Search This Blog

Saturday, 3 December 2016

புருஷா மிருகம்

  • புருஷா மிருகம் கால்கள் மட்டும்தான் புலிக்கால் போன்றிருக்கும். உடலோ மனித உரு. சிறந்த சிவபக்தை. ஆதலால், விஷ்ணு என்ற பெயர் காதில் விழுந்தாலே பாபம் என்று எண்ணியது. 
  • ஒரு முறை, பஞ்சபாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்ய நிச்சயித்தார்கள். அதற்கு புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர பீமனை அனுப்பினார் கிருஷ்ண பரமாத்மா. அதன் பலத்தைப்பற்றி எச்சரிக்கை செய்தபோது, `கேவலம், ஒரு மிருகத்தை என்னால் அடக்க முடியாதா!’ என்று கர்வத்துடன் புறப்பட்டான் பீமன்.
  •  புறப்படுமுன், கண்ணன் அவனிடம் பன்னிரண்டு ருத்ராட்சமணிகளைக் கொடுத்தார். எதற்கென்று கூறவில்லை. பீமனும் காட்டுக்குப் போனான், `கோபாலா, கோவிந்தா’ என்று பாடியபடி. அங்கு சிவனைத் தியானம் செய்துகொண்டிருந்த புருஷா மிருகத்தின் காதில் இந்த `கேட்கக் கூடாத’ வார்த்தைகள் விழவும், அது ஆக்ரோஷமாக அவன்மேல் பாய்ந்தது. பீமனால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. 
  • அப்போது மாதவன் கொடுத்தனுப்பிய ருத்ராட்சங்கள் ஞாபகம் வர, ஒன்றை எடுத்துத் தரையில் வைத்தான். மிருகம் உடனே தன் ஆத்திரத்தை மறந்தது. பக்தி பெருக, அதற்குப் பூசை செய்ய ஆரம்பித்துவிட்டது. இதுதான் சமயமென்று, பீமன் தப்பித்து ஓடினான்.
  •  நடந்ததிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாது, மீண்டும் `கோபாலா, கோவிந்தா’ என்று பாட, புருஷா மிருகம் அவனைத் துரத்தலாயிற்று. இப்படியே இருவரும் `ஓடிப்பிடிச்சு’ விளையாடி, இறுதியில் யாகசாலைக்குள் ஒரு காலையும் வைத்து விட்டான் பீமன். 
  • ஆனால், அதற்குள் அவனுடைய ஒரு காலை மிருகம் பிடித்துவிட்டது. `இது எனக்குத்தான் சொந்தம்!’ என்று அது உரிமை கொண்டாட, தருமர் வந்தார். தன் தம்பியின் கால் என்றும் பார்க்காது, பெயருக்கேற்றபடி, புருஷா மிருகத்தின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து, `நீ பிடித்த கால் உனக்குத்தான்! எடுத்துப்போ!’ என்று தருமர் நியாயம் வழங்கினார்.
  •  புருஷா மிருகம் யோசிக்க ஆரம்பித்தது. `கோபாலா’ என்று பீமன் பாடித் துதித்ததோ விஷ்ணுவின் அவதார புருஷனான கிருஷ்ணனை. ருத்ராட்சம் சிவனின் வியர்வைத் துளியிலிருந்து வந்தது என்பார்களே! அதை பீமனிடம் கொடுத்திருப்பது அந்த கிருஷ்ணன். 
  • அப்படியானால், சிவனும், விஷ்ணுவும் ஒருவர்தானே! தெளிவு பிறக்க, `உங்களுக்கு என்னால் என்ன ஆகவேண்டும்?” என்று பணிவன்புடன் கேட்டு, தன் பாலை வழங்கியது.
  • புருஷா மிருகத்தைப்பற்றி பகவத் கீதையின் இறுதி அத்தியாயத்தில் எழுதப்பட்டிருந்ததாம். ஆனால் சிவ பக்தர்களும், விஷ்ணு பக்தர்களும், இந்த இரு தெய்வங்களும் ஒன்றே என்று ஒப்புக்கொண்டால், நாம் சண்டை பிடிக்க முடியாதே என்று அதை நீக்கிவிட்டார்களாம். இன்றளவும், 
  • திருநெல்வேலி கோயில்களில் அதன் சிலைகள் இருக்கிறது என்று படித்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]