Search This Blog
Friday, 13 January 2017
திலஹோமம்
பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் திலஹோமம்
- திலம் என்றால் எள். திலஹோமம் என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும் , தில ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான்.
- எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது.
- அந்த ஜாதகர் தில ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.
- எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை , என்று - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது.
- அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து - அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த தில ஹோமம்.
பூரி ஜெகன்னாதர் கோயிலின் அற்புதங்கள்
- கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
- கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
- பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலைமுதல் இரவுமுழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால் பூரியில் இதற்க்கு நேர்எதிராக நடக்கும்.
- இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
- இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை.
- இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும் ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.
- இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
- சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
சிவபெருமானின் குரு
- ஒரு தடவை பார்வதியும் பரமேஸ்வரரும் கைலாயத்தில் தனியாக இருக்கும்போது பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது , பார்வதி தேவி , சிவனை பார்த்து சொன்னார்கள். எல்லோருக்கும் அனைத்தையும் தான் தருகிறீர்கள். ஆனால் நமகென்று ஒரு ஏன் ஒரு வீடு கூட இல்லை என்றாள் .
- சிவபெருமான் சரி என சொல்லி ஒரு அருமையான வீட்டை சிருஷ்டி செய்தார், பார்வதிக்காகவும் தனக்காகவும். எப்போதும் போல் வீடு கட்டிவிட்டால், க்ருகப்ரவேசம் செய்யணுமே ., அதற்காக , தனது வீட்டு ஐயரை கூப்பிடவேண்டும் அல்லவா. அதுபோல்தான் தனது ஐயரை கூப்பிட்டு செய்ய சொன்னார் இறைவன். அந்த ஐயர் யார் தெரியுமா, வேறு யாரும் இல்லை., நம்ம ராவணன்தான் .
- ராவணன் வந்து க்ருகப்ரவேசத்தை தடபுடலாக செய்தான் .சிவனுக்கு ஆயிற்றே. ராவணனை மிஞ்சிய சிவ பக்தன் மூன்று உலகிலும் இல்லையே.
- காரியங்கள் முடிந்தன.இப்போது ஆசாரியரின் பூஜைக்காக, தக்ஷிணை கொடுக்கவேண்டும் அல்லவா.அதற்காக, ராவணனை சிவ பெருமான் கேட்கிறார். உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று. ராவணன் , தாங்கள்தானே கொடுக்கவேண்டும்,கொடுங்கள் என்றான். அதற்க்கு சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேளு , என்று சொன்னவுடன், ராவணன் கேட்டான், எதுகேட்டாலும் தருவீர்களா என்றான். சிவபெருமான் எதுவேண்டுமானாலும் கேள் என்றான்.
- அப்படியானால், சிவபெருமானே, உங்கள் வீட்டு க்ருகப்ப்ரவேச தட்சிணையாக, நீங்கள், இந்த வீட்டையே எனக்கு கொடுங்கள் என்றான். சிவனும் அப்படியே ஆகுக என்று கொடுத்துவிட்டார் தனது வீட்டை. அந்த வீடு எது தெரியுமா அன்பர்களே., அதுதான் இலங்கை ஆகும். அதனால்தான் ராவணன் தனது இருப்பிடமாக இலங்கையை வைத்துக்கொண்டான்/
சரவணபவ மந்திரத்தின் பொருள்
"சரவணம்" என்றால் தர்ப்பை."பவ" என்றால் தோன்றுதல்.
- தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் "சரவணபவ' என பெயர் வந்தது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த தீப்பொறிகள், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கையை அடைந்தன.
- அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. பார்வதிதேவி. அவர்களை ஒரே குழந்தையாக்கினாள். ஆறு முகம், பன்னிரண்டு கையுடன் முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.
எளிமையான திருஷ்டி கழித்தல் முறை - எலுமிச்சம் பழம்
- கடை வைத்திருப்பவர்கள் திருஷ்டி கழிக்க பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த வழிமுறை மிகவும் பலன் உள்ளதாகும். கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதை இடம் வலமாக மாற்றி எறியுங்கள்.
- அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.
Wednesday, 11 January 2017
சிவாயநம
- ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
-
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார். நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
- பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
- பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
- ""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார். "நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது. நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை.
- இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
- ""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
- நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
- பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்.
சிவாயநம என்பதை
"சிவாயநம'
என்றே உச்சரிக்க வேண்டும்.
சி- சிவம்;
வ- திருவருள்,
ய-ஆன்மா,
ந-திரோதமலம்,
ம-ஆணவமலம்.
- திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.
- சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்
பூஜை மணியில் நந்தி சிலை?
வழிபாடு நடக்கும் இடத்தில் துஷ்டசக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகவே பூஜை மணியை பயன்படுத்துகிறோம். சிவனுக்குரிய வாகனம் நந்தி. கைலாயத்தின் பாதுகாவலராக இருப்பவர் இவர். சிவபூஜை நடக்கும் இடத்தை நந்திதேவர் பாதுகாப்பதாக ஐதீகம்.
விஷ்ணு கோயில்களில் பூஜை மணியில் சக்கரத்தாழ்வார் இடம் பெற்றிருப்பார்.
Tuesday, 3 January 2017
ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களின் பலன் :
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
Monday, 2 January 2017
தர்ப்பையின் மகிமை
- தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.
- தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
- பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
- சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
- பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
- தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
- சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
- உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.
உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
- 50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்பைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.
- இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.
- யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகறது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.
18 சித்தர்கள்
- சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.
- சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.
- இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.
- அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
- இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.
- அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.
- அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ
திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக.
Subscribe to:
Posts (Atom)