Search This Blog

Tuesday, 16 August 2016

சங்கரநாராயண சுவாமி கோவில் (ஆடித்தபசு)


SRI SANKARANARAYANAN SWAMY, SANKARANKOVIL



  • தென்னாட்டில் மிக சிறந்து விளங்கும் சிவ ஸ்தலங்களில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். முன்பு இத்திருத்தலத்தின் பெயர் புன்னைவனப்பேரி என்றும், சங்கரரும், நாராயணரும் இணைந்து ஒரு சேரகாட்சி அரு ளியதால் சங்கரநயினார் கோவில் என்றும் இதுவே நாளடைவில் மறுவி சங்கரன்கோவிலாக இன்று வழக்கத்தில் இருந்து வருகிறது.

  • இந்து சமயத்தில் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாத்தேயம், கானாபத்தியம், கௌ மாரம், பேரவம் போன்ற யாவும் அன்பே உருவான ஒரே இறைவன் தம் சக்தியை பல உருவங்களில் வெளிப்படுத்தி நம்மை ஆட்கொண்டுள்ளார் எனும் பெருமை நிலை நாட்டப்பட்டு இருப்பதை நாம் இத்திருத்தலத்தின் மூலம் காண முடிகிறது.

  • சங்கரநாராயண சுவாமி கோவிலை கி.பி. 11ம் நூற்றாண்டில் உக்கிரன்கோட்டையை ஆண்டு அரசாட்சி செய்து வந்த உக்கிரம பாண்டியன் மாமன்னன் கட்டினான். இவர் மணிக்கிரீவன் என்ற காவலின் சொல் கேட்டு புன்னை வனத்தின் புற்றின் அருகே இருந்த புன்னை வனக்காட்டினை சீர் செய்து, கோவிலை கட்டியதுடன், கோவிலின் முன் மண்டபங்களையும் கட்டி சுற்றுச்சுவரையும் எழுப்பினார்.

  • இக்கோவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்து மக்கள் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளப்படுவதை தடுத்து நிறுத்தவும், நாட்டில் இந்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தவும், பாம்பரசர்களான சிவ பக்தன் சங்கனும், விஷ்ணு பக்தன் பதுமனும் சேர்ந்து திருக்கயிலை மலையில் அருந்தவம் மேற்கொண்டனர். பாம்பரசர்களின் அருந்தவத்தை கண்ட பார்வதி தேவியார் பாம்பரசர்கள் முன்பாகத் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர்கள் இருவரும் சிவன், விஷ்ணு இந்த இருவரில் உயர்ந்தவர்கள் யார் என்று வினா எழுப்பினார்கள்.

  • இதில் அம்பிகை யாரை உயர்ந்தவர் என்று கூற இயலும். ஒருபுறம் கணவர் சிவபெருமான், மறுபுறம் சகோதரர் விஷ்ணு, இதற்கு தீர்வை அம்பிகை சிவபெருமானிடமே கேட்க,  அதற்கு ஈசனோ பொதிகை மலைச் சாரலில் புன்னைவனத்தில் தவம் மேற்கொள் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று அம்பிகைக்கு அருளினார்.

  • அதன்படி உமையம்மை தமைசூழ்ந்த பசுக்களாகிய வேதமாதர்களுடன் பார்வதி தேவி கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப் பெயர்களை தாங்கி புன்னைவனத்தில் தவம் மேற்கொண்டார். அம்மையின் அருந்தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு அரியும், சிவனும் இணைந்த சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினார்.
  • இந்த காட்சியைத்தான் ஆடித்தபசு திருவிழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து இறையருள் பெற்று வருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தமாக நாகசுனை நீரும், ஸ்தல விருட்சமாக புன்னைமரமும் விளங்குகிறது. இக்கோவிலின் இராஜகோபுரம் 125 அடி உயரத்தில் 9 நிலைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
  • புன்னைவனக் காட்டில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பாம்பு புற்றின் அருகே அமையப்பெற்ற சன்னதியாக சங்கரலிங்க மூர்த்தி சன்னதியும், சிவனும், அரியும் இணைந்து காட்சி அருளிய இடத்தில் சங்கரநாராயணசுவாமி சன்னதியும், சிவபெருமானை நோக்கி உமையம்மை கடுந்தவம் மேற்கொண்ட இடத்தில் கோமதி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது.
  • இங்கு ஒவ்வொரு தைத்திங்கள் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் தெப்பத் திருவிழாவும், 41 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவும், இத்திருத்தலத்தின் பிரம்மோற்சவம் ஆகும். உத்ராயண, தட்சிணாயன காலங்களில் சூரிய பகவான் தனது சாலைகளுடன் வந்து சிவபெருமானை பூஜிக்கும் தினத்தில் சூரிய பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
  • அந்த காலங்களில் சூரிய பூஜை என்ற விழா கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21,22,23 மற்றும் செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் சங்கரலிங்க மூர்த்தியை சூரிய பகவான் தரிசிப்பதை நாம் இன்றும் காண முடியும். கோவிலின் நுழைவு வாயிலின் வடபுறம் அமைந்துள்ள நாகசுனைத் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதை பாம்பரசர்களான சங்கனும், பதுமனும் ஏற்படுத்தினார்கள். இந்த தெப்பக்குளத்தில் மூழ்கி புற்றுமண் பூசி வழிபடுபவோர்களுக்கு விஷசந்துகளின் தொந்தரவில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • தமிழ்நாட்டில் நாகதோஷங்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதற்கு இக்கோயிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் 6 அடி உயரத்தில் சர்ப்பத்தை கையில் பிடித்தபடி சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோயிலின் ஐதீகம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து அன்னை கோமதியின் அருள் பெற்று செல்கின்றனர்.
  • பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் சங்கரன்கோவில் பாண்டிய  நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் முக்கிய பிரதான ஸ்தலமாக சங்கரன்கோவில் அருள்மிகு  சங்கரநாராயண சுவாமி கோவில் விளங்கி வருகிறது. சோழ நாட்டில் புகழ் பெற்ற  பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ்  பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது.
  • திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சுற்றிலும் பஞ்ச ஸ்தலங்கள் அமைந்துள்ளது. இதில் நிலம் (மண்) ஸ்தலமாக சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவிலும், நீர் (தண்ணீர்)  ஸ்தலமாக தாருகாபுரம் மத்தியஸ்த நாத சுவாமி கோவிலும்,நெருப்பு ஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலும், காற்று (வாயு) ஸ்தலமாக  தென்மலை திரிபுரநாத சுவாமி கோவிலும், ஆகாய ஸ்தலமாக தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது.இந்த பஞ்ச ஸ்தல ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இந்த 5 ஆலயங்களுக்கும் சென்று  இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
  • ஸ்ரீசங்கரநாராயணசுவாமி கோயிலின் முக்கிய திருவிழாக்கள்

  1. சித்திரைப் பெருந்திருவிழா      - 48 நாட்கள்.
  2. ஆடித்தபசு திருவிழா                    - 12 நாட்கள்.
  3. நவராத்திரி லட்சார்ச்சனை       -  9 நாட்கள்.
  4. ஐப்பசி திருக்கல்யாணம்            - 10 நாட்கள்.
  5. கந்தசஷ்டி திருவிழா                    - 6 நாட்கள்.
  6. திருவெம்பாவை திருவிழா      - 10 நாட்கள்.
  7. தை மாதம் கடைசி                       -  ஆவுடைப்பொய்கை     
  8.  வெள்ளி அன்று                             -  தெப்பத் தேரோட்டம்
  9. ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு - மாதம் 2 முறை.

Information to All Devodees...

Good Morning to All,

Warm Greetings. Due to Sunday and Independence Day, I am not able to publish articles on those days.  Sunday is holiday to all. So excluding Sunday, I plan to publish articles. Anybody want to get articles in mail, kindly register your email in FOLLOW BY MAIL text box. Whenever we publish articles which is automatically published in facebook and also twitter.

Whatsapp             : +919788852706
twitter account     : https://twitter.com/cityarun
facebook              : https://www.facebook.com/thinamorukovil
Website                : www.cityxerox.in (or) www.tnkovils.blogspot.in

Using any one way, you may get the details of temples in TamilNadu. We belive this facility is more useful for collecting information about temples in TamilNadu.

With Regards...

Arun

திருந்து தேவன்குடி, திருவிடைமருதூர் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்


சுவாமி : கற்கடேஸ்வரர்.
🌻அம்பாள் : அருமருந்தநாயகி, அபூர்வநாயகி.
🌻மூர்த்தி : கணபதி, முருகன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, தன்வந்தரி, அகஸ்தியர்.
🌻தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்.
🌻தலவிருட்சம் : பஞ்சதள வில்வம்.

🌻தலச்சிறப்பு : தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் காவிரி நதியின் வடகரை தலங்களில் 42வது தலம் ஆகும்.  கற்கடேஸ்வரர் திருக்கோவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  இத்தலத்தில் இரண்டு அம்பாள் தனிதனிச்  சன்னதிகளில் அருள்பாலிப்பது சிறப்பாகும்.  கோவிலின் உள்ளே சென்றவுடன் முதலில் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி  உள்ளது.  முன் மண்டபத்தில் அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் தனி தனி சந்நிதிகளில் தெற்கு நோக்கி  அருள்பாலிக்கிறார்கள்.  கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.  கருவறை மேற்கு  உட்பிரகாரத்தில் கணபதி, முருகன் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் உள்ளது.  கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர்.  நால்வர் சந்நிதியும் உட்பிரகாரத்தில் உள்ளது. தன்வந்தரி,  அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர்.  இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது.  கோவிலின்  நுழைவுவாயிலில் சந்திரன் சன்னதி உள்ளது.  இத்தலத்தில் சந்திரன் யோக நிலையில், “யோக சந்திரனாக” காட்சி தருகிறார்.   ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள் சந்திரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.   கோவிலின் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது.

🌻இத்தலம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் ஆகும்.  ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க  இத்தல இறைவனை வழிபட்டால் பலன் உண்டு.  ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது அல்லது  தங்களது பிறந்த நட்சத்திர நாட்களில், தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து  வழிபட்டால் வாழ்வில் நன்மைகள் நடைபெறும்.  மேலும் அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் வழிபாடு செய்ய உகந்த நாட்கள் ஆகும்.  நீண்டகாலமாக நோயுற்ற ஆயில்யம் மற்றும் பிற நட்சத்திரக்காரர்கள் இந்த நாட்களில் கற்கடேஸ்வரரையும்,  அருமருந்து நாயகியையும் வழிபட்டு, அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உட்கொண்டால் சர்வ வியாதிகளுக்குமான ஒரு  நிவாரணி ஆகும்.  அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.  நோய் தீர்க்கும் தலம் என்பதை  உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

🌻இறைவன் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டப்பட்ட காயமும் இன்றும் உள்ளது.  சிவனை  வழிபட்ட இந்திரன் தன் தவறை உணர்ந்து திருந்தியதால் இத்தலம், திருந்துதேவன்குடி என்று அழைக்கப்படுகிறது.  இத்தலத்திற்கு  நண்டாங் கோவில் என்ற பெயர் தற்போது வழக்கத்தில் உள்ளது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று இத்தலத்தில் உள்ள  ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

🌻தல வரலாறு : ஒரு சமயம் துர்வாசமகரிஷி, சிவபூஜை செய்து விட்டு செல்லும் போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன்  துர்வாசரின் நடையைப் பார்த்து, நீங்கள் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர், என்று கேலி செய்தான்.  இதனால் கோபம்  கொண்ட துர்வாசமகரிஷி, கந்தர்வனை நண்டாக பிறக்கும்படி சபித்தார். மனம் வருந்திய கந்தர்வன் சாபவிமோசனம்  வேண்டினான்.  துர்வாசர் இத்தல இறைவனை வழிபட கூறினார், அதன்படி இத்தலத்தில் நண்டு வடிவில் கந்தர்வன் பூஜை செய்து  சாபவிமோசனம் பெற்றான்.

🌻தல புராணப்படி பார்வதி ஒரு சமயம் இத்தல இறைவனை நண்டு உருவில் வந்து கோவிலைச் சுற்றியுள்ள அகழியில் இருந்த நீரில்  உள்ள தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் தன் ஆணவம் நீங்க, குரு  பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சிவபூஜை செய்தான்.  பூஜையில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு  படைத்து வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டான்.  தேவேந்திரன் அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை  நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதை கண்டு கோபம் கொண்டான்.  இதனால் இந்திரன் லிங்கத்தின் மீதேறி  தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். அப்பொழுது கத்தியின் வெட்டு சிவபெருமான் மீது  விழுந்தது.  சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த பார்வதியை  தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.  நண்டு உருவில் வந்தது பார்வதி என்ற உண்மையை உணர்ந்த இந்திரன் தன்  தவறுக்கு வருந்தி திருந்தினான்.  எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது.

🌻கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகளை காணலாம்.  லிங்கத் திருமேனியில் நண்டு ஐக்கியமான  துளை இன்றும் உள்ளது.  ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம்பசு பாலைக் கொண்டு இரவில்  சிவலங்கத்தை அபிஷேம் செய்யும் பொழுது நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில்  கூறப்பட்டுள்ளது.  கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் என்று  அழைக்கப்படுகிறார்.


🌻🌻🌻🌻🌻🌻🌻
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]