Search This Blog

Tuesday, 4 October 2016

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்


  • உயிரும் உடலும் ஆகிய மனிதன்
    மனித உடல் என்பது தேர். இந்த உடலாகிய தேரில் பயணம் செய்கின்ற பயணி ஜீவன்(ஆன்மா). இந்தத் தேரில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். இந்த ஐம்புலன்களாகிய குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளமாகிய கயிறு மனம். இந்தத் தேரை ஓட்டவேண்டிய புத்தி ஒழுங்காகச் செயல்படுபவனாக இருக்க வேண்டும். புத்தி ஒழுங்கானவனாக இருந்தால் ரதம் சரியாகப் பயணப்படும்
ஓம் - மூச்சி ஒலி (ஆன்மா)
- நிலம், தேவதை - நீலி, புலன் - மூக்கு, ஞானம்-வாசனை, கரணம்- முனைப்பு
- மழை(நீர்), தேவதை - மாரி, புலன் - நாக்கு, ஞானம்-சுவை, கரணம்- நினைவு
சி - நெருப்பு, தேவதை - காளி, புலன் - கண், ஞானம்-ஒளி, கரணம்- அறிவு
வா - வாயு, தேவதை - சூலி, புலன் - மெய், ஞானம்-உணர்வு, கரணம்- மனம்
- ஆகாயம், தேவதை - பாலி, புலன் - காது, ஞானம்-ஒலி,

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?

  • மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண்டு காலங்கள் (கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்) தங்கள் ராஜ்யத்தை ஆண்ட பிறகு, தங்கள் பிறப்பிற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ததால், இவ்வுலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.
  • மகாபாரதத்தின் மாசாலா பர்வாவும், மகாப்ரஸ்தானிக்கா பர்வாவும் இதனை பற்றி விரிவாக கூறுகிறது. அதிலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் கீழ் வருமாறு:
காந்தாரியின் சாபத்தை ஏற்ற கிருஷ்ணர்:
  • மகாபாரத போர் முடிந்தவுடன், தன் மகன்கள் இறந்த சோகத்தால், யாதவர்களும் இதேப்போன்ற சாவை சந்திப்பார்கள் என காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணரை சபித்தாள். இந்த சாபத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார்.
குறும்பு செய்த கிருஷ்ணரின் மகன்கள்:
  • 35 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் மகன்கள் சில ரிஷிகளிடம் குறும்பு செய்து விளையாடியதால் சாபத்தை பெற்றனர். கர்ப்பிணி பெண்ணை போல் வேடமணிந்து கொண்ட சம்பா பிற யாதவர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கிருந்த சில ரிஷிகளிடம் சென்று, தன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கூறும்படி கேட்டனர். அதில் கோபமடைந்த ஒரு ரிஷி, அவள் ஒரு இரும்பு துண்டை பெற்றெடுப்பாள் என்றும், அது அவனின் வம்சத்தையே அழித்து விடும் என்றும் சாபமளித்தார்.
பிரபாசாவிற்கு புனித பயணம்:
  • தீய சக்திகளும், பாவ நடவடிக்கைகளும் துவாரகையில் அதிகரித்தது. மற்றவர்களை பிரபாசாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.பிரபாசாவில் யாதவர்கள் மது அருந்தி போதையில் மதி மயங்கினார்கள். அவர்களுக்குள் மூண்ட சண்டையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் கொன்று இறந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர், தரூகா, வப்ரூ மற்றும் பலராமன் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால் பின்னர் வப்ரூவும், பலராமனும் கூட இந்த உலகை விட்டு பிரிந்தனர்.
அவதாரத்தை முடித்த அர்ஜுனன்:
  • அர்ஜுனனிடம் தகவலை கூறி உதவி கேட்க தரூகாவை அனுப்பி வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த சமயத்தில், ஒரு வேடன் செலுத்திய அம்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் தவறுதலாக பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். வேடனை தேற்றிய ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு பகவானின் ஓவியத்தோடு ஒன்றிப்போனார். அதோடு இந்த அவதாரத்தை முடித்துக் கொண்டு உலகத்தை விட்டும் பிரிந்து சென்றார்.
  • ஸ்ரீ கிருஷ்ணரின் விதவை ராணிகளை காக்க முயற்சி செய்தான். ஆனால் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போட்ட சண்டையில் தோல்வி அடைந்தான். பாண்டவர்களின் வாழ்க்கைக்கான நோக்கம் முடிந்து விட்டது என வேதவியாசர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்.
இமயமலை பயணத்தை மேற்கொண்ட பாண்டவர்கள்:
  • பரிக்ஷித்திற்கு யுதிஷ்டர் முடிசூட்டிய பின்பு 5 பாண்டவர்களும் திரௌபதியுடன் இமயமலை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். மலையின் மீது செல்லும் போது ஒரு நாய் அவர்களை பின்பற்றி சென்றது.
  • மலையை ஏறும் வழியில் திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்ஜுனன் மற்றும் பீமன், அதே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து இறந்தனர்.
யுதிஷ்டரை வரவேற்ற இந்திரன்:
  • யுதிஷ்டர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவரை வரவேற்க சொர்க்கத்திற்கு தன் ரதத்தில் வந்து சேர்ந்தான் இந்திரன். அந்த நாயை அப்படியே விட்டு விட்டு, அந்த ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்கு செல்லுமாறு யுதிஷ்டரிடம் இந்திரன் கூறினார்.
  • அந்த நாய் தனக்கு நண்பனாகி விட்டதால், தன்னுடன் நாய் வராத வரை தான் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டேன் என மறுத்தார் யுதிஷ்டர். உடனே அந்த நாய் எமனாக உரு மாறியது. தன் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டதாக யுதிஷ்டரிடம் எமன் கூறினார். அதன் பின் யுதிஷ்டர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.
பாற்கடலுக்குள் மூழ்கிய துவாரகை:
  • இப்படி பல விதமான நிகழ்வுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரும் பாண்டவர்களும் இந்த உலகை விட்டு சென்றனர். துவாரகை நகரம் பாற்கடலுக்குள் மூழ்கியது. மெதுவாக தற்போதுள்ள கலியுகமும் தொடங்கியது.

மஹாபாரதம்


  •  மகாபாரதம் என்னும் இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்டது. குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
  • மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்
  • சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண் மீது ஆவல் கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும் போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
  • இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார்.
  • வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
  • சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்து கொள்ளாமலேயே இறந்து போகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
  • அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
  • இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
  • திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.
  • திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன்.
  • குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.
  • கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.
  • திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.
  • பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்று விடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.
  • பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
  • சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.
  • இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
  • போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான்.
  • பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.
  • பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]