Search This Blog

Friday, 19 August 2016

திருநள்ளாறு - சனி பகவானின் திருத்தலம்!


  • திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர். அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.
  • திரு+ நள + ஆறு என்பது திருநள்ளாறு என்று ஆனது. இதில் 'நள' எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
  • இதன் காரணமாக நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் திருநள்ளாறு என பெயர் பெற்றது. பாண்டிச்சேரியில், காரைக்கால் அருகே அமைந்துள்ள திருநள்ளாறு, நவகிரஹ ஸ்தலங்களில் ஒன்று.
  • சனீஸ்வர பகவானின் சக்தி வாய்ந்த திருவுருவச் சிலையைக் கொண்ட இக்கோயில்,ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் கோயிலின் ஒரு அங்கமாகும். ஸ்ரீ தர்பாண்யேசுவரர் கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார்.
  • காரைக்காலில் இருந்து சாலை வழியாக எளிதில் திருநள்ளாறை அடைய முடியும். திருச்சி, திருவாரூர் வழியாகவும் காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம்.
  • மூன்று வருடத்திற்கு ஒரு முறை தன் இருப்பிடத்தை (ராசி) மாற்றி கொள்பவர் சனி பகவான். சனி பகவான் வீற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து தான் பல்வேறு ராசிக்காரர்களின் இன்ப துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது.
  • பச்சைப் படிகம் எனும் கீர்த்தனை திருநள்ளாறில் இயற்றப்பட்டதால், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவ்வூருக்கு முக்கிய பங்கு உண்டு. மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் அமைதியான, அழகான ஊர் திருநள்ளாறு. அங்கு சென்று வழிபடும் அனைவருக்கும், நல்ல பலன்களை அள்ளித் தருவார் சனி பகவான். 

    திருநள்ளாற்றின் வரலாறு

  • திருநள்ளாற்றிற்கு மிக சுவாரஸ்யமான வரலாறு உண்டு. பச்சைப் படிகம் என்ற கீர்த்தனைகள் மூலம் திருநள்ளாறு குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வூர் மக்கள், ஜெயினர்களின் வருகையால் அவர்களின் சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.
  • அந்த நகரத்தை ஆண்ட ராஜாவோ இத்தகைய மாற்றத்தை விரும்பவில்லை. மாறாக, அந்த நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார்.
  • அப்போது, சைவத் துறவியான திருஞான சம்பந்தரின் சிறப்புக்களைப் பற்றி கேள்விப்பட்ட அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அரசரின் அழைப்பை ஏற்று இங்கு வந்த திருஞான சம்பந்தர், அரசருக்கு நீண்ட காலமாக இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார்.
  • இது அந்நகரம் முழுக்க பரவ ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் திருஞான சம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது.
  • திருஞான சம்பந்தரின்பால் ஈர்க்கப்பட்டு, மக்கள் சைவ சமயத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார்.  இதன் தொடர்ச்சியாக, எழுந்தது தான் திருநள்ளாறு கோவில்.

  • சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கிலிதான். ஆனால் சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக  தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.
  • சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய்.  பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.
  • சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.
  • ஆயுள் காரகனாக செயல்படும் சனி கலகங்கள், அவமதிப்பு, நோய், போலியான வாழ்வு, அடிமை நிலை, கடுகு, உளுந்து எள்ளு, கருப்பு தானியங்கள், இயந்திரங்கள், ஒழுங்கற்ற செயல்கள், விஞ்ஞான கல்வி, இரும்பு உலோகங்கள், அன்னிய நாட்டு மொழிகள், ஏவலாட்கள், எடுபிடி, திருட்டு, சோம்பல் முதலியவற்றிற்கும் காரகம் வகிக்கிறார். இது மட்டுமின்றி பாரிச வாய்வு, வாதநோய், எலும்பு வியாதிகள், பல் நோய், ஜலதோஷம், யானைகால் நோய், புற்றுநோய், ஆஸ்துமா, ஹிஸ்ப்ரியா சித்த சுவாதீனம், கை கால் ஊனம், சோர்வு மந்தமான நிலை இயற்கை சீற்றத்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.
  • சனி தான் நின்ற வீட்டிலிருந்து 3,7,10 ம் வீடுகளை பார்வை செய்கிறார். இதில் 10ம் பார்வை மிகவும் பலம் வாய்ந்தது.  7 ம் பார்வை பாதி பங்கு பலம் வாய்ந்தது. 3 ம் பார்வை மிகவும் குறைந்த பலத்தை உடையது. செவ்வாயின் பார்வையை  விட சனி பார்வை கொடியது. சனி சூரியனை பார்வை செய்தால் மிகவும் கஷ்டப்பட்டே உணவு உண்ண வேண்டும். பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. சனி சந்திரனை பார்வை செய்தால் உடல் நிலையில் பாதிப்பு, தாய்க்கு தோஷம் உண்டாகும்.
  • மகரம்,கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம லக்னத்திலிருந்தால் எல்லா பாக்கியமும் கிடைக்கப் பெறும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஒருவருக்கு சனி திசை 4 வது திசையாக வந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை ஏற்படுத்தும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நான்காவது திசையாக வரும். சனி ஜெனன ஜாதகத்தில் 3,6,10,11 ல் இருந்தால் கேந்திர திரிகோணங்களில் பலமாக இருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் ஏற்றமான வாழ்வு உண்டாகும். 
தொடரும்.....

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]