Search This Blog

Wednesday, 23 November 2016

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன் ?

  • ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலைமாலை,வடைமாலை சாத்தி வழிபடுவர். இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
  • இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார். இச்செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்குத் தெரிவிக்க புறப்பட்டார் ஆஞ்சநேயர்.
  • அந்தச்செய்தி சீதையின் காதில் தேனாகப் பாய்ந்தது. மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க விரும்பினாள். அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள். அந்த கொடியைப் பறித்து விட்டு, ""நல்ல செய்தி சொல்லவந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக் கி றேன். ஏற்றுக் கொள்!'' என்றாள். 
  • அன்னை யின் கையால் கிடைத்த மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.

Friday, 18 November 2016

எந்த ATM களில் பணம் உள்ளது..? (In INDIA) :::: cashnocash.com


Website Name : https://cashnocash.com

Then Enter your Pincode : ____________

I entered my Pin code : 638105 then i got the following Screen



Thursday, 17 November 2016

குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க உதவும் ஸ்லோகம்

  • படி! படி! என்று அவர்களை எப்போதும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். 
  • பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு!
  • தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு, 
"புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே'' 
என்ற மந்திரத்தை 12 முறை சொல்லச் சொல்லுங்கள். ஒவ்வொரு முறை சொல்லி முடித்ததும், சூரியனை நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள்.

குங்குமம்

  • மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்ற. இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்.
  • அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு.
  •  உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்
  • குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்குமிகவும் நல்லது
  • இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்

Wednesday, 16 November 2016

எந்த ATM களில் பணம் உள்ளது..? (In INDIA)

  • ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன் திரும்புகின்றனர்.
  • இந்த சிரமத்தைநீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி ஏடிஎம்கள் செயல்பாட்டிலுள்ளது என்பதை துல்லியமாக காட்ட www.atmkaro.in/ என்ற வெப்சைட் வடிவமைக்கபட்டுள்ளது.

பசு தானம்

  • தானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பசு தானத்தை செய்வதன் மூலம், ஒருவர் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கிறது.
  • பசு தானம் செய்பவன் தனது முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாககூறப்பட்டுள்ளது. அந்த வகையில், பசு தானம் முக்கியத்துவம் பெறுகிறது.பசுவை தானம் கொடுப்பவர், பசுவின் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு ஆண்டாக இறந்த பிறகு பல ஆயிரம் வருடங்கள் கோ லோகத்தில் கிருஷ்ண பகவானுடன் சேர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
  • பசு தானத்தால் ஒருவர் தனது முன்ஏழு, பின் ஏழு தலைமுறையினர் மோட்சத்திற்கு போக வழி செய்கிறார். தான் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது. கோ தானத்தை பல காரணங்களுக்காக செய்கிறார்கள்.
  • கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம்செய்து செய்யலாம். யாகம் ஆரம்பிக்கும் பொழுதும், சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம் செய்யலாம். 
  • ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தனக்காக தானே கோ தானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் பிரியும் பொழுது அவருக்காகஉக்ராந்தி கோ தானம் என்று செய்வதுண்டு.
  • ஒருவர் இறந்த 12ம் நாள் வைதரணி என்ற கடுமையான நாற்றம் உள்ள நதியைக் கடக்கவும் கோ தானம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு வைதரணி கோ தானம் என்று பெயர். வைதரணி கோ தானம் செய்வதால் பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு இறந்தவர் நற்கதி அடைவதாக சொல்லப்பட்டுள்ளது. 
  • வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும். பசுக்களை நன்கு படித்த பண்டிதர்களுக்கும், அதைப் பராமரிக்கக்கூடிய சக்தி உள்ளவர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அல்லது, ஆலயங்களில் உள்ள கோ சாலைகளுக்கு பசுவை தானமாகக் கொடுக்கலாம்.
  • அவ்வாறு ஆலயங்களில் பசு தானம் செய்தால் கட்டாயம் அந்தப் பசுவை பராமரிக்க தேவையான நிதியையும் சேர்த்துக் கொடுப்பதே நன்மைதரும்.
  • பெரும்பாலான ஆலயங்களுக்கு பசு தானம் தருபவர்கள் வயதான அல்லது பால் கறவை இல்லாத அல்லது கன்று இல்லாத பசுக்களை தானமாக கொடுத்து விடுகிறார்கள்.
  • பசு தானம் செய்ய எண்ணினால் நல்ல கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவையும், அதற்குத் தேவையான பொருளோ, பணமோ சேர்த்தே கொடுப்பது தான் நல்லது.

பிரம்மஹத்தி தோஷம்

  • பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார். அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்தபிறகு இறைவனே எடுத்துக்கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும்போது, சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா,என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்தபாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி ‘ தோஷம் என்பதாகும்.
  • ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதாபிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே, இராவணனை வதம் செய்தார், ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால், பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார். எனவே, பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் , கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால், அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.
  • ருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். 
  • இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.
  • இதுபோன்ற நிலையில் , பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம். :
சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்தனர்
பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது
வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது.
நாம் வணங்கும் பல இறைவன்கள் அசுரர்களை கொன்றதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து பின் அதற்கு பரிகாரம் தேடியதாக பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரம்மஹத்தி திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்று அதனால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி இத்தலத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.
  
பரிகாரம்-1
  • திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப் புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து, முழங்கால் மேல் முகத்தை வைத்துக் கொண்டு, காத்திருப்பதுதான் பிரம்மஹத்தி.
  • பிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல், மகாலிங்க சுவாமி சன்னதி சென்று நெய் தீபம் ஏற்றி, குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும்.
  • மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடக் கூடாது. காற்று, உப்பு, நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் நீங்கும்.
பரிகாரம்-2
நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
நெய் 1/2 லிட்டர்;
இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்
.
1. பலிபீடம்;
2. கொடிமரம்;
3. கொடிமர நந்தி
4.அதிகார நந்தி;
5. வாயில் கணபதி;
6. துவார பாலகர்;
7.சூரியன், சந்திர பகவான்;
8. சமயக் குரவர்கள்;
9. சப்த கன்னிமார்கள்;
10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
12. சுர தேவர்;
13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;
14. தட்சிணாமுர்த்தி
15. கால பைரவர்;
16. சண்டிகேஸ்வரர்;
17. சனீஸ்வரர்;
18. சிவன் சன்னிதி;
19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.
  இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.
பரிகாரம்-3
தீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ராமேஸ்வரத்தில் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்) 
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

கர்ணன்

  • மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
  • மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
  • பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
  • இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?
  • எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர். விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார். ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
  • நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.
  • இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான். இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே! இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.
  • நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும். கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.
நன்றி : "நாரதர் கதைகள்" ஸ்வாமி ஸ்ரீதானந்தர், இராமகிருஷ்ண மடம்

ஸ்தல விருட்சம்

  • ஸ்தல விருட்சம் என்றால் அங்குதான் சுவாமியே உருவாகியிருப்பார். அந்த ஸ்தலம் உருவாகக் காரணமாக இருப்பதுதான் ஸ்தல விருட்சம். ஒரு சில இடங்களில் கடவுள் சுயம்புவாக இருந்தா‌ர். 
  • ம‌க்களு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌ந்தது. அதன் மீது காராம்பசு பால் சொரிந்தது. அங்கு போய் பார்த்தால் சுயம்பு லிங்கம் இருந்தது. அதன் அருகில் இரு‌க்கு‌ம் மர‌ம் தான் ஸ்தல விருட்சம்.ஸ்தல விருட்சத்தைச் சுற்றினால் கடவுளின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றும் பலன் கிட்டும். 
  • வேதம் அறிந்தவர்கள், முக்கியமான சிலர்தானே கர்ப்பகிரகத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஸ்தல விருட்சத்தை யார் வேண்டுமானாலும் சுற்ற இயலும். .எனவே பல கோயில்களில் ஸ்தல விருட்சத்திற்கு அருகே சித்தர் பீடம் அமைக்கப்பட்டிருக்கும். சித்தர்கள் அமர்ந்திருப்பதாக ஐதீகம். 
  • அங்குள்ள சித்தர்களை வைத்துத்தான் கோயிலின் சுவாமிக்கு சக்தி அதிகரிக்கும். எல்லா இடத்திலும் இறைவன் எப்போதும் இருக்க முடியாது என்பதால், கோயில்களில் சித்தர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களது தவத்தின் வலிமையால் கோயிலின் வலி¨மை கூடும். அவர்கள் தவம் செய்வதே இந்த ஸ்தல விருட்சத்தின் கீழ்தான்.
  • ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்ற நேசன் எதிர் நிற்றல் அறிது என்ற பாடல் உண்டு. அதாவது சிவஞான போதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஈசனையே எதிர்க்கலாம். ஈசனிடம் இருந்து வரம் பெற்று அருள் பாலிக்கும் சித்தர்களை எதிர்க்கக் கூடாது என்பது பொருள்.
  • ஸ்தல விருட்சங்கள் என்பது இறைவனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருவோமே அதை விட அதிக சக்தி வாய்ந்தது ஸ்தல விருட்சமாகும்.ஸ்தல விருட்சத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். ஒரு முறை வந்தாலும் போதுமானதுதான்.

சனி பகவானின் திருவிளையாடல்கள்

  • இக்கதையைப் படிப்பதாலேயே வாசகர்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம்; தீமைகள் விலகலாம். சனி பகவான் நலம் பல நல்க அவரை வேண்டுங்கள்.
  • மன்னன் ஒருவன் தன் நாட்டில் வாழும் பொற்கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களைக் கொடுத்து, ""இதற்கு என்ன விலை கொடுக்கலாம்? மதிப்பு போட்டுச் சொல்லுங்கள்'' என்றான்.
  • அதைப் பெற்றுக்கொண்ட பொற்கொல்லர், ""மன்னா! இவற்றை எடுத்துச் சென்று சோதித்து, மதிப்பு நிர்ணயித்து நாளை வந்து சொல்கிறேன்'' என்று கூறி, ரத்தினங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்தி சாயும் நேரம். அதனால் தன் வீட்டுச் சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில், தன் கையில் இருந்த ரத்தினக் கற்களைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்.
  • விளக்கு மாடச் சுவரின்மேல் ஒரு கொக்கின் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அது அவரது கையிலிருந்த ரத்தினங்களைக் கொத்தி விழுங்கிவிட்டு, மீண்டும் முன் போலவே சித்திரமாக மாறிவிட்டது.
  • இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பொற்கொல்லர் உடனே தன் ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் எடுத்துப் பார்த்தார். அன்று அவருக்கு ஏழரை ஆண்டு சனி ஆரம்பம் என்று தெரிந்தது.
  • நாளை மன்னர் முகத்தில் எப்படி விழிப்பது? நடந்ததைச் சொன்னால் நம்புவாரா என்று யோசித்து, மிகவும் வருந்தி அன்று இரவே காட்டுக்குச் சென்றுவிட்டார்.
  • மறுநாள்... பொற்கொல்லர் மன்னர் கொடுத்த ரத்தினங்களுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று நாட்டு மக்கள் பேசிக் கொண்டனர். இச்செய்தி மன்னனுக்கும் எட்டியது. அந்தப் பொற்கொல்லரின் மனைவி, மகளைக் கைது செய்து சிறையில் அடைத்தான் மன்னன். பொற்கொல்லரைப் பிடிக்க அரச காவலாளிகள் காட்டுக்குள் சென்றனர். ஆனாலும் ஏழரை ஆண்டுகளாக அவரைப் பிடிக்க முடியவில்லை. ஏழரைச் சனி முடியும் வேளை வந்தது.
  • அவ்வளவு காலமும் பசி- பட்டினியுடனும் தாடி- மீசையுடனும் காட்டில் திரிந்ததால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த அந்த பொற்கொல்லர் தன் வீட்டுக்கு வந்தார். குளித்து முடித்து சனி பகவானைத் தியானித்துவிட்டு சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கு சித்திரத்தைப் பார்த்துக் கைநீட்டியபடி, ""சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு'' என்றார்.
  • என்ன ஆச்சரியம்! அந்த சித்திரக் கொக்குக்கு உயிர் வந்து, ரத்தினங்களை அவரது கையில் கக்கிவிட்டு மீண்டும் சுவர் சித்திரமாக மாறியது. அப்போது இரவு சோதனைக்காக மாறுவேடத்தில் அங்கு வந்த மன்னன், மறைவில் நின்று நடந்தவற்றைப் பார்த்தான். உடனே பொற்கொல்லரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதுடன் அவருக்கு தன் நாட்டின் முதலமைச்சர் பதவியும் கொடுத்தான். அவரது மகளையும் மணந்து கொண்டான்.
  • ஏழரைச் சனி ஒருவரை எப்படி யெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை இக்கதை மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். ஏழரை ஆண்டு சனி முடிகின்ற வேளையில்- உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே நற்பலன்களை வாரி வழங்க ஆரம்பித்து விடுவார் சனி பகவான்.
  • இதைத்தான் "சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை; சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை' என்று சொல்லுவார்கள்.இதுதான் சனி பகவானின் மகத்துவம்!

Wednesday, 2 November 2016

திருவிளக்கு பூஜை

  •  இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். 

விளக்குபூஜை எப்போது ?

பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன

சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் உண்டாகும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
 
விளக்கு பூஜையின்போது கவனிக்கவேண்டியவை
  

ராஜயோகம் தரும் வழிபாடு: வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும்.

திரிகளும், பயன்களும்:

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
  • பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
  • வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
  • தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
  • வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
  • புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
  • சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
  • வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.

கணபதி பாடல்:
விளக்கு துதிப்பாடல் பாடுவதற்கு முன்பு மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரை கீழ்க்கண்ட பாடலைப்பாடி பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.
எண்ணெயும் பலன்களும்:
குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும்.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.

விளக்கேற்றும் பலன்கள்:
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய்:
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
விளக்கேற்றும் திசைகள்:
கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

விளக்கு துலக்கும் பலன்கள்:

  • ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கு துலக்கி தீபமேற்றினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும், பார்வை பிரகாசமடையும்.
  • திங்களன்று விளக்கு துலக்கினால் மனசஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கி மனதில் அமைதி ஏற்படும். தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும்.
  • வியாழக்கிழமை துலக்கினால் குருபார்வை கிடைத்து கோடி நன்மைகள் உண்டாகும், கவலைகள் நீங்கி மனம் நிம்மதியடையும்.
  • சனிக்கிழமையன்று விளக்கை கழுவினால் வாகனங்களில் பாதுகாப்பான பயணம் கிட்டும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்:
  • குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.
  • திங்கள் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி குளிர வைத்த பிறகு (சுமார் இரவு 9 - 9.30 மணிக்குள்) விளக்கை துலக்குவது நல்லது. வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநதியட்சணி குடியேறுகிறாள். எனவே விளக்குகளை திங்கள் மற்றும் வியாழன் முன்னிரவிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் துலக்குவதே நல்லது.

Tuesday, 1 November 2016

Attention to All Devodees....

Dear Viewers,

Warm Greetings to All.

Interesting information and your valuable feedback  if you want to share with all then please send it to cityarun@gmail.com to publish in cityxerox.in which will reach to all our viewers.

With Regards...
Arun
India

திருநீறு

 
    நீறில்லா நெற்றி பாழ்
என்கிறாள் அவ்வைப்பாட்டி

 "மந்திரமாவது நீறு' என்று திருநீற்றின் 
மந்திரத்தன்மையைப் போற்றுகிறார் ஞானசம்பந்தர்

  •  திருநீறுக்கு விபூதி என்ற பெயர் உண்டு. இதற்கு "மேலான செல்வம்' என்பது பொருள். குளித்தவுடன் தலையில் இருக்கும் நீரைப் போக்கி தலைவலி, ஜலதோஷத்தை தடுக்கும் தன்மை விபூதிக்கு உண்டு. 

  • கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி நின்று திருநீறு பூசுவது உசிதம். காலை, மாலை, சாப்பாட்டிற்கு முன், கோயிலுக்குச் செல்லும்நேரங்களில் விபூதி பூசுவது அவசியம். 
  • கையில் எடுக்கும் போது, சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெற்றியை சற்று உயர்த்தி, "சிவசிவ' "முருகா' என்று மந்திரம் ஜெபித்தபடியே பூசவேண்டும். "நீறு நிறைஞ்சிருந்தா நெற்றிக்கழகு' என்பதை இளையதலைமுறையினர் உணர்வது அவசியம்.
  
திருநீறு பூசும்போது கடைபிடிக்கவேண்டியது
1. வெள்ளை நிற விபூதி மட்டும் அணிய வேண்டும் 
  2.முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும் 
  3.வடக்கு கிழக்குமுகமாக நின்று பூசவேண்டும் 
  4.நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது 
  5.நித்திரைக்கு முன்னும் பின்னும் குளித்த உடனும் சூரிய உதய அஸ்தமனத்தின் போதும் உணவுக்கு முன்னும் பின்னும் பூசைக்கு முன்னும் பின்னும் மல சல காரியங்களுக்கு பின்னும் பூச வேண்டும் 
  6.ஆசாரியர் சிவனடியார் இவர்களிடம் விபூதி பெரும் போது அவர்களை வணங்கி பெறுதல் வேண்டும் 
  7.நந்தி முத்திரை (ம்ருகீ முத்திரை )யால் மட்டுமே எடுக்க வேண்டும்
  
8.அணியும் போது ஐந்தெழுத்து மந்திரம் கூறி அணியவேண்டும்


திருநீற்றுக்காகவே இரண்டு நாயன்மார்கள் தங்கள் உயிரை துறந்தவர்கள்
 
              ஒருவர் ஏனாதி நாயனார், மற்றொருவர் மெய்ப்பொருள் நாயனார்
 

  • எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாத அரசியல் கட்சி சின்னங்களையும் கட்சித்  தலைவனின் படத்தையும் கூசாமல் அணியும் மனிதவர்க்கமே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் திருநீற்றை அணிந்து பேறு பெறுவோம். சிவசின்னங்களை  அணிய நாம் கூச்சப்பட்டால் சிவபெருமான் நம்மைப்பார்க்க கூசுவார்.திருநீறணிந்தால் எல்லா வளமும் நலமும் ஒருங்கே கிடைக்கும் .சிவசின்னம் அணிந்து சிவவேடம் என்பது சிவபெருமானால் மட்டுமே அருளமுடியும் .அந்த கொடுப்பினை எல்லோர்க்கும் கிடைக்க எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிவாராக
                       
எனவே தினமும் திருநீறு பூசி திருநீற்றுப்பதிகம் பாடினால் நம் வினைப்பயன் அழியும் என்பது கண்கூடாக பலபேர் அனுபவித்த உண்மை 

போற்றி  ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் 

ஹயக்ரீவர்


 
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க அருள்பவர் ஹயக்ரீவ மூர்த்தி. இவரை வழிபட்டால் கிரகிப்புத்திறனும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும். சரஸ்வதிதேவிக்கு வித்தைகளை உபதேசித்தவர் இவர்
  • வேதங்களை திருடிச் சென்ற மதுகைடபர்களை அழித்து, பிரம்மாவிடம் அவற்றை ஒப்படைத்தவர். திருமால் தான் எடுத்த தசாவதாரங்களுக்கு முன்பே ஹயக்ரீவ அவதாரம் எடுத்ததாகச் சொல்வர்.
  • குதிரைமுகம் கொண்ட இவர் யோகநிலையில் தனித்தும், லட்சுமிதேவியோடு சேர்ந்தும் அருள்புரிகிறார். திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும்
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]