தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம்
ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி.
கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம்,
அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான்
தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை
வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.
மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர்
கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு
ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு
ஆரோக்கியமும் உண்டாகும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு
சன்னதி உள்ளது
தங்களின் குழந்தை மிகப்பெரிய வரலாறை எதிர்காலத்தில் படைக்கப்போகிறான் என்
பதை அப்போது அந்த பெற் றோர்கள் உணர்ந்திருக்கவில்லை. வீட்டில் ஏழ்மை
இருந்தாலும் குழந்தைக்கு ரத்னாகரன்’ என்று பெயர் சூட்டியிருந்தனர்
பெற்றோர்.
தெய்வத்தின் அருளால் பழைய கஞ்சியை மட்டுமே குடித்து வளர்ந்த ரத்னாகரன்
பலசாலிவாலிபனான், வறுமையால் பள்ளி செல் லாத ரத்னாகரனின் செயல்பாடு
நாளுக்குநாள் மோசமானது.
அதே நேரம் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்
தான்.ஒருநாள் பசி மயக்கத்தில் இருந்த பெற்றோருக்கு “உணவு வாங்கி வருகிறேன்”
என சொல்லி வெளியே போனவன் மழையில் மாட் டிக்கொண்டான்.அந்த வழியாக வந்த
குதிரை வீரன் “தம்பி! உனக்கு ஏதாவது வேண்டுமா? கேள்” என்றான்.உடனே
ரத்னாகரன், தன் கதையை அவனிடம் கூறினான்.
குதிரை வீரன் அவனுக்கு பணம் கொடுத்தாலும் ஒரு நிபந்தனையும் விதித்தான்.
“உன் பெற்றோருக்கு ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு உடனே நீ திரும்பிவிட
வேண்டும்.உனக்கு பெரும் செல்வம் கொட்டும் அளவிற்கு ஒருவேலையை நான்
தருகிறேன். அதை நீ தொடர்ந்து செய்தால் இந்த உலகிலேயே பெரும் செல்வந்தனாகி
விடுவாய்” என்றான்.
ரத்னாகரனுக்கும் அவனது பெற்றோருக்கும் மகிழ்ச்சி ஏற் பட்டது. ரத்னாகரன்
குதிரை வீரனை ஒரு குகையில் மீண் டும் சந்தித்தான். அப்போதுதான் அவன் பெரும்
கொள் ளைக் கும்பலுடன் அங்கு வசித்தது தெரியவந்தது. படிப் பறிவில்லாத
ரத்னாகரனின் மனதை குதிரைவீரன் எளிதாக மாற்றிவிட்டான்.
“கொள்ளையடிப்பது, பணம் தர மறுப்பவர்களை கொலைசெய்வது… இதில் எதை
வேண்டுமானாலும் செய். அதில் கிடைப்பதில் பாதி பங்கை எடுத்துக்கொள். மீதியை
என்னிடம் கொடுத்துவிடு,” என்றான். அதற்குரிய பயிற்சிகளை எடுத்துக் கொண்
டான் ரத்னாகரன்.ரத்னாகரன் கொலை, கொள்ளையில் ஈடுபட்டான். பணம் சேர்ந்ததும், திருமணமும் செய்துகொண்டான். அவனுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை
வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத
முனிவர், “நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?” என்றார்.
என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன். “சரி, உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன்
குடும் பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக்
கொள்வதுதானே நியாயம்?” என்றார்.
இதற்கு ரத்னாகரன் ஆம்’ என்றான்.அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங் கேயே நிற்கிறேன்,” என்றார். நாரதரை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டுரத்னாகரன் வீட்டிற்கு சென்றதும்,
“என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும்
பங் கிட்டுக் கொள்வீர்களா?” என குடும்பத்தாரிடம் கேட்டான்.
அவனது பெற்றோர், “பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும்
தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்” என்றனர். அவனது
மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர். “மனைவி குழந்தைகளை காப்பாற்றுவது ஒரு
ஆண்மகனின் கடமை. அவன் என்ன தொழில் செய்கிறான் என்பதோ, அதில் உள்ள பாவங்கள்
பற்றியோ தங்களுக்கு கவலை இல்லை என்றனர்.
இதனால் வருத்தமடைந்த அவன் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தனது கண் களை திறந்த அவருக்கு நன்றி யும் கூறினான். நாரதர் மகிழ்ந்து, நீ செய்த பாவங்கள் நீங்க வேண்டுமானால் ராம’ நாமத்தை உச்சரி,” என சொல்லி விட்டு சென்றார். ரத்னாகரனுக்கு படிப்பறிவு இல்லாததால், அவன் சூராம’ என்ற சொல்லை, சூமரா..
மரா..’ என்றே சொன்னான். அதை வேகமாக சொல்லும் போது, தானாகவே, சூராம ராம’ என
மாறியது. அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.பல
ஆண்டுகள் கடந்தன.
அவன் உடலைச் சுற்றி “வால் மீகம்” வளர ஆரம்பித்தது.
சூவால்மீகம்’ என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன்
அவனுக்கு அருள்பாலித்தார். அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் “வால்மீகி”
என அழைக்கப்பட்டான். அன்று முதல் வால்மீகி முனிவர் என அனைவரும் அழைக்க
ஆரம் பித்தனர். இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம்
என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.
அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருகடவூரில் வாழ்ந்து வந்தார்.
(அன்னை அபிராமி இருக்கும் இடம்) அவர் எப்பொழுது அன்னை அபிராமி எண்ணி யோக
நிலையில் இருப்பது வழக்கம். உலகம் அவரைப்பற்றி பேசுவதைப்பற்றி கவலைப்படாமல்
இருந்தார். அப்பொழுது சோழநாட்டை ஆண்ட இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே
மன்னர் அன்னை தரிசிப்பதற்கு சென்றார். அப்பொழுதும் அபிராமி பட்டர் மன்னரின்
வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி
யோக நிலையிலேயே இருந்தார். அப்பொழுது மன்னர் மிகுந்த மரியாதையுடன் அவரை
அணுகி இன்று என்ன நாள்(திதி) என்று கேட்டார். அப்பொழுது அபிராமி பட்டர்
உண்மையான நாளான அமாவாசையை உணராமல் பெளர்ணமி என்று சொல்ல, அனைவரும் அபிராமி
பட்டரைப் பார்த்து சிரித்தனர்.
சரபோஜி மன்னர் கோபம்கொண்டு அபிராமி பட்டரை சொன்னது போல் அவரது வார்த்தைப்
பொய்த்தால் அபிராமி பட்டரை உயிரோடு எரிக்குமாறு கூற, அதற்கான தளம் ஏற்பாடு
செய்து கீழே நெருப்பு எரியூட்டப்பட்டது. அபிராமி பட்டர் தன் தவறை
உணர்ந்தவராக பழியை அன்னை அபிராமியின் மீதே போட்டார். இந்த தவறை அன்னை
அபிராமியான உன்னை நினைத்தே நான் யோக நிலையில் மூழ்கி இருந்தமையால் செய்ய
நேரிட்டது. அவர் அன்னை அபிராமியைப்பற்றி நூறு சுலோகங்களை மிக அருமையாகப்
பாடத் தொடங்கினார்.
அந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்றப்பெயரில் வந்தன, அந்தாதி
என்றால் அடுத்தப்பாடல் முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே
வார்த்தையில் தொடங்க வேண்டும். அபிராமி பட்டருக்கு இருந்த திறமையையும்
கடவுளின் அருளால் இந்த அருமையான நூறு பாடல்களை ஒரே இரவில் பாடியதை
பாராட்டியே ஆகவேண்டும். அபிராமி அந்தாதியில் இன்னொரு தனித்துவம்
என்னவென்றால் அதற்கு முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை. முதல் வரி
'உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்..... ' என்று தொடங்க 100வது பாடல் '
உதிக்கின்றனவே ' என்று முடிகிறது.
அபிராமி பட்டர் 79வது பாடலை பாடிக்கொண்டிருக்கையில் 'விழிக்கே அருளுண்டு
வேதம் சொன்ன..... ' அன்னை அபிரமி அவரது பக்தியால் இன்புற்று அவர் முன்னே
தோன்றி தனது காதணியை (தடங்கா அல்லது குண்டலம்) ஆகாயத்தில் வீச அது வான்
முழுவதும் முழு பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அனைவரும் அன்னையை
வணங்கி அன்னையின் மகத்தான சக்தி கண்டு வியந்தனர். மன்னர் அபிராமி பட்டரிடம்
மன்னிப்பு கோரினார்.
இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும்ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ?அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம்.நான்முகனை நோக்கி தவம் இருக்கிறான் கும்பகர்ணன்.இதைக் கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்குஉருவத்தில் பெரியவனான கும்ப கர்ணன் எதாவது வரம்பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம்கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.
“பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார் நான்முகன்.அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப்பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள். நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.
பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில்அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன்அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால்எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம்,ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால் மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.