Search This Blog

Friday, 11 August 2017

ருத்ராட்சத்தின் அதி தேவதை

  • ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
  1. ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். 
  2. இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும். 
  3. மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
  4. நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். 
  5. ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
  6. ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
  7. ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும். 
  8. எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.
  9. ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
  10. பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும். 
  11. பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்..
  • ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.

ராமேசுவரம் கோவில்

  • இலங்கை அரசன் ராவணன், சீதையின் அழகில் மயங்கி, அவளை கடத்தி சென்றான். சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அலைந்தனர். அப்போது ராமருக்கு ஆஞ்சநேயர் நட்பு கிடைத்தது. இலங்கையில் சீதை இருப்பதை கண்டுபிடித்த ஆஞ்சநேயர் அவரிடமிருந்து சூடாமணி பெற்று வந்து, அதை ராமரிடம் கொடுத்தார்.
  • இலங்கையில் சீதாப்பிராட்டியார் இருப்பதை அறிந்த ராமர் பாலம் கட்டி செல்ல தீர்மானித்தார். இதற்காக தரிபசயனம் என்று கூறப்படும் இடத்தில் சமுத்திர ராஜனை தியானித்தார். ஆனால் அவன் வராதது கண்டு கோபம் கொண்டு வில்லில் நாணை பூட்டி பாணத்தை தொடுத்ததார். இதனால் சமுத்திரராஜன் தோன்றி சரண் அடைந்தான். அவன் ராமரிடம் கடலில் பாலம் கட்ட வழி சொன்னான்.
  • சேதுவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் வழியாக வானர வீரர்களும் ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயரும் இலங்கைக்குச் சென்றனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தில் ராமர் எழுந்தருளினார். அகஸ்திய முனிவரால் ஆதித்தய ஹிருதய மந்திரம் உபதேசம் பெற்றுக் பிரம்மாஸ்திரத்தினால் ராவணனை அன்றே சம்காரம் செய்து வெற்றி கொண்டார்.
  • ராவணன் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் புதிய அரசனாக விபீஷ்ணருக்கு ராமர் முடிசூடி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பிறகு ராமபிரான் சீதாபிராட்டியருடனும், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடனும் அன்ன விமானத்தில் அமர்ந்து கந்த மாதனம் (ராமேஸ்வரம்) வந்து சேர்ந்தார்கள்.
  • ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.
  • அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.
  • ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.
  • அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி "ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது.
  • இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார். ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.
  •  ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.
  •  ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.
  • இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.
  • ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது...
ஓம் நம சிவாய

Wednesday, 9 August 2017

சோம்பு தண்ணீர்


  • தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!! உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். 
  • அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
  • இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும்.


சோம்பு தண்ணீர் செய்முறை:
  • 1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்
  • சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
  • பசியை அடக்கும் : அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்தும் : சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  • டாக்ஸின்களை வெளியேற்றும்தற்போதைய காலத்தில் கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்களானது பல வழிகளில் உடலில் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.
  • புத்துணர்ச்சியை வழங்கும் : தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
  • தூக்கத்தை சீராக்கும் : சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்

செம்பு குடங்களில் நீர்.....?

  • செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.
  • மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
  • தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
  • தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!
  • வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.
  • இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:
  1. பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
  2. தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
  3. கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
  4. புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
  5. மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
  6. செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
  7. இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
  8. கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
  9. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
  10. வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.

Tuesday, 8 August 2017

பணம் வர!!!



  1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
  2. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்
  3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
  4. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
  5. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
  6. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.
  7. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
  8. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
  9. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
  10. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.
  11. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
  12. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.
  13. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
  14. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
  15. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
  16. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
  17. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
  18. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

திருவண்ணாமலை கிரிவலம்


  • காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது.
  • ராஜகோபுரம் தரிசித்து, வெளியே வந்ததும், முதலாக வருபவர் இந்திர லிங்கம். தேவர்களின் தலைவன் இந்திரனால் நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் உரிய லிங்கம். நீண்ட ஆயுள், கீர்த்தி வழங்குபவர். கிழக்கு திசைக்கு அதிபதி.
  • இரண்டாவதாக வருபவர், அக்னி லிங்கம். அக்னி பகவானால், நிறுவப்பட்ட லிங்கம். பக்தர்களுக்கு, நோய் நொடிகளையும், பயத்தையும் போக்குபவர். சந்திரனுக்குரிய லிங்கம். அக்னிலிங்கத்துக்கு முன் வரும் அக்னி குளத்தில் நீரில் கால்கள் நனைய, எதிரில் இருக்கும் மலையை ஒரு பௌர்ணமி இரவில் பாருங்கள். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு still ஆக இருக்கும். அனுபவித்து பாருங்கள். தென்கிழக்கு திசைக்கு அதிபதி.
  • மூன்றாவதாக எம லிங்கம். எமதர்மரால், நிறுவப்பட்ட லிங்கம். நவ கிரகங்களில், செவ்வாய்க்குரிய லிங்கம். தேடி வரும் பக்தர்களுக்கு, நீண்ட ஆயுள் வழங்குபவர். தெற்கு திசைக்கு அதிபதி.
  • அடுத்து வருபவர் நிருதி லிங்கம். தென்மேற்கு திசைக்கு அதிபதி. கருவறை அருகில், நல்லதொரு ஆன்மிக அதிர்வை உணர முடியும். மற்ற தேவர்களை எல்லாம் நாம் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருந்தாலும், நிருதி இதற்கு முன் நான் கேள்விப்படாதவர். சீரிய தவத்தினாலே, அவருக்கு இந்த பதவி. உலகில் உள்ள, அத்தனை பூதங்களுக்கும், தலைவர் நிருதி. நவ கிரகங்களில், ராகுவுக்கு உரிய லிங்கம். அண்டி வரும் பக்தர்களுக்கு, ஆரோக்கியம், புகழ், சொத்துக்களை அள்ளி வழங்குபவர். குழந்தை பேறு வேண்டுபவர்கள், இங்கே மனமுருகி வேண்ட, அவர்கள் பலன் அடைவது திண்ணம்.
  • அடுத்து வருபவர், வருண லிங்கம். வருண பகவானால், நிறுவப்பட்டு வழிபடும் லிங்கம். நீதிதேவனான சனி பகவானுக்கு உரிய லிங்கம்.இந்த உண்மை தெரிய வந்தால், பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அலைமோதும். . ஆனால், நடந்து செல்லும் பக்தர்களின் ஒரு அவசர கதி 'சல்யூட்' ஐ ஏற்றுக்கொண்டு அமைதியாக அருள் பாலிக்கிறார். வேண்டி வரும் பக்தர்களை நோய் களிலிருந்து விடுவிக்கிறார். குறிப்பாக நீரினால் ஏற்படும், அனைத்து வியாதிகளும் சொஸ்தமாகிவிடும். மேற்கு திசைக்கு அதிபதியாக இருக்கிறார்.
  • ஆறாவதாக , வடமேற்கு திசைக்கு அதிபதியாக அருள்பாலிப்பவர் வாயு பகவானால் நிறுவப்பட்ட வாயு லிங்கம். நவ கிரகங்களில் 'கேது' வுக்குரிய லிங்கம். ஆத்மார்த்தமான வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு இதயம், நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளை நீக்குகிறார்.
  • அடுத்து வருபவர், வடக்கு திசைக்கு அதிபதியாக வரும் குபேரனால், நிறுவப்பட்டு வழிபட்டு வரும் குபேர லிங்கம். நவக் கிரகங்களில் 'குரு' பகவானுக்குரிய லிங்கம். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு , வாழ்வில் முன்னேற்றங்களைத் தந்து , பொருளாதார நிறைவை ஏற்படுத்தித் தருபவர்.
  • கிரி வலப் பாதையில், கடைசியாக வருபவர் ஈசான்ய லிங்கம். வட கிழக்கு திசைக்கு அதிபதியான ஈசன்யானால் நிறுவப்பட்ட லிங்கம். நவக் கிரகங்களில் புதனுக்குரிய லிங்கம். நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குபவர்.
  • மேற்கூறிய அஷ்ட லிங்கங்கள் தவிர மலை சுற்றும் பாதையில் ஏராளமான இறை சந்நிதிகள் உள்ளன. வலம் வரும்போது அடி அண்ணாமலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள அம்மனின் அழகு முகத்தை அருகில் இருந்து தரிசித்துப் பாருங்கள். ஆதி அண்ணாமலை கோவிலுள் சென்று தரிசித்து வர நீங்கள் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். உள்ளே இருக்கும்போது நீங்கள் நிச்சயமாக ஒரு அதிர்வை உணர முடியும்.
  • அஷ்ட லிங்கங்களை நிறுவிய தேவர்கள் பலமுறை நேரில் வந்து சூட்சமமாக வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள்.கலி முற்றி வரும் இந்த காலத்தில், ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது எதோ ஒரு தேவை இல்லாத செயல் போல தோன்றுகிறது நிறைய மக்களுக்கு. ஆனால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளேயே உழன்று கொண்டு , எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தேடும் அன்பர்களுக்கு , அண்ணாமலை ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
  • ஒரு முறை கார்த்திகை தீப தரிசனம், உங்கள் தலை முறைக்கே வழி காட்டும். சென்ற கார்த்திகை தீபத்திற்கு, கிட்டத் தட்ட 45 லட்சம் பக்தர்கள் கூடினர். தமிழ் நாட்டில் இது ஒரு அபூர்வ நிகழ்வு.
  • அருணகிரி நாதர் முதல் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி வரை பலப்பல மகான்கள் வாழ்ந்த ஸ்தலம்...

Monday, 7 August 2017

சந்திர கிரகணம்


  • 07.08.2017 இரவு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது, பூமியால் சூரியன் மறைக்கப்பட்டு, சந்திரன் இருளாக காட்சி அளிப்பதை சந்திர கிரகணம் என்கிறோம். 
  • சந்திர கிரகணம், பவுர்ணமியின்போதுதான் நிகழும். இந்த சந்திர கிரகணம் நாளை (திங்கட்கிழமை) வருகிறது. இது இந்திய நேரப்படி இரவு 10.52 மணிக்கு தொடங்குகிறது. நள்ளிரவு 12.48 மணிக்கு முடிகிறது. இது பகுதியளவு சந்திர கிரகணம் ஆகும்.
  • இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவிலும், பிற ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், பார்க்க முடியும். அதே நேரத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம், வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் பகல் என்பதால் அங்குள்ளவர்கள் இதைப் பார்க்க முடியாது.இந்த தகவல்களை டெல்லி பிர்லா கோளரங்க ஆராய்ச்சி, கல்வி இயக்குனர் தேவி பிரசாத் துவாரி தெரிவித்தார்.
  • சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மாலை 4½ மணி முதல் நாளைமறுதினம் அதிகாலை 2 மணி வரையில் நடை சாத்தப்பட்டிருக்கும்.
  • சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏதுவாக சென்னை கிண்டி, காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் 4 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம் என்றும், இதேபோல், சந்திரகிரகணம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 31ந்தேதி ஏற்படும். இந்த மாதம் 21ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது.
  • காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் நாளை (திங்கள்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மறுநாள் காலை 8ந்தேதி அதிகாலையில் வழக்கம்போல் நடை திறக்கப்படும். அன்றைய தினம் நடைபெற இருந்த தங்க ரதம் ரத்து செய்யப்படுகிறது என்று காமாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Saturday, 5 August 2017

துளசியின் கதை


  • பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான்.
  • இத்தனை மகிமையும் மகத்துவமும் வாய்ந்த துளசி, பூலோகம் வந்த கதை தெய்வீகமானது.
  • துளசித்தாய் பூமியில் ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
  • இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.
  • உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல்கக்கும் தீப் பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது. இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.
  • பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.
  • பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.
  • இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.
  • இந்தச் சம்பவம் நடந்த இடம் ‘திருவிற்குடி’ என்றத் திருத்தலமாகும். துளசித்தாய் தோன்றிய திருவிற்குடி சிவதலம் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ளது. ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி சிவபெருமானின் அட்டவிராட்டான தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இக்கோவில் பிருந்தையை திருமால் துளசியாக ஏற்றுக் கொண்ட தலம். இக்கோவிலில் இறைவன் பெயர் விரட்டானேசுவரர். இறைவியின் நாமம் ஏலவார் குழலி பரிமளநாயகி. தலமரம் துளசி.

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!


  • தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
  • திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
  • இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
  • ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
  • பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
  • உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
  • பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? 
  • ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
  • பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
  • சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
  • ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.
  • ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
  • பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
  • அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
  • வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
  • மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 
  • அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
  • சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
  • ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
  • ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
  • 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்!!!

முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்
2ம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள்சஷ்டி – புகழ் கிடைத்தல்
7ம்நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி – சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் தசமி – நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் – துவாதசி – தங்கநகை சேர்தல்
13ம்நாள் – திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் – சதுர்த்தசி – பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் – மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

மஹாளய பட்சம் எனும் மகத்தான புண்ணிய தினங்கள் – ஏ.எம்.ஆர்

  • நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, மஹாளய பட்சம் எனும் அந்த பதினைந்து புனித தினங்களிலும் நம்முடன் தங்கியிருக்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.
  • கிடைத்தற்கரிய புண்ணிய பலனை நமக்கு அளித்தருளும் அந்தப் பதினைந்து நாட்களும் - நாம் தூய்மையான உள்ளத்துடன் இருக்க வேண்டும். வீட்டை தூய்மைப்படுத்தி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பதினைந்து நாட்களிலும், வீட்டில் எவருடனும் சண்டையிடுவதோ, அல்லது தவறான வார்த்தைகள் பேசுவதோ அல்லது அசைவ உணவு உண்பதோ கண்டிப்பாகக் கூடாது. ஏனெனில், அப்போது நம் முன்னோர்கள் நம் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்களது தேஜஸ்ஸை (தெய்வீக ஒளி) நம் ஊனக்கண்களில் பார்த்தால், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நம் பார்வை போய் விடும். ஆதலால்தான் அப்பெரியோர்கள் தங்கள் ஒளியை மறைத்துக் கொள்கிறார்கள்.
  • சக்தி உள்ளவர்கள் தினமும் சிராத்தம் செய்யலாம். இதற்கு வசதியில்லாத அன்பர்கள் அவரவர்கள் தங்கள் தந்தை இறைவனடி சேர்ந்த திதியன்று செய்யலாம். தந்தை காலமான தினத்தின் திதி தெரியாதவர்கள் ஏகாதசி அல்லது மஹாபரணி ஆகிய தினங்களில் செய்யலாம். புண்ணிய நதிக்கரையில் செய்வது மிகச் சிறந்த நற்பலனை அளிக்கும்.
தான பலன்!
  • மஹாளய பட்சம் புண்ணிய தினங்களில் ஏழைகளுக்கும், ஆசார அனுஷ்டானங்களில் சிறந்த பெரியோர்களுக்கும் வஸ்திர தானம், அன்னதானம், கன்றுடன் கூடிய பசு தானம், தீப தானம் ஆகியவற்றை அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும்.
ஸ்நானம்!
  • இந்த மஹாளய அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகள், சேது, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது, காசி, கயை, குருக்ஷேத்திரம், சூர்ய குண்டம், பிரம்ம சரஸ் ஆகிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா போன்ற மகா புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து, பித்ருக்களுக்காக அவரவரது சக்திக்கேற்ப தானம் கொடுப்பது அளவற்ற புண்ணிய பலனைத் தரும்.
சிராத்த பலன்!
  • மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தம், மற்றும் பித்ரு பூஜைகள் ஆகியவற்றின் புண்ணிய பலன் நமக்குப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும். தர்ம தேவதைக்கு தீப தானம் அளிப்பது மகத்தான புண்ணிய பலனை அளிக்கும். மஹாளய பட்சத்தில் சிராத்தம் செய்து, பித்ருக்களை பூஜிக்கும் புண்ணிய பலன் எத்தகைய கொடிய கிரக தோஷங்களானாலும், ஒரு நொடியில் போக்கி விடும்.
பித்ருக்களை வழி அனுப்புதல்!
  • மஹாளய அமாவாசை அன்றுதான் பித்ருக்கள் அவர்களது உலகங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். ஆதலால், அன்று அவர்களை விசேஷமாக பூஜித்து, நமஸ்கரித்து, அவர்களை வழி அனுப்ப வேண்டும். கிடைத்தர்க்கரியது பித்ருக்களின் ஆசி. அதிலும் மஹாளய பட்சம் 15 நாட்களும் அவர்கள் நம்முடன் பரம கருணையுடன் தங்கியிருப்பதால், அதற்கேற்ப நாம் பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். கிடைத்தற்கரியது மஹாளய பட்ச புண்ணிய காலம்.
–நன்றி குமுதம் ஜோதிடம்

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மஹா தந்திர யுக்தி

கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.?
1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர்
4)கர்ணன்,
5) ஜயத்ரதன்,
6) துரியோதனன்
7) விதுரர்...
  • அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள். ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.
யார் இந்த விதுரர்.?
  • விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும்சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
  • கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் . பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம். கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி. 
  • சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும், மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.? திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான தண்டனை — யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி. விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?
  • விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும். மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
  • எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
  • விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை. மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.
எப்படி தடுப்பது.?
  • இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி .... ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள். Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்த திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
  • சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது — விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.
  • மறுநாள், அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான். கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். 
  • திரும்பும்முன், கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றான். கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
  • கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
  • ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு. அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். (ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
  • விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
  • யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை. இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால், விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.? 
  • விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து., விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி 


திருப்பதி - தினசரி சேவை முறைகள்!


  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். 
  • முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் ""கவுசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். 
  • அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். "விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.
  • திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற் ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்). 
  • ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி(ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.
  • சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். 
  • சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா என மாறிவிட்டது.
  • கொலுவு தர்பார்: ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
  • முதல் மணி: அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.
  • இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.
  • சகஸ்ரநாம அர்ச்சனை: கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய் வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். 
  • சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.
  • சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.
  • ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.
  • கல்யாண உற்சவம்: திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஊஞ்சல் சேவை: மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை டோலாத்ஸவம் என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும். மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

Tuesday, 1 August 2017

திருப்பாணாழ்வார்

  • திருப்பாணாழ்வார் தாம் தாழ்குலத்தில் பிறந்தோம் என்பதற்காக திருவரங்கத்திற்கு உட்செல்ல மனம் கூசி தினந்தோறும் தென் திருக்காவேரியின் கரையிலிருந்து திருவரங்கனை நோக்கிப் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்.
  • ஒருநாள் திருவரங்கப்பனுக்கு ஆராதனை புரியும் லோகசாரங்க முனிவர் என்பர் தென் காவிரியில் திருவரங்கநாதனின் திருமஞ்சணத்திற்கு காவிரித் தண்ணீரை முகந்து கொண்டு செல்ல வந்து கொண்டிருக்கும் போது தென் காவிரிக் கரைமீது நின்று கொண்டு திருப்பாணாழ்வார் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். இவரைக் கண்ட லோகசாரங்க முனிவர் கையை தட்டி ஏ, பாணனே அப்பால் செல்க என்று கூறினாராம்.
  • தம்மை மறந்த நிலையில் எம்பெருமானிடம் ஈடுபட்டிருந்த திருப்பாணரின் செவிகளில் கையொலி சத்தம் கேட்க வில்லை. தன் நிலையினின்றும் பிறழாது மனமுருகி பாடிக் கொண்டேயிருந்தார். இதைக்கண்ட லோகசாரங்கர் ஒருசிறு கல்லை எடுத்து பாணர் மீது வீசவே அது அவர் நெற்றியில் பட்டு இரத்தம் பீறிட்டது. நிலையுணர்ந்த பாணர் நடுநடுங்கி ஒதுங்கி நின்று லோக சாரங்கருக்கு வழிவிடுத்தார். லோகசாரங்கர் தீர்த்தம் முகர்ந்துகொண்டு திருவரங்கப்பன் முன் வந்து நின்றார். என்ன ஆச்சர்யம் திருவரங்கனின் நெற்றியினின்றும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருந்தது.
  • செய்வதறியாது திகைத்து அனைவரும் கூடி இந்த ஆச்சர்யத்தை கண்ணுற்று வகையறியாது நின்றனர். மனம் நொந்து மயங்கிய நிலையில் துயில்கொண்ட லோகசாரங்கர் கனவில் வந்த அரங்கன் பாணரைத் துன்புறுத்தியது தவறென்றும், நும் போன்றே அவரும் தொண்டரன்றோ, நீர் சென்று உம் தோள் மீது அவரைச் சுமந்து வாரும் என்று பணித்தார்.
  • மறுநாள் காலையில் லோகசாரங்க முனிவரும், மற்றையோர்களும் தென்திருக்காவேரி செல்ல தம்மை மறந்து எம்பெருமான் மீது மையல்கொண்டு பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணரை வணங்கி, அவரிடம் பெருமாளின் திருவுளக்குறிப்பை தெரிவித்து தம்தோள் மீது ஏற்றிக் கொணர்ந்து திருவரங்கர் முன் விடுத்தனர். திருவரங்கநாதனைக் கண்குளிரக் கண்ட திருப்பாணாழ்வார் அவரது திருமுகம், கண், வாய், செவி, திருவுந்திக் கமலம், ஆகியவற்றின் பேரழகில் மயங்கி அமலனாதிப்பிரான் எனத்தொடங்கும் 10 பாசுரங்களை வழங்கி திருவரங்கன் திருவடிக்கீழ் புகுந்து மறைந்தார்.

கிருஷ்ண மாயையின் பலம்

  • நாரதர் ஒரு சமயம் கிருஷ்ணரைத் தரிசிக்கச் சென்றார். அவரை கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். இருவரும் உரையாடியபடியே உலாவச் சென்றார்கள். அப்போது நாரதர், கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மைதானா? தேவரிஷி என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானியாகிய என்னை உங்களுடைய மாயை என்ன செய்யும்? மாயையால் நானும் பாதிக்கப்படுவேனா? என்று கேட்டார். 
  • அதைக் கேட்ட கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று துõரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்... என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார். மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; 
  • குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா? என்று கேட்டான். 
  • நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.
  • இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது. போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள். அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில்இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், அரசியாரே! போரில் நமது அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள், என்று கூறினர்.
  • நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள். விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது. குழந்தையை எடுக்க முடியவில்லை. 
  • பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட துõரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள். 
  • காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்.... நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன! என்று பலவாறு கூறி கதறி அழுதாள். 
  • அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுதுகொண்டி ருக்கிறாய்? என்று கேட்டார். நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள். முதியவர் அவளிடம், அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும், என்று தெரிவித்தார். முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. 
  • குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக் கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று துõரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்தபடியே கிருஷ்ணரிடம் சென்று, பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். 
  • உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள், என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார். கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார். வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான். 
  • தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா! மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.
  • முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். - பகவத்கீதை 7.14-

சிவன் கோவிலில் வழிபடும் முஸ்லிம்கள்


  • ராம்பூர்: உ.பி., மாநிலத்தில் உள்ள, ஒரு சிவன் கோவிலுக்கு, ஹிந்து, முஸ்லிம் பாகுபாடின்றி, அனைவரும் வந்து பூஜை செய்வதுடன், கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை பெற்று செல்கின்றனர்.

  • உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராம்பூரில் உள்ள பாதாளேஷ்வர் சிவன் கோவிலுக்கு, ஹிந்துக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் மக்களும் வந்து பூஜை செய்து, பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

  • இது குறித்து, கோவில் பூசாரி, நரேஷ் குமார் சர்மா கூறியதாவது: தரிசு நிலமாக இருந்த இந்த இடத்தில், 1788ல், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய நவாப், அகமது அலி கான், ஹிந்து பண்டிதர்களை அழைத்து, கோவில் கட்ட ஏற்பாடு செய்தார்; 1822ல், கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

  • முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு, அப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களும் வந்து, பக்தி சிரத்தையுடன் பூஜை செய்து, பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, 31 July 2017

அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர் (இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்)

  • மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில். மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை உள்ளதாகவும் சுமார் 90 அடி உயரமும் உள்ளது. உள்ளே நுழைந்ததும் நாம் முதலில் காண்பது இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதி. இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர்.
  • ஸ்தலத்தின் சிறப்பம்சம்: இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அக்னி பூஜித்த தலமாதலால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். அக்னி தவம் செய்யும் போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்கிறது.
  • இத்தலத்து இறைவன் கோணப்பிரான் என்று அழைக்கபடுவதற்கும் காரணம் உண்டு. பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.
  • இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.
  • செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது: திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
  • அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்த போது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது. இவருக்கு இக்கோவிலில் தனி சந்நிதியும் இருக்கிறது. சித்திரை சதயத்தை ஒட்டி இவ்வாலயத்தில் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போது ஐதீகமாக நடத்தப்படுகிறது.

வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு

  • மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை  ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
  • வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் – இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம் ( துணிக்கடையில் கலசத்திற்கு சுற்றும் பட்டு துணி என்று கேட்டால் கிடைக்கும்).
  • பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல் வாழைப்பூவை  வைக்கவும். 
  • வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ (கிராமங்களில் சிறுவர்கள் ரேடியோ பூ என்று சொல்வார்கள்) அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ  மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 
  • கலசத்தில் உளளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும். 

பூஜைக்குறிய மந்திரம்:-ஓம் பவாய நம ஓம் சர்வாய நம ஓம்ருத்ராய நம ஓம் பசுபதே நம ஓம் உக்ராய நமஓம் மஹாதேவாய நம ஓம் பீமாய நம ஓம்ஈசாய நம 
  • தினமும் 108 தடவை காலையும் மாலையும் கூறி பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் தருவார்கள் என்பது நம்பிக்கை.

முருகனுக்கான அபிஷேகங்களும் பலன்களும்

ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்

ஸ்ரீ  கந்தர் சஷ்டி கவசம்

(தேவராய சுவாமிகள் அருளியது)
காப்பு
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக



ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]