Search This Blog

Wednesday, 16 November 2016

எந்த ATM களில் பணம் உள்ளது..? (In INDIA)

  • ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன் திரும்புகின்றனர்.
  • இந்த சிரமத்தைநீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி ஏடிஎம்கள் செயல்பாட்டிலுள்ளது என்பதை துல்லியமாக காட்ட www.atmkaro.in/ என்ற வெப்சைட் வடிவமைக்கபட்டுள்ளது.

பசு தானம்

  • தானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பசு தானத்தை செய்வதன் மூலம், ஒருவர் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கிறது.
  • பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாககூறப்பட்டுள்ளது. அந்த வகையில், பசு தானம் முக்கியத்துவம் பெறுகிறது.பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
  • பசு தானத்தால் ஒருவர் தனது முன்ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது. கோ தானத்தை பல காரணங்களுக்காக செய்கிறார்கள்.
  • கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம்செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். 
  • ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காகஉக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு.
  • ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு வைதரணி கோ தானம் என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. 
  • வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும். பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் உள்ள கோ சாலைகளுக்கு பசுவை தானமாகக் கொடுக்கலாம்.
  • அவ்வாறு ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும்.
  • பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள்.
  • பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.

பிரம்மஹத்தி தோஷம்

  • பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார். அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்தபிறகு இறைவனே எடுத்துக்கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும்போது, சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா,என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்தபாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி ‘ தோஷம் என்பதாகும்.
  • ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதாபிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே, இராவணனை வதம் செய்தார், ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால், பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார். எனவே, பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் , கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால், அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.
  • ருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். 
  • இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.
  • இதுபோன்ற நிலையில் , பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம். :
சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்தனர்
பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
நாம் வணங்கும் பல இறைவன்கள் அசுரர்களை கொன்றதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து பின் அதற்கு பரிகாரம் தேடியதாக பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரம்மஹத்தி திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்று அதனால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி இத்தலத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.
  
பரிகாரம்-1
  • திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப் புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து, முழங்கால் மேல் முகத்தை வைத்துக் கொண்டு, காத்திருப்பதுதான் பிரம்மஹத்தி.
  • பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல், மகாலிங்க சுவாமி சன்னதி சென்று நெய் தீபம் ஏற்றி, குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும்.
  • மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடக் கூடாது. காற்று, உப்பு, நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் நீங்கும்.
பரிகாரம்-2
நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
நெய் 1/2 லிட்டர்;
இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்
.
1. பலிபீடம்;
2. கொடிமரம்;
3. கொடிமர நந்தி
4.அதிகார நந்தி;
5. வாயில் கணபதி;
6. துவார பாலகர்;
7.சூரியன், சந்திர பகவான்;
8. சமயக் குரவர்கள்;
9. சப்த கன்னிமார்கள்;
10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
12. சுர தேவர்;
13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;
14. தட்சிணாமுர்த்தி
15. கால பைரவர்;
16. சண்டிகேஸ்வரர்;
17. சனீஸ்வரர்;
18. சிவன் சன்னிதி;
19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.
  இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.
பரிகாரம்-3
தீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ராமேஸ்வரத்தில் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்) 
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

கர்ணன்

  • மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
  • மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
  • பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
  • இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?
  • எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர். விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார். ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
  • நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.
  • இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான். இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே! இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.
  • நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும். கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.
நன்றி : "நாரதர் கதைகள்" ஸ்வாமி ஸ்ரீதானந்தர், இராமகிருஷ்ண மடம்

ஸ்தல விருட்சம்

  • ஸ்தல விருட்சம் என்றால் அங்குதான் சுவாமியே உருவாகியிருப்பார். அந்த ஸ்தலம் உருவாகக் காரணமாக இருப்பதுதான் ஸ்தல விருட்சம். ஒரு சில இடங்களில் கடவுள் சுயம்புவாக இருந்தா‌ர். 
  • ம‌க்களு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌ந்தது. அதன் மீது காராம்பசு பால் சொரிந்தது. அங்கு போய் பார்த்தால் சுயம்பு லிங்கம் இருந்தது. அதன் அருகில் இரு‌க்கு‌ம் மர‌ம் தான் ஸ்தல விருட்சம்.ஸ்தல விருட்சத்தைச் சுற்றினால் கடவுளின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றும் பலன் கிட்டும். 
  • வேதம் அறிந்தவர்கள், முக்கியமான சிலர்தானே கர்ப்பகிரகத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஸ்தல விருட்சத்தை யார் வேண்டுமானாலும் சுற்ற இயலும். .எனவே பல கோயில்களில் ஸ்தல விருட்சத்திற்கு அருகே சித்தர் பீடம் அமைக்கப்பட்டிருக்கும். சித்தர்கள் அமர்ந்திருப்பதாக ஐதீகம். 
  • அங்குள்ள சித்தர்களை வைத்துத்தான் கோயிலின் சுவாமிக்கு சக்தி அதிகரிக்கும். எல்லா இடத்திலும் இறைவன் எப்போதும் இருக்க முடியாது என்பதால், கோயில்களில் சித்தர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களது தவத்தின் வலிமையால் கோயிலின் வலி¨மை கூடும். அவர்கள் தவம் செய்வதே இந்த ஸ்தல விருட்சத்தின் கீழ்தான்.
  • ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்ற நேசன் எதிர் நிற்றல் அறிது என்ற பாடல் உண்டு. அதாவது சிவஞான போதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஈசனையே எதிர்க்கலாம். ஈசனிடம் இருந்து வரம் பெற்று அருள் பாலிக்கும் சித்தர்களை எதிர்க்கக் கூடாது என்பது பொருள்.
  • ஸ்தல விருட்சங்கள் என்பது இறைவனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருவோமே அதை விட அதிக சக்தி வாய்ந்தது ஸ்தல விருட்சமாகும்.ஸ்தல விருட்சத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். ஒரு முறை வந்தாலும் போதுமானதுதான்.

சனி பகவானின் திருவிளையாடல்கள்

  • இக்கதையைப் படிப்பதாலேயே வாசகர்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம்; தீமைகள் விலகலாம். சனி பகவான் நலம் பல நல்க அவரை வேண்டுங்கள்.
  • மன்னன் ஒருவன் தன் நாட்டில் வாழும் பொற்கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களைக் கொடுத்து, ""இதற்கு என்ன விலை கொடுக்கலாம்? மதிப்பு போட்டுச் சொல்லுங்கள்'' என்றான்.
  • அதைப் பெற்றுக்கொண்ட பொற்கொல்லர், ""மன்னா! இவற்றை எடுத்துச் சென்று சோதித்து, மதிப்பு நிர்ணயித்து நாளை வந்து சொல்கிறேன்'' என்று கூறி, ரத்தினங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்தி சாயும் நேரம். அதனால் தன் வீட்டுச் சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில், தன் கையில் இருந்த ரத்தினக் கற்களைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்.
  • விளக்கு மாடச் சுவரின்மேல் ஒரு கொக்கின் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அது அவரது கையிலிருந்த ரத்தினங்களைக் கொத்தி விழுங்கிவிட்டு, மீண்டும் முன் போலவே சித்திரமாக மாறிவிட்டது.
  • இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பொற்கொல்லர் உடனே தன் ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் எடுத்துப் பார்த்தார். அன்று அவருக்கு ஏழரை ஆண்டு சனி ஆரம்பம் என்று தெரிந்தது.
  • நாளை மன்னர் முகத்தில் எப்படி விழிப்பது? நடந்ததைச் சொன்னால் நம்புவாரா என்று யோசித்து, மிகவும் வருந்தி அன்று இரவே காட்டுக்குச் சென்றுவிட்டார்.
  • மறுநாள்... பொற்கொல்லர் மன்னர் கொடுத்த ரத்தினங்களுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று நாட்டு மக்கள் பேசிக் கொண்டனர். இச்செய்தி மன்னனுக்கும் எட்டியது. அந்தப் பொற்கொல்லரின் மனைவி, மகளைக் கைது செய்து சிறையில் அடைத்தான் மன்னன். பொற்கொல்லரைப் பிடிக்க அரச காவலாளிகள் காட்டுக்குள் சென்றனர். ஆனாலும் ஏழரை ஆண்டுகளாக அவரைப் பிடிக்க முடியவில்லை. ஏழரைச் சனி முடியும் வேளை வந்தது.
  • அவ்வளவு காலமும் பசி- பட்டினியுடனும் தாடி- மீசையுடனும் காட்டில் திரிந்ததால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த அந்த பொற்கொல்லர் தன் வீட்டுக்கு வந்தார். குளித்து முடித்து சனி பகவானைத் தியானித்துவிட்டு சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கு சித்திரத்தைப் பார்த்துக் கைநீட்டியபடி, ""சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு'' என்றார்.
  • என்ன ஆச்சரியம்! அந்த சித்திரக் கொக்குக்கு உயிர் வந்து, ரத்தினங்களை அவரது கையில் கக்கிவிட்டு மீண்டும் சுவர் சித்திரமாக மாறியது. அப்போது இரவு சோதனைக்காக மாறுவேடத்தில் அங்கு வந்த மன்னன், மறைவில் நின்று நடந்தவற்றைப் பார்த்தான். உடனே பொற்கொல்லரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதுடன் அவருக்கு தன் நாட்டின் முதலமைச்சர் பதவியும் கொடுத்தான். அவரது மகளையும் மணந்து கொண்டான்.
  • ஏழரைச் சனி ஒருவரை எப்படி யெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை இக்கதை மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். ஏழரை ஆண்டு சனி முடிகின்ற வேளையில்- உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே நற்பலன்களை வாரி வழங்க ஆரம்பித்து விடுவார் சனி பகவான்.
  • இதைத்தான் "சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை' என்று சொல்லுவார்கள்.இதுதான் சனி பகவானின் மகத்துவம்!
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]