Search This Blog

Wednesday, 19 September 2018

சகட தோஷம் விலக


  • சந்திரனுக்கு 6-8-12-ல் குருவீற்றிருக்கப் பெற்ற ஜாதகர்களுக்கு சகடயோகம் உண்டாகிறது. இவர்கள் நிலையான வாழ்வு வாழ்வதில்லை. மேடு பள்ளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

  • இத்தகைய ஜாதக அமைப்புப் பெற்றவர்கள் ராஜராஜேஸ்வரி யந்திரம் வாங்கி பூஜை செய்யலாம்.அல்லது யானைமுடி மோதிரம் அணியலாம். இதனால் இத்தோஷம் நீங்கி வளம் பெறலாம்.

சகட தோஷம் விலக எளிய பரிகாரம்

  • சிலரது  வாழ்க்கையில்  காரியத்தைச் செய்ய முற்பட்டவுடன்  கைகூடாது. முயற்சி திருவினையாக்கும் என்ற  தத்துவத்தை மனதில் கொண்டு, ஒன்றுக்கு மூன்று முறை முயற்சி செய்து அந்த முயற்சியால் மட்டுமே வெற்றி இலக்கை அடைவார்கள். மனதில் உறுதி எல்லாருக்கும் அமைவதில்லை.  ஒரு சிலருக்கு மட்டுமே வரும்.  
  • எல்லா காரியமும் முதலில் முடங்கி பிறகு முயற்சிக்குத் தக்கபடி தான் வெற்றி கிடைக்கிறது..என்றால்  அவர்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-ல் சந்திரன் இருந்தாலும்,  அல்லது குரு பகவான் நின்ற ராசிக்கு  6,8,12-ஆம்  இடங்களில் சந்திர  பகவான் அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகர் சகட  தோஷத்தை அடைகிறார். லக்னத்துக்கு 6-ல் சந்திரன்  நின்று வெகு ஜனங்களை இரட்சிப்பவராக  இருந்தாலும் அவரது வாழ்க்கையில் முழுமையான தோல்விகளையே  தருவார்.  அதனை அடுத்து பிறந்தது முதல் பெரியவர்கள் ஆனபின்பும், கஷ்டத்தையும், தோல்வியையுமே சந்தித்து வருபவர்கள்  உங்களது  ஜாதகத்தில் மேற்கண்டவாறு சந்திர பகவான் அம்ர்ந்துள்ளாரா என்பதை நீங்களே  தெளிவுபடுத்திக் கொள்ளலாம். நிச்சயமாக உங்கள் ஜாதகம் மேற்கண்டவாறு தான் அமையக்கூடும். உங்களுக்கு  உங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்யத் தெரியவில்லை என்றால், அருகில் உள்ள நல்ல ஜோதிடரிடம் காட்டி தெரிந்து கொள்ளுங்கள். சகட தோஷத்துடன் கூடிய ஜாதகம் அமையப் பெற்றவர்கள் கீழ்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து இனிவரும் காலத்தை வளமாக்கலாம்.

  •  எளிய பரிகாரம்-1
  • சகட தோஷம் உள்ளவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை வெற்றியாக மாற்றித் தரும்  சர்வ வல்லமை படைத்தவர் எம்பெருமான் சிவபெருமான் ஒருவரே ஒருவரே, சிவலிங்க பூஜையால் கண்ணப்பர் முக்தி அடைந்தார்).சிவலிங்க பூஜை செய்த மார்க்கண்டேயன் நீண்ட ஆயுளை பெற்று தலைசிறந்த மாமுனிவராக வாழ்ந்தார்.
  • சிவலிங்க பூஜையால் வெள்ளை யானையும், சிலந்தியும், முக்தி நிலை பெற்றன. வெள்ளை   யானைக்கு சிவபதமும், சிலந்திக்கு அரசாளும் பாக்கியமும் கிடைத்தது. மேலும் சிவகணத் தலைவர்களாய் எம்பெருமான் சிவபெருமானுக்கு திருத்தொண்டுகள் புரிந்து வருகின்றனர். எனவே யார் ஒருவர் காலை எழுந்தவுடன் தினசரி ‘ஓம் நமசிவாய நமக’ என்று 108 முறை சொல்கிறார்களோ அல்லது குறைந்தது ஒன்பது முறையாவது சொல்கிறார்களோ அவர்களுக்கு பிறப்பில் ஜாதகத்தின் வாயிலாக ஏற்பட்ட சகட தோஷம் விலகும்.  சகட தோஷம் விலகி  சகட யோகமாக மாறும்.
  • எளிய பரிகாரம்-2
  • காலை எழுந்தவுடன் ‘ஓம் நமசிவாய நமக’ என்று 108 முறை வாழ்நாள் முழுவதும் சொல்ல முடியாதவர்கள் பச்சரிசி  தவிடு மூன்றுபடி  எடுத்து அதனை உங்கள் அருகில் உள்ள பசு மாட்டிற்கு ஒன்பது நாட்களுக்கு கொடுத்து அந்தப் பசுவை வணங்கி வருவார்களேயானால் அவர்களுக்கு சகட தோஷம் விலகி வாழ்வில் தோல்விகள் ஏற்ப்டாது.(அனுபவத்தில் கண்ட உண்மை.).

Friday, 14 September 2018

சண்டிகேஸ்வரர் சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்!!! உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா?

  • சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.
  • பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.
  • ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.
  • அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
  • அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.
  • அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.
  • இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.
  • சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம். சிவ ஆலங்களில் சண்டீகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்
  • மேலும் சண்டீகேஸ்வரர் சிவபக்தர் மட்டும் இல்லை சிவனின் சொத்துகளை பாதுகப்பவர் எனவே சிவஆலயங்களை விட்டு செல்லும் முன் சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து ,சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டீகேஸ்வரர் தியானம்கலையாமல் செய்யவேண்டும் இதுவே மறையாகும்.
  • சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை…
    “ *ஓம் நமசிவாய* “

செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை!!!

  • இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
 
  • பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். 
 
  • நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

  • ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
  • தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி – அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

  • மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
 
  • பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும். 
 
  • பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
  • மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
  • குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

  • கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
  • பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
  • வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
 
  • முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே. 
 
  • சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

  • முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
  • எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை  கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.
  • விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
  • அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.
  • பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்

Saturday, 8 September 2018

என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும்

தார்த்த குண சிந்தாமணி எனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வைத்திய நூல் என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் மற்றும் குணநலன் எப்படி மாறும் என விளக்கி உள்ளது.

உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகரிக்கும்...புளி அதிகமானால் பொறாமை குணம் அதிகரிக்கும்.தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் உண்டகும்.மாமிசம் அதிகம் உண்டால் காம உணர்வை அடக்க முடியாது.காரம் அதிகமானால் கோபம் அதிகரிக்கும்.பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்.கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்.இவற்றை சமமாக எடுத்துக்கொண்டால் பக்குவமாக வாழ முடியும்!!

நவகிரக தோசம் போக்கும் முறை

ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும் வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் ,தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர்.அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.இதன் மூலம் நவகிரக தோசங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலாம்

கடன் சுமை நீக்கும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை

  • திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. 
 
  • மகரிஷி மோட்ச தலம் :மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.
 
  • ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
 
  • இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
 
  • பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey; border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s; -moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]