- 07.08.2017 இரவு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும்போது, பூமியால் சூரியன் மறைக்கப்பட்டு, சந்திரன் இருளாக காட்சி அளிப்பதை சந்திர கிரகணம் என்கிறோம்.
- சந்திர கிரகணம், பவுர்ணமியின்போதுதான் நிகழும். இந்த சந்திர கிரகணம் நாளை (திங்கட்கிழமை) வருகிறது. இது இந்திய நேரப்படி இரவு 10.52 மணிக்கு தொடங்குகிறது. நள்ளிரவு 12.48 மணிக்கு முடிகிறது. இது பகுதியளவு சந்திர கிரகணம் ஆகும்.
- இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவிலும், பிற ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், பார்க்க முடியும். அதே நேரத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம், வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் பகல் என்பதால் அங்குள்ளவர்கள் இதைப் பார்க்க முடியாது.இந்த தகவல்களை டெல்லி பிர்லா கோளரங்க ஆராய்ச்சி, கல்வி இயக்குனர் தேவி பிரசாத் துவாரி தெரிவித்தார்.
- சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மாலை 4½ மணி முதல் நாளைமறுதினம் அதிகாலை 2 மணி வரையில் நடை சாத்தப்பட்டிருக்கும்.
- சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏதுவாக சென்னை கிண்டி, காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் 4 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம் என்றும், இதேபோல், சந்திரகிரகணம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 31ந்தேதி ஏற்படும். இந்த மாதம் 21ந் தேதி சூரிய கிரகணம் வருகிறது.
- காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் நாளை (திங்கள்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மறுநாள் காலை 8ந்தேதி அதிகாலையில் வழக்கம்போல் நடை திறக்கப்படும். அன்றைய தினம் நடைபெற இருந்த தங்க ரதம் ரத்து செய்யப்படுகிறது என்று காமாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Search This Blog
Monday, 7 August 2017
சந்திர கிரகணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment