ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன்
வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று கேட்டார்.
மாணவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.
சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம், பாக்கு, வெற்றிலைத் தட்டில் இருந்த
வெற்றிலையைக் காட்டி,""இதன் பெயர் என்ன?'' என்று கேட்டார். மாணவனும்
"வெற்றிலை' என்றான்.
"அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?'' என்று கேட்டார். மாணவன் திகைத்தான், மற்றவர்களும் விழித்தார்கள்.
மகா சுவாமிகள் கூறினார்,"எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும்,
ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை
மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று'' என்று கூறினார்
வெற்றிலை யார் தின்றாலும்
அவர்களுக்கு ஞானம் வராது , மூதேவி என்னும் வறுமையே உண்டாகும், ஏனெனில்
காம்பு பகுதி மூதேவிக்கு உரிய பாகமாகும், யாரிடம் என்ன இருக்கிறதோ
அதைத்தான் கொடுப்பார்கள் அல்லவா, எனவே வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை
அடியோடு கிள்ளி எரிந்து விட்டு சாப்பிடவும்.
மேலும் முனை ஒடிந்த வெற்றிலை
சாப்பிட்டாலும் பலன் இல்லை , காரணம் வெற்றிலை முனையில் ஸ்ரீதேவி
குடிகொண்டிருப்பார், அவரை நீக்கி சாப்பிட்டால் செல்வ வளம் சேராது ,
பூஜைக்கு வெற்றிலை வைக்கும் போது முனை ஒடியாத அழகல் . சொத்தை இல்லாத ஓட்டை
இல்லாத வெற்றிலையே படையலுக்கு சிறந்தது , வெற்றிலை கிழந்தோ. காய்ந்தோ
இருந்தால் கூட படையலுக்கு உதவாது , வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு
தேவதை வாழ்கிறார்கள், எனவே வெற்றிலையின் எந்த பகுதி
பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாக தேவதை பாதிக்கப்படும், பின்பு அருள்
கிடைக்காது.
No comments:
Post a Comment