தலச்சிறப்பு :
- இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டின் சிறப்புகள் என்று எத்தனையோ இருந்தாலும் அதில் முதலிடம் பிடிப்பது தமிழ் கடவுள் முருகன் தான். ராமன் எத்தனை ராமனடி என திரைப்படப் பாடல் இருக்கிறது அதுப் போல முருகன் எத்தனை முருகனடி என்றே பாடலாம். தமிழ்நாட்டில் அத்தனை முருகன் பெயர்கள் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் கடைப் பெயர்களை கவனித்துக் கொண்டு வந்தால் முருகனுக்குத் தான் எத்தனை பெயர்கள் என பிரமிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் அறுபடைவீடுகள் இருப்பது மட்டுமின்றி நிறைய பிரபலமான முருகன் கோயில்கள் இருக்கிறது. அதில் ஒன்று வடபழனி முருகன் கோயில்.
- இது 125 ஆண்டுகளுக்கு கீற்று கொட்டகையாய் தனிப்பட்ட வழிப்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் இன்று உலகெங்கும் பிரசித்தமான கோயிலாக உள்ளது. அண்ணாசாமி தம்பிரான் எனும் முருக பக்தர் தான் வழிப்படுவதற்காக என சிறிதளவே முதல் போட்டு சிறுக் குடிசையாய் வடபழனி முருகன் கோயிலைக் கட்டினார். அதில் முருகன் திருவுருவ ஓவியத்தையே வைத்து வழிப்பட்டார். சில நாட்களில் அவர் அங்கே தியானம் செய்யும்போது ஏதோ ஒரு தெய்வீக சக்தி அவருள் புகுவது போல உணர்ந்து ஏதேதோ கூற ஆரம்பித்துவிட்டார். அப்படி அவர் கூறும் அனைத்தும் உண்மையில் நடக்க ஆரம்பித்து மக்களின் பல குறைகள் தீர ஆரம்பித்துவிட்டது. அதனால் அருள்வாக்கு கூறுவதில் அவர் பிரபலமாகிவிட்டார்.
- சில நாட்களில் அவர் நோய் வாய்ப்பட்டார். அப்பொழுது ஒரு சாதுவின் அறிவுரைப்படி திருத்தணி முருகனை வழிப்படச் சென்றார். அவ்விடத்தில் அவர் முருகனுக்கு காணிக்கையாக தனது நாக்கை சிறுக்கத்தியால் துண்டித்து பலிப்பீடத்தில் போட்டார். அவர் வடபழனிக்கு திரும்பி வந்ததும் அவருக்கு வந்த நோய் வந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. இறைப்பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த அவர் தனது கடைசிக்காலம் நெருங்குவதை உணர்ந்து அவரது தோழன் ரத்னசாமியை தனது இறைப்பணியை தொடர்ந்து செய்யுமாறுக் கேட்டுக்கொண்டார். அவர் முருகனுக்கு சிறு சன்னதி அமைத்து பூஜை செய்ய ஆரம்பித்ததும் அவருக்குள்ளும் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்து அவரும் அருள்வாக்கு கூற துவங்கிவிட்டார்.
- முருகனுக்கு கோயில் கட்ட மக்களிடமிருந்து நிதி குவிய ஆரம்பித்துவிட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரத்னசாமியும் இறந்துவிட்டார். அவருக்கு பின்னர் பூஜை செய்ய ஆரம்பித்தவர்களும் தங்களது முன்னோர்களைப் போலவே அருள்வாக்கு கூறும் சக்தியைப் பெற்றனர். ஆனால் திருக்கோயில் பணி நிறைப்பெறும் முன்னரே அவர்களும் இறக்க நேரிட்டது.
- பின்னர் முருக பக்தர் கிருபானந்த வாரியாரால் இத்திருக்கோயில் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவர் திருவுருவம் எல்லாவகையிலும் பழனியாண்டவரை ஒத்திருக்கும். இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகர் சன்னதி, அன்னை பார்வதி, வரசித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி என பல தனிச் சன்னதிகள் உண்டு.
🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:
Post a Comment