- சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.
- சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.
- இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.
- அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
- இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.
- அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.
- அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ
திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக.
No comments:
Post a Comment