Search This Blog

Monday, 17 July 2017

தர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும்

 தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி

  • தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி உண்டு.
  • வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும் வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்
  • தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்போது புகை கொஞ்சமாக வரும், அந்த புகையை வீடு முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்


செல்லும் பணம் திரும்பி வர சூட்சும்

  • அன்றாடம் நாம் பிறருக்கு பணத்தை கொடுக்கும் பொழுது, அதாவது செலவழிக்கும் பொழுது பெரும்பாலும் பணத்தை அப்படியே எடுத்து கொடுத்து விடுகிறோம். மாறாக, பணத்தை நன்கு கைகளால் தடவி, உணர்ந்து பின்பு "சென்று வா-திரண்டு வா" என்ற மந்திரத்தை 3 முறை மனதினுள்கூறியவாறே பணத்தை கொடுக்க, கொடுக்கும் பணம், பன் மடங்காக நம்மிடம் திரும்பும் என்பது உறுதி. முடிந்தால் பணத்தை நெற்றி பொட்டருகே மடித்து வைத்து மந்திரம் கூறியும் கொடுக்கலாம்.

பசுவின் குணங்கள்!!

  • பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால் அதிலிருந்துகிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமாஎன்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.
  • 90 நாட்கள் பசுவுக்கு தினமும் அந்த விஷத்தை கொடுத்து விட்டு அதன்பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்விஷத்திற்கான எந்த தடயமும் அந்தபாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்கு தான் போனதுஎன்று ஆராய்ந்துபோது ஆச்சர்யம்அடைந்தார்கள்.
  • ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தைதன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.
  • அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்கவைத்திருக்கிறதாம்அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்குஅகத்திக் கீரை கொடுக்கிறோம்.

செவ்வாய் தலம் :::: வைத்தீஸ்வரன் கோவில் (NAVAGRAGA TEMPLES)


"இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் 

சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். 
இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் 
முதலானவையும் கூட அகலும் என்பர்." 

  • தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது. தருமையாதீனத்திற்குச் சொந்தமான 27 கோயில்களுள் மிகவும் புராதனமான, பிரபலமான ஒன்றாகும் இங்குள்ள கோயில்.

  •  திருச்சாந்துருண்டை: இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது. ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது. இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து, பின் முக்தி எய்துவர். இங்கு அர்த்த சாமப் பூஜை செல்வ முத்துக்குமார சுவாமிக்குச் செய்த பின்புதான் ஸ்வாமிக்குச் செய்யப் பெறுகின்றது. அர்த்தசாமப் பூஜையின்போது முத்துக்குமார சுவாமிக்கு அணிவிக்கப் பெறும் சந்தனமான ‘நேத்திரிப்படி’ சந்தனமும் வேண்டிய வரம் தரவல்ல மகிமையுடையது. இந்தச் சந்தனத்தை ‘புழுகாப்பு’ என்பர்.
  • மாதந்தோறும் வரும் கார்த்திகைவிழா இங்குச் சிறப்பானது. இந்நாளில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்க மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்புடையது. தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் மாதந்தோறும் கார்த்திகையன்று எழுந்தருள, அவர்கள் திரு முன்னி லையில் இந்த அபிஷேகம் நடைபெறுவது கண்கொள்ளக் காட்சி. அங்காரக் க்ஷேத்திரமாதலால் செவ்வாயக் கிழமைகளில் அங்காரகர் பிரகாரத்தில் வலம் வருவார். கார்த்திகை மாத சோம வாரங்களில் ஈசுவரனுக்குச் சங்காபிஷேகமும் உண்டு.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]