Search This Blog

Saturday, 31 March 2018

ராகு கேது உருவான வரலாறு

  • அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் வெளி வந்தது. அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக எடுத்து கொள்ளுவது என்று முடிவு பண்ணினர்.அப்போது விஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அசுரர்களை மயக்கினார். அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில் இருந்தது. அதனை மோகினி வாங்கிக் கொண்டாள். அவளது அழகில் மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும் பரிமாரட்டும் என கூறிவிட்டனர்.
  • தேவர்களும் ஒப்புக் கொண்டனர். யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சினை எழுந்தது. மேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும் திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது.
  • இதில் ஏதோ சூச்சி உள்ளது என புரிந்து கொண்ட கஸ்யப மஹரிஷியின் மகனான ஸ்வர்பானு எங்கே தனக்கு அமிர்தம் கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சி அசுரவடிவம் மாற்றி தேவர் வடிவம் பூண்டு தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை சூரியனும், சந்திரனும் பார்த்து விட்டனர். இதற்குள் மோகினி, தேவன் என்று நினைத்து ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் அளித்து விட்டார். அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான்.
  • சந்திர, சூரியர்கள் மோகினியிடம் சென்று நடந்தவற்றை கூறினர். மோகினி வடிவம் தாங்கிய விஷ்ணுவுக்கு கடுங்கோபம் உண்டாயிற்று. அவள் தன் கையில் இருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி தட்டினார். 
  • தலைவேறு, முண்டம் வேறு என இருகூறுகளாயிற்று அமிர்தம் உண்ட காரணத்தால் உயிர் நீங்கவில்லை. ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள். அமிர்த கலசத்தை பிடுங்க அசுரர்கள் முயல, மோகினி வேகவேகமாக அனைத்தையும் தேவர்களுக்கு அளித்து விட்டார். 
  • ஏமாற்றமடைந்த அசுரர்கள் சுவர்பானுவால்தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி சுவர்பானுவை தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்துவிட்டனர்.
  • இரு உடலாக கிடந்தாலும் உடல் இருந்தும் தலை இல்லாமலும், தலை இருந்து உடல் இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு, பிரமனிடம் முறையிட்டாள். பிரம்மனோ விஷ்ணுவால்தான் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய இயலும்'' என்று கூறிவிட்டார். விஷ்ணுவை ஸ்வர்பானு வணங்கி பிராயச்சித்தம் செய்யும்படி கேட்டான்.
  • விஷ்ணு பகவான் அருள் சுரந்து பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார். அதேபோல் பாம்புத்தலையை மனித உடலுடன் பொருத்தினார். 
  • இப்போது மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள் பாலித்தார்.
  • இவ்வாறு ராகு கேது உருவானவுடன் மகாவிஷ்ணு இப்பூவுலகில் கிருதாயுகம் நடைபெறுகிறது. இப்போது உங்களுக்கு வேலை இல்லை, நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்க இன்னும் ஒரு யுகம் பொருத்திருக்க வேண்டும் என்றார். 
  • அடுத்த யுகமான திரேதாயுதத்தில் நான் ராமனாக மனிதகுலத்தில் பிறப்பேன். அப்போது உங்கள் சக்தியால் ராகு கோதண்ட மாகவும் (வில்) கேது அம்பாகவும் என்னிடம் வருவீர்கள். அசுரகுல கடைசி அரசனான ராவணனை கொல்வதற்கு நீங்கள் பயன்படுவீர்கள். அப்போது உங்கள் பாவம் தொலையும் என்றார். 
  • நீங்கள் வித்தியாசம் தெரிவதற்காக மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் வானவெளியில் அப்ர தட்சனமாக வலமிருந்து இடமாக சுற்றி வருவீர்கள் என்றார்.
  • ராகுவும் கேதுவும் தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க பிரம்மனிடம் வரம் கேட்டனர். அந்த வரத்தை பிரமன் தர மறுத்தார். பல காலம் தவமிருந்து பிரமனிடம் வரம் பெற்றனர். இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார். இதுவே கிரகணம் எனப்படுகிறது. 
  • ராகுவும், கேதுவும் வெட்டப்பட்ட போது ஒரு துண்டு நாகேஸ்வரத்திலும் மற்றொரு துண்டு கீழ்பெரும்பள்ளத்திலும் விழுந்ததாகவும் அங்கேயே அவர்கள் குடி கொள்ள இறைவனிடம் வேண்டி அருள் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.துவாபரா யுகத்திலிருந்து நட்சத்திர மண்டலத்தில் வலம் வருகிறார்கள்..

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]