Search This Blog

Friday, 9 September 2016

அருள்மிகு ஸ்ரீ வீர ராகவ சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்.


மூலவர் : எவ்வுள்கிடந்தான் 
பெருமாள் : வீரராகவர் 
தாயார் : கனகவல்லி 
தீர்த்தம் : ஹிருதாபதணி
  •  3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும்.குறிப்பாக வயிற்று வலி கைகால் வியாதி.காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது.
  • நேர்த்தி கடன் பப்ளி துப்பட்டி.மேல் வஸ்திரம் அங்கி வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி  எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300.உருவத்தகடுகளை வௌ஢ளி தங்கம் செய்து போடுதல்.தவிர பெருமாளுக்கு அபிசேகம் ஆராதனை செய்தல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.
  • உடம்பில் உள்ள மரு கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால் வௌ஢ளம் ஆகியவற்றை பக்தரகள் கரைக்கிறார்கள்.கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்பிக்கின்றனர்.
  • தலபெருமைகள் தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம் இத்தலத்து குளம் தீர்த்தம் கங்கையை விட புனிதமானது ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம் மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது.
  • மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிசேகம் சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார்.லட்சுமி நரசிம்மர் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் இத்தலத்தில் மிகவும் விசேசம் மிகவும் பழமையான தலம் இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
பொது தகவல்கள்:
  • பாடல் பாடியோர் இத்தலத்தை திருமழிசைபிரான் திருமங்கைஆழ்வார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
தல வரலாறு :
  • சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார்.முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார்.மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார்.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]