- கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம்
வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர்
". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப்
பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான "அப்பூதி அடிகளார் "
வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன்,
கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ
பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட
இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி
வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு
அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது
ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ
திடத்துடன் இருப்பார். இவரது நீச்சம் மன நோய் தரும். சந்திரனது
ஆதிக்கத்தால் மனித உடலில் மூளை, வயிறு, மார்பு போன்ற உறுப்புகள்
பாதிப்படையும்.
- நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரகன். காலரா, பாலியல் தொடர்பான நோய்கள், நுரையீரல் நோய்கள் ஆகியன இவரது நீச்சத்தால் உண்டாவன. நீர் உணவுகள், தேன், மது, உறக்கம், குதிரை, மாறு கண், காச நோய், மலர்கள், வெண்ணெய் போன்றவற்றின் காரணகர்த்தா. வெண்மை நிற மலர்களால் அர்சிப்பதாலும், வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி கொள்வதாலும், முத்து மாலை அணிவதாலும், பௌர்ணமி விரதம் இருப்பதாலும், அரிசி தானம் செய்வதாலும் சந்திர கிரக தோஷங்கள் விலகுகின்றன.
சந்திர தோஷம் அகல
- ஈய உலோகத்தால் சந்திர பகவானின் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான வெண்ணிற மலர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். திங்கட் கிழமைகள் தோறும் விரதம் இருக்க வேண்டும். சந்திரரை வெண்ணிற ஆடைகளால் அலங்காரம் செய்யலாம். முருங்கை சமித்து கொண்டு தூபமிட்டும் தீபம் எற்றியும் வழிபட வேண்டும். சிவன் கோயில் சென்று அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.
திருநாவுக்கரசரும், அப்பூதி அடிகளும்
- திருநாவுக்கரசர் ஒரு சமயம் உழவாரப் பணி செய்ய திங்களூர் சென்றிருந்தார். அச் சமயம் அங்கு அப்பூதி அடிகள் என்பவர், நாவுககரசர் பெயராலே பல தர்ம காரியங்களை செய்து வருவதைக் கண்டு அவர் இல்லம் சென்றார். நாவுக்கரசரை கண்ட அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார். தனது மகனை வாழை இலை பறிக்க தோட்டத்திற்கு அனுப்ப, அங்கு அந்த சிறுவனை பாம்பு தீண்ட உயிரிழந்தான். இச் செய்தியை அறிந்தால் எங்கே நாவுக்கரசர் விருந்து உண்ண மாட்டாரோ என்றெண்ணிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது படைத்தார். இதனை அறிந்த நாவுக்கரசர், இறந்த அப்பூதி அடிகளின் மகனை இத் திருத் தலத்திற்கு எடுத்து சென்று, "ஒன்று கொலாம் அவர் சிந்தை" எனத் தொடங்கும் பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். இத் தகைய பெரும் பேறு பெற்ற தலம் இது.
- மக்களின் மூச்சுக் காற்றில் சந்திரன் இட கலை ஆனவர். சந்திரன் சூரியனிடம் இருந்து முழுவதும் பிரிந்திருக்கும் நாள் பௌர்ணமி. சந்திரனை ராகு அல்லது கேது பற்றும் நாள் சந்திர கிரகணம். இது பௌர்ணமி தினங்களில் நடைபெறும். வலக் கையில் கதையும், இடக் கையில் வரதமும் கொண்டு காட்சி தருபவர். வெள்ளாடை உடுத்தி, முத்து மாலை, வெண் சந்தனம், பன்னிற மலர் மாலைகள் அணிந்து காட்சி தருபவர். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத் திருத் தலம் வந்து கைலாச நாதரையும், பெரியநாயகி அம்பாளையும், பின்னர் சந்திர பகவானையும் தரிசிக்க தோஷ நிவர்த்தி பெறலாம். இன்றும் ஆண்டுதோறும் பங்குனி உத்திர காலை 06:00 சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீதும், மறுநாள் பிரதமை திதியில் மாலை 06.30 மணியளவில் சந்திர ஒளி சிவலிங்கத்தின் மீதும் படுவது மிகச் சிறப்பு.
சந்திர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும் | |||
ராசி
|
கடகம் | திக்கு | தென்கிழக்கு |
அதி தேவதை
|
நீர் | ப்ரத்யதி தேவதை | கௌரி |
தலம்
|
திருப்பதி, திங்களூர் | வாகனம் | வெள்ளை குதிரை |
நிறம்
|
வெண்மை | உலோகம் | ஈயம் |
தானியம்
|
நெல், பச்சரிசி | மலர் | வெள்ளை அலரி, அல்லி |
வஸ்திரம்
|
வெள்ளை ஆடைகள் | ரத்தினம் | முத்து |
நைவேத்யம்
|
தயிர் அன்னம் | சமித்து | ருக்கஞ்சமித்து |
No comments:
Post a Comment