Search This Blog

Thursday, 16 August 2018

நாச்சியார் கோயில் - ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர்நம்பியான ஸ்ரீனிவாச பெருமாள்


  • கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில்உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர்நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும்கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
  • ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில்ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவதுநாச்சியார் கோவில் திருத்தலம். இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாசபெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர். 

கோவிலின் வரலாறு:
  • கோச்செங்கணான் என்ற சோழமன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக்கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழமன்னன் கோச்செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன்பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்
கோவில் கோபுரம்:
  • இத்திருக்கோயில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் ஸ்தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது
  • மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளாதே விநாச்சியாராக வளர்ந்து வந்ததால், மகரிஷிமேதவி விருப்பத்திற்கிணங்க நாச்சியார்கோயிலாக இவ்வூரின் பெயர்மாறியது என்பதுபுராணகதை.
    • மேதவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார்வழக்கம்போல் ஓர்நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர்கைகளில் சிக்கியது.
    • அந்தக்கணம் ஓர்அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டைசெய்து பூஜித்துவருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்துவந்தார்.

  • மகரிஷியிடம் வளர்ந்த மகாலட்சுமி இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.
     
 பெருமாளின் விருப்பம் :
  • அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
     
மகாலட்சுமியின் திருமணம்:
  • அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது.
பெண் பெருமை போற்றும் நாச்சியார் கோவில்:
  •  பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது. 
கல் கருடன் ஊர்வலம்:
  •  கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும்.
  • நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம். 
தோஷம் நீக்கும்:
  • கல்கருடன் நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.  
சுமங்கலி பாக்கியம் :
  •  சுமங்கலி பாக்கியம்ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தைபாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். 
  • திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. 
சிரவண தினத்தில் மோட்சம்:
  • இக்கோவில் நந்தவனத்தில் இரண்டு கருட பட்சிகள் வசித்து வந்தன. தினமும் கோவில் பூஜை நேரத்தில் இக்கருட பட்சிகள் பெருமாள், தாயார், கருடன் பூஜை முடியும் வரை கோவிலிலேயே பிரகாரத்தின் சுவர்கள் மீது அமர்ந்திருந்து பூஜை முடிந்தவுடன் சென்றுவிடும்.
  • 1999 ஜனவரி 18ஆம் தேதி காலை பூஜைக்கு இவ்விரு பட்சிகள் வரவில்லை. பதைத்துப்போன அர்ச்சகர்கள், பக்தர்கள் கருட பட்சிகளை தேடிச் சென்ற பொழுது கோவில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே இவ்விரு கருட பட்சிகளும் ஒன்றை அணைத்தவாறு பகவானுக்கு உகந்த தினமான சிரவண தினத்தன்று மோட்சம் அடைந்தன. இதனை சிறப்பிக்க தனி சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர்.

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]