Search This Blog

Saturday, 31 March 2018

ராஜயோகம் தரும் ராகு பகவான்

காளஹஸ்தி
  • ``யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்’’ என்கிறார் ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன்.
  • ரத்தினங்களில் கோமேதகத்துக்கும், வஸ்திரங்களில் கருமை நிறத்துக்கும், வாகனங்களில் ஆடாகவும், சமித்தில் அருகாகவும், சுவையில் புளிப்பாகவும், உளுந்து அன்னத்தில் விருப்பம் கொண்டவராகவும், பஞ்ச பூதங்களில் ஆகாய கிரகமாகவும், நாடியில் பித்த நாடி உடையவராகவும் திகழ்கிறார்.
  • இவரின் அதிதேவதைகள் காளி, துர்கை, கருமாரியம்மன். குணங்களில் 'தாமஸ குணம்' கொண்டவராகவும், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.
  • ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். இவரது தசாபுக்தி 18 ஆண்டுகளாகும். ‘ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை... ராகுவைப் போல் கெடுப்பவரும் இல்லை’ என்று இவ்வுலகம் புகழ்ந்து போற்றும்படியாகச் செயல்படுபவர் ராகு மட்டுமே.
  • சாயா கிரகமான ராகு அனைத்து ஜீவராசிகளிலும் அருளாட்சி புரிந்துவருகிறார். எனினும், மானிடர்களாகிய நமக்கு அவரவர் லக்னப்படி சில இடங்களில் சாதாரண பலன்களும், சில இடங்களில் மிகப் பிரபலமான ராஜயோகத்தையும் அள்ளித் தருகிறார்.
  • லக்னத்தில் ராகு இருந்தால், ஜாதகர் தேகபலன் உடையவராகவும், பிடிவாத குணம் கொண்டவராகவும்,  வறட்டு வேதாந்தம் பேசுபவராகவும் இருப்பார்.
  • 2-ம் இடத்தில் இருந்தால், முன்கோபம் கொண்டவர். சுடுசொல் சொல்பவராக இருப்பார். ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் இருக்கும். தனக்கு சரியெனப் படுவதை மட்டுமே செய்வார். 
  • 3 - ம் இடத்தில் இருந்தால், சகோதரி உடல் நலியும். அகால போஜனமும் ஏற்படும். சதா பிரயாணமும் செய்பவராக ஜாதகர் இருப்பார். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.
  • 4 - ம் இடத்தில் இருந்தால், தாயாருக்கு  உடல் நலிவு ஏற்படும். அகால போஜனமும் சதா பிரயாணமும் செய்பவர். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.

  • 5 - ம் இடத்தில் இருந்தால், புத்திரத் தடைகளும், தோஷமும் உண்டு.  பூர்வ புண்ணியத்தில் தடை இருக்கும்.
  •  6 - ம் இடத்தில் இருந்தால், நல்லறமான இல்லறம், செல்வம் செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு.  
  • 7 - ம் இடத்தில் இருந்தால், திருமணத்தடை, கலப்பு மணம், வீண் பழிச்சொல் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு.
  • 8 - ம் இடத்தில் இருந்தால், கடின மனம் கொண்டவராக இருப்பார். ஆயுள் விருத்தி உண்டு. 
  • 9 - ம் இடத்தில் இருந்தால், தந்தைக்கு நஷ்டம் ஏற்படும். பிதுர் சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். ஆனாலும், ஜாதகருக்கு பூமி, பொருள் சேர்க்கை உண்டு.
  • 10 - ம் இடத்தில் இருந்தால், கோடீஸ்வரர். பெண்கள் மூலம் பொருள் சேரும். நவரத்தினங்கள் சேரும். யோகமான வாழ்வு ஏற்படும். வெளிநாடு செல்வார். 
  • 11 - ம் இடத்தில் இருந்தால், பிதுர் தோஷம் உண்டு. ஜாதகருக்கு திடீர் தனவரவு உண்டு. அசையா சொத்துக்களான நிலத்தின் மூலம் யோகம் கிடைக்கும். 
  • 12 - ம் இடத்தில் இருந்தால் தூக்கம் கெடும். சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதிகச் செலவுகள் செய்பவர். சர்ப்ப தோஷமும் உண்டு.
  • இவரது வீடான கன்னியில் ஆட்சியுடனும், விருச்சிகத்தில் உச்சமாகவும் இருப்பார். ராகு பகவான் பலன் தரக்கூடிய இடங்களாவன. கேந்திரஸ்தானங்களான 1, 4, 7, 10 -ம் இடங்களிலோ திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 -ம் இடங்களிலோ சுபக் கிரகங்களுடன் சேர்ந்தோ, சுபக்கிரகங்களால் பார்வையைப் பெற்று இருந்தாலோ, அவரது தசா புக்தி காலங்களில் திடீர் யோகம் ஏற்பட்டு ஜாதகர் பெரும் செல்வந்தராவார்.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]