Search This Blog

Saturday, 24 September 2016

சுக்ரன் ஸ்தலம் :::: கஞ்சனூர் சுக்கிர பகவான் கோயில்


  • சூரியனார் கோயிலுக்கு வடகிழக்கே சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில்லுள்ளது கஞ்சனூர் எனும் திருத்தலம். தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கல்லணை-பூம்புதார் சாலையில் உள்ள இந்த சைவ ஸ்தலத்தில் ஸ்ரீ அக்னீஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு துணையாக கற்பகாம்பாள் என்ற பெயரில் தாயாரும் வீற்றிருக்கிறார். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் அக்னீஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமானை தான் செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வழங்கும் நவக்கிரகங்களிலொருவரான சுக்கிர பகவானாக பக்தர்கள் வழிபடுகின்றனர். 
  • எப்படி காளஹஸ்த்தியில் சிவபெருமானை இராகு மற்றும் கேது கிரகங்களாக கருதி வழிபடுகின்றனரோ, எப்படி மதுரையில் வீற்றிருக்கும் ஸோமசுந்தரேசுவரரை புத பகவானாக கருதி வழிபடுகின்றனரோ, அப்படியே இங்கும் அக்னீசுவரரை சுக்கிர பகவானாக வழிபடுகின்றனர். ஆக, இது ஒரு நவக்கிரக ச்தலமாகவே கருதப்படுகிறது.
  • இங்குள்ள இரு தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம் என்றும் மற்றொன்று பராசர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. அப்பரால் பாடப்பட்ட இந்த பழம் பெரும் கோயில் சாலையோரமாகவே உள்ளது. ஐந்து கட்டுக்களையுடையது இக்கோயிலின் கோபுரம்.
  • சுக்கிர பகவானுக்குரிய தானியம், வாகனம் முதலிய தகவல் கீழே தரப்பட்டுள்ளன.
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
கிழமை: வெள்ளி
இரத்தினம்: வைரம்
பலன்கள்: விவாக பிராப்தம், சௌபாக்கியம், மலட்டுத்தன்மை நீங்குதல்
  • பிரம்மாவின் மானசீக புத்திரராக கருதப்படும் பிருகு முனிவருக்கு பிறந்தவர் தான் சுக்கிர பகவான். இவர் காசிக்கு சென்று அங்கு ஒரு சிவலிங்கத்தை படைத்தது, நீண்டகாலம் தியானம் செய்ததன் விளைவாக சிவ பெருமானின் அருளால் அமிருத சஞ்சீவினி மந்திரத்தை கற்று இறந்தவரை உயிர்பிக்க செய்தமையால் அசுரர்களால் குருவாக போற்றப்பட்டார். சுக்கிரரின் பக்தியால் நெகிழ்ந்த சிவபெருமான் இவரை நவக்கிரகங்களில் ஒருவராக செய்தார்.
  • புராணங்களின் படி மகா விஷ்ணு வாமன அவதாரத்தின் பொழுது மகா பலியிடம் மூன்று அடி மண்ணை கேட்டுப் பெறும் தருவாயில், வாமன உருவில் இருப்பது இன்னார் என்பதை அறிந்துகொண்டு, வாமனருக்கு தானம் அளிக்கும் பொருட்டு மகா பலி கமண்டலத்திலிருந்து ஜலத்தை எடுக்கும் தருணத்தில் இந்த தானத்தை நிறுத்துவதற்காக தன்னை ஒரு வண்டாக உருமாற்றி கமண்டலத்தின் நீர் வரும் துவாரத்தை அடித்தவர் தான் சுக்கிரர். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் எனும் சுக்கிரனுக்கு ஒரு கண் ஊனமாவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு காரணமாக அமைந்தது என்பதும் புராணங்களில் இருந்து நாம் அறிகிறோம்.
  • தானத்தை தடை செய்ய சுக்கிரர் செய்யும் முயற்சியை தனது ஞான திரிஷ்ட்டியால் உணர்ந்த பெருமாள், தரப்பை ஒன்றால் கமண்டலத்தின் துவாரத்தில் குத்த, அது சுக்கிரரின் கண்ணை ஊனமாக்கி விடுகிறது. சுக்கிர பகவான் வேலையில்லா திண்டாட்டத்தில் அவதியுறுபவர்களுக்கு வேலை கிடைக்கும்படி அருள்வதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]