும் மாலை 4-லிருந்து இரவு 8-வரை தினமும் திறக்கப்படுகின்றது. மூன்று அடுக்குகளை கொண்ட இக்கோயிலின் கோபுரம் சுமார் பதினைந்தரை அடி உயரம் உள்ளதாகும். இராஜகோபுரத்தின் வடக்கே சூரிய புஷ்கரிணி என்ற திருக்குளம் உள்ளது. இங்கு குளித்து விட்டு தரிசனம் செய்தல் சாலச் சிறந்தது.
  • கோயிலுக்குள் நுழைந்தவுடன் பலிபீடத்தின் கிழக்கே ஒற்றைக் குதிரையை தரிசிக்கலாம். சூரிய பகவானின் வாகனமான குதிரைக்கு "சப்த" என்ற பெயரிடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் முதலில் "கோள் தீர்த்த விநாயகர்" சன்னதியை தரிசித்த பின்னர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி தாயாரை தரிசித்து, உஷா மற்றும் பிரத்யுஷா (சாயா தேவி) ஆகியோருடன் சயனித்திருக்கும் சூரிய பகவானை தரிசிக்கலாம். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் இங்கு மற்ற கிரகங்கள் யாவும் சூரிய பகவானை நோக்கிய படி இருப்பது தான். சூரிய பகவானுக்கு நேர் எதிரே அவரது உக்கிரத்தை தணிக்கும் படியாக குரு பகவான் நின்றிருப்பதை காணலாம். கிரக தோஷம் நீங்குவதர்க்காக வரும் பக்தர்களை இங்கு அதிகமாக காணலாம். குறிப்பாக, அஷ்டம சனி, ஜன்ம சனி மற்றும் சனியின் இதர தோஷங்களால் அவதியுறும் பக்தர்கள் இங்கு வந்து சூரிய பகவானை தரிசிதார்களேயானால் தோஷ நிவாரணம் பெற முடியும் என நம்பப்படுகிறது.
  • சூரிய பகவானை தரிசித்த பிறகு, இதர கிரகங்களையும் தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும் கோள் தீர்த்த விநாயகரை தரிசித்து பலிபீடத்துக்கு அருகில் நமஸ்கரித்து பிறகு கோயிலை வலம் வர வேண்டும் என்ற சம்பிரதாயம் இங்கு உள்ளது.
**************

திருப்பாம்புரம்


  • மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் திருபாம் புரம் பாம்பு புரேஸ்வர் ஆலயம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.
  • திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம்.
  • ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும்.
  • மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.
  • ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
  • தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. 
  • சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
  • இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்பு புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகி விடுகின்றன. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். 
  • இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.
  • ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

கேது

கேதுவுக்கான பரிகார தலம் நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம் பாடி வட்டத்தில் கீழ்ப்பெரும் பள்ளம் என்ற இடத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய கோவில். இதற்கு ராஜகோபுரம் கிடையாது. கோவிலின் முன்பு நாகத் தீர்த்தம் அமைந்துள்ளது. அதன் கீழ்க்கரையிலும், மேல்கரையிலும் அரசும் வேம்பும் உள்ளது. நாகதோஷ முள்ளவர்கள் இம்மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்யலாம். கோவிலைச் சுற்றி உயரமான மதில்கள் உள்ளன. 

ஆலயத்தின் உள் நுழைந்து வலது பிரகாரத்திற்கு வந்தால் மேற்குப் பிரகாரத்தின் திருமாளிகைப் பத்தியில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, துர்க்கை, லட்சுமி நாராயணர், மகேஸ்வரி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்களைக் காணலாம். கிழக்குப் பிரகாரத்தில் திருமாளிகைப் பத்தியில் சனீஸ்வரர், பைரவர், சம்பந்தர், நாகர், சூரியன் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. இங்கு மேற்கு நோக்கிய நிலையில் கேது எழுந்தருளியுள்ளார். 

தேகம் தெய்வ வடிவிலும் தலை ஐந்து தலை நாக வடிவிலும் இருகைகளும் கூப்பிய நிலையில் உள்ளார். இவரை வழிபட்ட பின் மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியையும் பலிபீடத்தையும் வணங்கி மஹா மண்டபத்தில் உள்ள கருவறையில் எழுந்தருளி இருக்கும் லிங்கவடிவில் உள்ள நாகநாத சுவாமியையும் தரிசிக்கலாம். 

மூலவரை வணங்கியப்பின் அர்த்த மண்டபத்திலுள்ள, பஞ்சமூர்த்திகள், நடராஜப் பெருமாள் மற்றும் கேது ஆகிய தெய்வங்களைத் தரிசித்து, திரும்ப மஹா மண்டபத்திற்கு வரும்போது தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் சவுந்தர நாயகியைத் தரிசிக்கலாம். இத்திருக்கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். நாலு காலப் பூஜை இங்கு நடைபெறுகிறது. 

மண் மருது
நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

சித்ர குப்தரை வழிபடுங்கள்
மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள கோடங்கிபட்டியில் அருளும் சித்திரகுப்தரை பவுர்ணமி தினங்களில் வழிபட்டால் கேது தோஷம் நீங்குகிறது. கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தர் ஆவார்.

தடைகள்விலகும்
சென்னை, பல்லாவரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநீர்மலை. இங்கு குளக்கரையில் தூமகேது கணபதி அருள்கிறார். தூமம் ராகுவையும் கேது கேதுவையும் குறிக்கும். ராகு-கேது அம்சமாய் விளங்கும் இவரை தரிசித்தால் அரவு கிரகங்களால் ஏற்படும் சுபகாரியத் தடைகள் விலகி மங்களங்கள் உண்டாகும்.

புனுகு சட்டம் சாற்றுங்கள்
நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ மணல்மேடு வழியில் கோயில் கொண்டிருக்கிறார் புற்று வடிவான சிவலோகநாதர். இவருக்கு திங்கட்கிழமைகளில் புனுகுச்சட்டம் சாற்றி வழிபட ராகு-கேது தோஷங்கள் விலகுகின்றன.

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]