- திருப்பாணாழ்வார் தாம் தாழ்குலத்தில் பிறந்தோம் என்பதற்காக திருவரங்கத்திற்கு உட்செல்ல மனம் கூசி தினந்தோறும் தென் திருக்காவேரியின் கரையிலிருந்து திருவரங்கனை நோக்கிப் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்.
- ஒருநாள் திருவரங்கப்பனுக்கு ஆராதனை புரியும் லோகசாரங்க முனிவர் என்பர் தென் காவிரியில் திருவரங்கநாதனின் திருமஞ்சணத்திற்கு காவிரித் தண்ணீரை முகந்து கொண்டு செல்ல வந்து கொண்டிருக்கும் போது தென் காவிரிக் கரைமீது நின்று கொண்டு திருப்பாணாழ்வார் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். இவரைக் கண்ட லோகசாரங்க முனிவர் கையை தட்டி ஏ, பாணனே அப்பால் செல்க என்று கூறினாராம்.
- தம்மை மறந்த நிலையில் எம்பெருமானிடம் ஈடுபட்டிருந்த திருப்பாணரின் செவிகளில் கையொலி சத்தம் கேட்க வில்லை. தன் நிலையினின்றும் பிறழாது மனமுருகி பாடிக் கொண்டேயிருந்தார். இதைக்கண்ட லோகசாரங்கர் ஒருசிறு கல்லை எடுத்து பாணர் மீது வீசவே அது அவர் நெற்றியில் பட்டு இரத்தம் பீறிட்டது. நிலையுணர்ந்த பாணர் நடுநடுங்கி ஒதுங்கி நின்று லோக சாரங்கருக்கு வழிவிடுத்தார். லோகசாரங்கர் தீர்த்தம் முகர்ந்துகொண்டு திருவரங்கப்பன் முன் வந்து நின்றார். என்ன ஆச்சர்யம் திருவரங்கனின் நெற்றியினின்றும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருந்தது.
- செய்வதறியாது திகைத்து அனைவரும் கூடி இந்த ஆச்சர்யத்தை கண்ணுற்று வகையறியாது நின்றனர். மனம் நொந்து மயங்கிய நிலையில் துயில்கொண்ட லோகசாரங்கர் கனவில் வந்த அரங்கன் பாணரைத் துன்புறுத்தியது தவறென்றும், நும் போன்றே அவரும் தொண்டரன்றோ, நீர் சென்று உம் தோள் மீது அவரைச் சுமந்து வாரும் என்று பணித்தார்.
- மறுநாள் காலையில் லோகசாரங்க முனிவரும், மற்றையோர்களும் தென்திருக்காவேரி செல்ல தம்மை மறந்து எம்பெருமான் மீது மையல்கொண்டு பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணரை வணங்கி, அவரிடம் பெருமாளின் திருவுளக்குறிப்பை தெரிவித்து தம்தோள் மீது ஏற்றிக் கொணர்ந்து திருவரங்கர் முன் விடுத்தனர். திருவரங்கநாதனைக் கண்குளிரக் கண்ட திருப்பாணாழ்வார் அவரது திருமுகம், கண், வாய், செவி, திருவுந்திக் கமலம், ஆகியவற்றின் பேரழகில் மயங்கி அமலனாதிப்பிரான் எனத்தொடங்கும் 10 பாசுரங்களை வழங்கி திருவரங்கன் திருவடிக்கீழ் புகுந்து மறைந்தார்.
Search This Blog
Tuesday, 1 August 2017
திருப்பாணாழ்வார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment