Search This Blog

Saturday, 3 December 2016

செய்வினை அகற்றுவது எப்படி?

பல காரணங்களால் வீடுகளில் துர்சக்திகள் புகுந்துவிடுகின்றன.
1. தெய்வக்குற்றம் (கடவுளுக்கு நாம் செய்யும் அபவாதம்)
2. பிதிர் குற்றம் (பிதிர்களுக்கு நாம் செய்யும் அபவாதம்)
3. செய்வினை சூனியம்
  • கோவில்களுக்கு போகும் பக்தர்கள் தெய்வநிந்தனை செய்வதாலும், ஆலயங்களுக்குள் செய்யத்தகாத வியங்களைச் செய்வதாலும் தெய்வக்குற்றம் ஆகிவிடுகிறது.
  • இறந்த ஆத்மாக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் உதாசீனம் செய்யும் போது அது பிதிர்க்குற்றம் ஆகிவிடுகிறது. தெய்வக்குற்றம், பிதிர்க்குற்றம் ஏற்படும்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் தாமாக இலகுவில் புகுந்துவிடும்.
  • அதைவிட செய்வினை சூனியம் மூலமாக தீயசக்திகளை பிறர் ஏவிவிட வைக்கின்றனர்.
தீயசக்திகள் வீட்டில் புகுந்தால் அதற்கான அறிகுறிகள் எவை?
- வீட்டில் உள்ள நிம்மதி இல்லாமல் போகும்
- எதிர்பாராத நோய்கள் உருவாகும்
- வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும் பல விடயங்கள் நடக்கும்
- பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்
-கடவுளில் நம்பிக்கை குறையும்
-விவாகரத்துக்களை உண்டாக்கும்
-குடும்பப்பிரச்சனைகளை ஏற்படுத்தும்
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?
  • 45 தினங்கள் வைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு தினமும் வழிபடவேண்டும். இந்த 45 தினமும் வீட்டில் மச்சம் மாமிசம் கொண்டுவரவே கூடாது. (மச்சம் மாமிசம் ஆகியவை தீயசக்திகளின் பலத்தை அதிகரித்துவிடும்). தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்ட வேண்டும். காலை சூரியன் உதயநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தி்லும் இதை தொடர்ந்து செய்யவேண்டும். 45 தினங்களில் மீண்டும் உள்ளே புக முடியாவிடின் தீயசக்திகள் உள்நுழைய முடியாது.
  • 45 தினங்களுக்கு பிறகு துர்ககையின் ஆலயம் சென்று, தீர்த்தம் பெற்று வீட்டில் தெளித்துவிடுங்கள். துர்க்கைக்கு அர்ச்சித்த குங்குமம் பெற்று, வீட்டு வாசலில் சூலம் கீறிவிடுங்கள்.
  • அதன் பின்னர், செய்வினை , சூனியம் வைத்த இடங்கள் தாமாக உங்கள் கண்ணுக்கு புலனாகும் சந்தர்ப்பம் ஏற்படும்.
  • வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]