Search This Blog

Thursday, 18 August 2016

சுகம் தரும் ஸ்ரீசுக்கிரபகவான், கஞ்சனூர்.

 


  • சூரியனார் கோயிலுக்கு வடகிழக்கே சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில்லுள்ளது கஞ்சனூர் எனும் திருத்தலம். தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கல்லணை-பூம்புதார் சாலையில் உள்ள இந்த சைவ ஸ்தலத்தில் ஸ்ரீ அக்னீஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு துணையாக கற்பகாம்பாள் என்ற பெயரில் தாயாரும் வீற்றிருக்கிறார். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் அக்னீஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமானை தான் செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வழங்கும் நவக்கிரகங்களிலொருவரான சுக்கிர பகவானாக பக்தர்கள் வழிபடுகின்றனர். எப்படி காளஹஸ்த்தியில் சிவபெருமானை இராகு மற்றும் கேது கிரகங்களாக கருதி வழிபடுகின்றனரோ, எப்படி மதுரையில் வீற்றிருக்கும் ஸோமசுந்தரேசுவரரை புத பகவானாக கருதி வழிபடுகின்றனரோ, அப்படியே இங்கும் அக்னீசுவரரை சுக்கிர பகவானாக வழிபடுகின்றனர். ஆக, இது ஒரு நவக்கிரக ச்தலமாகவே கருதப்படுகிறது.
  • இங்குள்ள இரு தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம் என்றும் மற்றொன்று பராசர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. அப்பரால் பாடப்பட்ட இந்த பழம் பெரும் கோயில் சாலையோரமாகவே உள்ளது. ஐந்து கட்டுக்களையுடையது இக்கோயிலின் கோபுரம்.
  •  கிரஹ மண்டலத்தில் சுக்கிரன் ஆறாவது கிரஹம் ஆவார். பிரம்மதேவரின் மானஸபுத்திரரான பிறகு முனிவருக்கு மகன் ஆனதால் பார்கவன் எனப்பெயர் பெற்றார். இவருக்குக் கவி என்றும் ஒரு பெயர் உண்டு. சுக்கிர பகவான் மிகச்சிறந்த சிவபக்தர். சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி என்ற மந்திரத்தைக் கற்றவர். சுக்ரபகவான் வெள்ளி நறம் கொண்டவர். கிரஹங்களில் சுபர். ஜங்கோண மண்டலத்தில் வெண்பட்டாடை உடுத்தி வெண்தாமரை மலர் அணிந்து கருட வாஹனத்தில் வீற்றிருப்பவர். முதலை வாஹனமும் உண்டு. அசுரர்களுக்குக் குருவானதால் சுக்ராசார்யார் என்று அழைக்கப்படுகிறார். கிரஹமண்டலத்தில் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு வடக்கே தெற்கு நோக்கிய திருமுகத்துடனும் காட்சி தருகின்றார்
  • சுக்கிரபகவான் ரிஷபதுலா ராசிக்கு அதிபதி, பரணி, பூரம், பூராடம், நட்சத்திரத்திற்கு உரியவர். சுக்ரதிசை இருபது ஆண்டுகள் ஆகும். மீன ராசியில் உச்சமும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். ஒரு ராசியில் இவர் சஞ்சரிக்கும் காலம் சுமார் ஒரு மாதம் ஆகும். சுக்கிரபகவானுக்கு மித்திரன் - புதன், சனி, சத்ருசூரியன், சந்திரன். சமன் - செவ்வாய், குரு. உலோகம் வெள்ளி, கல் - வைரம், தான்யம் - வெள்ளை மொச்சை, சமித்துஅத்தி, அதிதேவதை - இந்திராணி, பிரத்யதி தேவதை - இந்திரன். கோசாரத்தில் 1, 2, 3, 4, 5, 8, 9, 11, 12 ஆகிய இடங்களில் சுபத்தையும் 6, 7, 10 ஆகிய இடங்களில் அசுபத்தையும் செய்வார்.
  • சுக்ர பகவான் களத்திர காரகன். சுகபோகத்தைச்செய்பவர். வேலைவாய்ப்பு, தொழில், திருமணம், வாகனம், வாசனை திரவியங்கள், இலக்கியம் மற்றும் கவிதை எழுதும் ஆற்றல் ஆகியவற்றைச்செய்பவர். திருமணத்தடை, தம்பதிகள் ஒற்றுமையின்மை, தொழில் வியாபாரம், வாகனம் ஆகியவற்றில் நஷ்டம் குளிர் மற்றும் கண் சம்மந்தமான நோய்கள் ஆகிய தோஷங்களைச் செய்பவர். இத்தலத்தில் ஸ்ரீ அக்னீஸ்வரர் சன்னதிக்குத் தென்பாத்தில் சுகபோகம் அருளும்பார்வதி தேவியுடன், தேவர்களுக்கு சுக்கிர தோஷம் நீக்கியருளிய சிவபெருமான் தனிச்சன்னதிகொண்டு எழுந்தருளியுள்ளார்.
  •  திருநாவுக்கரசரால் இமவான்தன் பேதையோடும் இனிதிருந்த பெருமான் என்று போற்றப்படும் இப்பெருமானை வணங்கி வழிபடுபவர்கள் சுக்கிர கிரஹத்தினால் ஏற்படும் அனைத்து தோஷங்களிலிருந்து விடுபட்டு பொன்னும் மெய்ப்பொருளும் போகமும் திருவும் பெற்று சுகபோகவாழ்வு வாழ்வார்கள்.
*********

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]