Search This Blog

Tuesday, 14 March 2017

கும்பகர்ணன் பெற்ற வரம்!


  • இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும்ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ?அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம்.நான்முகனை நோக்கி தவம் இருக்கிறான் கும்பகர்ணன்.
  • இதைக் கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்குஉருவத்தில் பெரியவனான கும்ப கர்ணன் எதாவது வரம்பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம்கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.
  • “பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார் நான்முகன்.அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப்பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.
  • நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள். நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில்அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன் அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால் எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம்,ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால்மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]