Search This Blog

Friday, 16 September 2016

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

  • குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் குன்றுகளில் முருகப்பெருமான் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.
  • அலகுமலை கோவில் தல வரலாற்றை அறிய வரலாற்று சான்றுகளும் இலக்கிய சான்றுகளும் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு ஒன்று கைலாசநாதர் கோவில் முன்பாக உள்ளது. அக்கல்வெட்டு கி.பி.1641–ம் ஆண்டு எழுதப்பட்டது.

பெயர் காரணம்:

  • அலகு என்றால் ‘மூக்கு’ என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் ‘அலகு மலை’ என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அலகு மலைக்கு கீழே அழகாபுரி அம்மன் என்ற ஊர்க்காவல் தெய்வம் ஒன்று இருப்பதால் இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். மலை மீது முருகப்பெருமான் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  • மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதையடுத்து படியேறி எட்டு தூண்கள் கொண்ட மண்டபத்தை கடந்தால், இடதுபுறத்தில் பாதவிநாயகரை தரிசிக்கலாம். அலகுமலை படிகளின் ஆரம்பத்தில் பாத விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு, வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடது புறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.

ஆறுபடை வீடுகள்:
  • இடும்பன் சன்னிதியைக் கடந்து மலையின் மேற்காக உள்ள 300 படிகளை கடந்து மேலே சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984–ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும். அத்துடன் சண்முகருக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. மலை பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். ஆறுபடை வீடு சன்னிதிகளின் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது.

  • இடும்பன் சன்னிதி அருகில் குழந்தை குமார் கோவில் உள்ளது. இங்கு அலகுமலை குமரன், பாலகனாக காட்சி அளிக்கின்றார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார். பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி இறைவன் காட்சி தருகிறார்.

முருகனின் சமயோசிதம்:

  • அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும் மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. கோவில் கருவறையில் முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணியாக, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  • ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, ‘இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முருகப்பெருமான், ‘அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை’ என்று கூறினார்.
  • இவ்விடத்தில் முருகப்பெருமான் கூறிய பதில் சமயோசிதமானது. அதாவது ‘அறன்மாதா’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ‘அறம் வளர்த்த நாயகி’ என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் ‘உயிர்களை காக்கும் நீர்’ என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.

  • இத்தகைய சிறப்புகளையுடைய பாலதண்டாயுதபாணியை காண கோவிலுக்குள் நுழையும் முதலிலே இருப்பது கொடிமரம். கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. தல விருட்சமாக வில்வ மரம் கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது.

  • கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக் கிறார்கள். இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

கவலை தீர்க்கும் கந்தன்
  • நடுவில் கர்ப்பக்கிரகம் உள்ளது. இதில் முருகவேள்   ‘முத்துகுமார பால் தண்டாயுதபாணி’ எனும் பெயர் தாங்கி கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண்டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். ஞான குருவான அவரை நெஞ்சாரப்பணிவோரின் குறைகள், கவலைகள், பிரச்சினைகள் தீர்வது இன்றும் நடக்கும் நிகழ்வாகும். சுமார் 4 அரை அடி உயர திருவுருவில் காட்சி அளிக்கும் முருகப்பெருமானை, வெள்ளிக் கவசத்தில் காணும்போதும் கண்கள் இமைகளை மூட மறுக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை காண சுமார் 300 படிகளில் ஏறி செல்ல வேண்டும். வாகனங்கள் கோவில் வரை செல்ல சாலை வசதியும் உள்ளது.

அமைவிடம்:
  • திருப்பூருக்கு தென்கிழக்கில் தாராபுரம் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் அலகுமலை கிராமம் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில், அழகு பெற்று எழில் சூழ்ந்த அலகுமலை காணப்படுகிறது. சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக உள்ளன. அது போன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்டமலை, ஊதியூர் மலை, பழனிமலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை காட்சியளிக்கிறது. இதுவும் அலகுமலையின் தனிச் சிறப்பு ஆகும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அவிநாசியப்பர்

 
  • திருப்புகழ் தலம்: அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
  • இந்த ஆலயத்தின் மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை(கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில் தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்றாகும்.
  • தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பிறகு 4வது பாடலாக

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
 அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
 புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
 காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே
 
  • என்று இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர்.

  • காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தலத்தின் இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏

பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும்!!!

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.  
ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். 
ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி `ஸ்ரீசந்திரிகா' என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். 
துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும். ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.  
• ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூஜை செய்பவரை எந்த நோயும் அணுகாது. 
•  திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஒரே நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும். 
•  செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோஷங்கள், பில்லி, சூனியம் தீரும். 
•  புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும். 
•  வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும். 
•  வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும். 
•  சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். 
நவக்கிரக தோஷம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.  பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.  விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம். 
  • பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.  
  • ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். 
  • ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி `ஸ்ரீசந்திரிகா' என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். 
  • துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும். ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.  
  • ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூஜை செய்பவரை எந்த நோயும் அணுகாது. 
  • திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஒரே நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும். 
  • செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோஷங்கள், பில்லி, சூனியம் தீரும். 
  • புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும். 
  • வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும். 
  • வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும். 
  • சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். 
  • நவக்கிரக தோஷம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.  பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.  விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம். 

பௌர்ணமி தினம்

  • பௌர்ணமி அன்று கோயில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.
  • சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் பெருமளவில் கிடைக்கும். வைகாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் வரன் கிடைத்து திருமணம் நடைபெறும்.
  • ஆனி மாத பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி அன்று விரதமிருந்து வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் பெருகும். ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் உணவு தானியம் பெருகி, பசிப் பிணிகள் முற்றிலும் நீங்கும்.
  • கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால், பேரும், புகழும் வளர்ந்து நிலைத்து நிற்கும். மார்கழி மாதப் பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியம் கிடைக்கும். உடல் பலம் கிடைக்கும். மாசி பௌர்ணமி அன்று விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பம் கிடைக்கும்.
  • பங்குனி மாதப் பௌர்ணமி நாளன்று விளக்கேற்றினால், தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும். இவ்வாறு தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமி நாளில் விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தந்திடும் என்பது நம்பிக்கை.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]